***பூப்பறிக்க வருகிறோம் சுற்று 5 ***
விதிகள்:
இந்த சுற்றில் பார்வையாளர்கள் பங்குபெற முடியாது. அணி உறுப்பினர்கள் இருவரும் கண்டிப்பாக கலந்தாலோசித்தால் மட்டுமே பதிலைப் பெற முடியும். ஒரு அணிக்கு ஒரு விடை மட்டுமே அனுமதிக்கப்படும். முதலில் சரியான விடை தரும் அணிக்கு 25 மதிப்பெண்கள். அடுத்தடுத்த அணிகளுக்கு முறையே, 20, 15, 10 மதிப்பெண்கள். விடை தவறாகச் சொன்னால் அணியின் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். விடைக்கான விளக்கம் எழுதுதல் அவசியம். சரியான விளக்கம் இல்லையென்றால் மதிப்பெண் குறைக்கப்படலாம். ஒரு வேளை கேள்வியில் தவறு இருந்தால் அணியினர் சரியாக விடை கூறியதாகக் கருதப்படும்.
சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் இரவு 11.30 மணி
அணிகளுக்கான கேள்விகள்:
தாமரை:
சிறிலுடைய தகப்பனாரின் வயது , தேவின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி எண் -இவை இரண்டையும் கூட்டினால் ஒரு எண் வருமல்லவா, அதன் கூட்டுத்தொகையைக் கண்டுபிடியுங்கள். (எ.கா: 111 என்பதன் கூட்டுத்தொகை:1+1+1=3). ஆங்கில எழுத்து வரிசையில் இந்த எண்ணின் இடத்தில் என்ன எழுத்து இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த எழுத்தின் முன் பில்லைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பிரபல தொழிலதிபருடைய பெயருக்கான குறிப்பு கிடைக்கும். அவர் யாரென எழுதுங்கள்
ரோஜா (பா.நா.த):
கொத்தனாருடைய கதவிலக்கத்திலிருக்கும் ஆங்கில எழுத்துதான் இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து.
குமரனின் கதவிலக்கத்தின் கடைசி எண்ணுக்குரிய ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்) இந்த வார்த்தையின் மூன்றாவது எழுத்தாகும்
கொத்தனார் பிறந்த ஊரில் அருகருகே இருமுறை ரிபீட் ஆகும் எழுத்து இந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்து.
ஒளியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து இந்த