.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, February 28, 2006

பூப்பறிக்க வருகிறோம் - 2வது சுற்று முடிவுகள்

Your Ad Here

தாமரை அணி:

http://chennaicutchery.blogspot.com/2006/02/2_28.html
தேவ் ஒற்றையாய்த் தயாரித்த விளம்பரம். சில டச்-அப் கிராஃபிக்ஸ் வேலைகளோட ஆங்கிலத்தில 4 வரி கவிதையும் எழுதிருந்தார். ரொம்ப சிம்பிளா போயிருச்சி
சாதகம்:
தேவின் முயற்சி

பாதகம்:
ரொம்ப எளிமையாகப் போய்விட்டது

ரோஜா (பா.நா.த):
http://elavasam.blogspot.com/2006/02/2.html

கொத்தனாரும் செல்வனை மாதிரி பாட்டு போட்ருக்காரு. அவங்களுக்கு சொன்ன அதே கமென்ட் தான் இங்கேயும் - விஷுவல் வேணும். ரஜினி பாட்டு மட்டும் போட்டா தமிழ்நாட்ல வேணா ஓட்டு விழலாம், சாமி. ஜூலாவுக்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டாமா?

சாதகம்:
???

பாதகம்:
க்ரியேடிவிடி கம்மியா இருந்திச்சு. அவசரப்பட்டுட்டீங்களோ?

மல்லிகை:
http://dharumi.weblogs.us/2006/02/28/192

இவங்களோட விளம்பரம் பாட்டும் கிராஃபிக்ஸும் கலந்து இருந்தது. செல்வனோட பாட்டு சுமார்தான். ஆனாலும் தருமியோட கிராஃபிக்ஸ் ஆகா ரகம். ஒரு வித ஒரிஜினாலிடி இருந்தது. வாழ்த்துக்கள்.

சாதகங்கள்:

தருமியோட கிராஃபிக்ஸ்
செல்வனுடைய நகைச்சுவை

பாதகங்கள்:

விளம்பரம் என்ற கான்செப்ட் இல்லாமல் போனது -ஜூலா கிரகத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியுமா நகைச்சுவையை ரசிக்க? தமிழ் தெரியும் என்ற ஊகத்தை விட கண்தெரியும் என்ற ஊகத்துக்கு வலு இருந்திருக்கும். அதனால் விளம்பரம் விஷுவலாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தருமி விஷுவல் தர முயன்றிருந்தாலும் அது ரஜினியின் ஜூலா கிரக பிரதாபங்களைப் பற்றியதாக இருந்ததெ தவிர அவர்களை வசீகரிக்க ஷங்கர் குழு என்ன செய்ய வேண்டும் என்ற உத்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

சாமந்தி:


http://thaamiraparani.blogspot.com
விளம்பரம்னா என்னன்னு இந்த அணிக்குத்தான் தெரிஞ்சிருக்கு. கிராஃபிக்ஸ் போடலை, பாட்டு போடலை ஆனா எல்லாத்தையும் எப்படி செய்யணும்னு விளக்கமா எழுதிட்டாங்க. Ad conceptனா இதுதான். ஒரு இயக்குநர் இதைத்தான் எதிர்பார்ப்பார். நிதானமா நம்ம டிராவிட் மாதிரி ஆடினாங்க சாமந்தி அணி. வெரி ப்ரொஃபஷனல்!

சாதகம்:

அருமையான விவரிப்பு. அதைப் படிக்கும்போதே விஷுவல் எஃபக்ட் இருந்தது. (வெல் டன்!)

விளம்பர உத்தி அருமை - கொலோசியம் போல ஆடிட்டோரியம்... நடுவில் லேசர் மாடல் என்பதெல்லாம் நல்ல உத்திகள்

ஓபனிங்க் சூப்பர்ப். ஜூலியன்களுக்கு பூமியைப் பற்றி ஒரு முன்னோட்டம் குடுத்தது நல்ல டெக்னிக்

ரஜினியின் பல கெட்டப்களோடு இசையும் கலந்த இன்ட்ரோ நல்ல ஐடியா. ஏன்னா ஜூலியன்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ. ஆனா இப்படி ஒலி ஒளில அவங்க கவனதைக் கவர்றதுதான் சரியான வழி

Closing-ம் almost perfect. குழு மொத்தமும் சேர்ந்து அனுமதி கேக்கறது நல்லா இருக்கு. ஆனா கையேந்தி கேட்ருக்க வேண்டாம். அது கொஞ்சம் நாடகத்தனமா இருக்கு

பாதகம்:
ரஜினிக்கு 5 நிமிஷம் டயலாக் டூ மச். விளம்பரம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா இருக்கணும்
பின்குறிப்பு நகைச்சுவையா இருந்தாலும் ஆவங்களோட கான்செப்ட் மேல ஒரு நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கற மாதிரி போயிடுச்சி. அதைத் தவிர்த்திருக்கலாம்


நிலா குழுவின் தீர்ப்பு:

தாமரை அணி - முடிஞ்சவரை முயன்றார் தேவ்.
ரோஜா அணி - ஒட்டு மொத்த ஏமாற்றம்!
மல்லிகை அணி - இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்
சாமந்தி அணி - எதிர்ப்பேதுமின்றி இந்த சுற்றில் வென்று 25 மதிப்பெண்கள் பெறுகிறார்கள்

சாமந்திக்கு வாழ்த்துக்கள். (எப்படிங்க, சேந்து ஒரு விளம்பர ஏஜென்ஸி ஆரம்பிச்சுடலாமா?)

பி.கு:

பார்வையாளர்களில் கைப்புவும் மதுமிதாவும் கலந்து கொண்டார்கள். பெனாத்தல் சுரேஷ் இன்று வரை கால அவகாசம் கேட்டிருக்கிறார். அவருடைய பதிவு வந்ததும் பார்வையாளர்களின் சிறந்த விளம்பரம் தேர்ந்தெடுக்கப்படும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At March 01, 2006 9:14 AM, Blogger நிலா said...

மக்களே,

என்ன தீர்ப்பு பற்றி மூச்சே விடக் காணோம்?

 
At March 01, 2006 5:22 PM, Blogger குமரன் (Kumaran) said...

தீர்ப்பு பத்தி என்னத்த சொல்ல? அதான் தெளிவா ஆப்படிச்சுட்டீங்களே....:-( (ச்ச்சும்மாமா) :-)

//க்ரியேடிவிடி கம்மியா இருந்திச்சு. அவசரப்பட்டுட்டீங்களோ?
//

ஆமாம். கொஞ்சம் அவசரமாத் தான் போட்டுட்டோம். கொத்தனார் எத்தனையோ தடவை சொன்னார்...கொஞ்சம் காத்திருக்கலாம். பெட்டர் யோசனை வரலாம்ன்னு. நான் தான் இதுக்கு மேல எனக்கு வராது. உங்களுக்கு வந்தா சரி. இல்லாட்டி இப்பவே போடலாம்ன்னு கொஞ்சம் அவசரப்படுத்திட்டேன். :-(

 
At March 02, 2006 4:03 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நமக்கு வரலைன்னாலும், அடுத்தவங்க போடறதைப் பார்த்து இன்ஸ்பையர் ஆயிருக்கலாம். ஹூம்..

 
At March 02, 2006 5:10 AM, Blogger நிலா said...

கொத்ஸ்

உங்க அணிக்கு க்ரியேடிவிடி இருக்கு. ஆர்வக் கோளாறுனால அவசரப்பட்டுட்டீங்க

 
At March 02, 2006 5:15 AM, Blogger நிலா said...

பார்வையாளர்கள் பிரிவில கலந்துக்க விரும்பிய சுரேஷ் வராததால் போட்டி கைப்புவுக்கும் மதுவுக்கும் என்றாகிவிட்டது. கைப்பு விஷுவல்ல ஜூலியன்களுக்கு முக்கியத்துவம் தந்திருந்தார். அது நல்ல உத்தி. அதே போல கேப்ஷனையும் சுருக்கமா அழகா கவர்ச்சியா தந்திருந்தார்

மது ஸ்பெஷல் பாட்டு எழுதிருந்தார். நல்லா இருந்திச்சி.

நாட்டாமையோட (!!!!) தீர்ப்பு என்னன்னா - மின் நூல் பரிசு கைப்புவுக்கும் அடுத்த படத்தில பாட்டெழுதற வாய்ப்பு மதுவுக்கும்கறதுதான்

கைப்பு, அடுத்தவாரம் என்கிட்டர்ந்து அஞ்சல் வரலைன்னா ஒரு சத்தம் குடுங்கப்பு

 
At March 02, 2006 5:36 AM, Blogger கைப்புள்ள said...

சரிங்கோ! உண்மையிலேயே இந்த வாரம் ரொம்ப ஜாலியாப் போயிட்டிருக்கு...இந்த போட்டிகள்ல போட்டியாளராக் கலந்துக்க முடியாம வெறும் பார்வையாளரா இருக்க வேண்டியதா போச்சேனு ஒரு சின்ன வருத்தம் உண்டு. நீங்க மெயில் அனுப்புன சனிக்கிழமை அன்னிக்கி நான் டிரெயின்ல உக்காந்துருந்தேன்...அதனால ஒன்னும் பண்ண முடியாம போயிடுச்சு.
ஆனா பங்கு கொண்டவங்க அத்தனை பேரும் ரொம்ப சுறுசுறுப்பா ஆர்வமா பங்கெடுத்துக்கிட்டது தமிழ்மணத்தைக் கலகலப்பாக்கிடுச்சு.

போட்டியில பங்கெடுத்துக்கிட்டவங்களுக்கு எம்புட்டு பெண்டு கழண்டுருக்கும்னு புரியுது. அத வுட போட்டியை எல்லாம் நடத்துன குவிஸ் மாஸ்டர் அம்மாவுக்கு எப்படி இருந்து இருக்கும்னு யூகிக்க முடியுது. You really did a great job! கலக்கிட்டீங்க. நட்சத்திர வாரம் முடிஞ்சப்புறமும் இதை மாதிரி தொடர்ந்து குடுத்துட்டே இருங்க!

 
At March 02, 2006 11:38 PM, Blogger நிலா said...

//இந்த போட்டிகள்ல போட்டியாளராக் கலந்துக்க முடியாம வெறும் பார்வையாளரா இருக்க வேண்டியதா போச்சேனு ஒரு சின்ன வருத்தம் உண்டு//

கைப்பு, கவலைப்படாதீங்க. உங்களுக்காகவே இன்னொண்ணு நடத்திடலாம். விண்ணப்பம் போட்டு வைங்க :-)

குவிஸ் மாஸ்டர் அம்மாவுக்கு எப்படி இருந்து இருக்கும்னு யூகிக்க முடியுது. You really did a great job! //

நன்றி... சிரமமெல்லாம் எல்லாரோட உற்சாகத்திலயும் பாராட்டுலயும் கரைஞ்சு போச்சப்பு. நன்றி
//

 

Post a Comment

<< Home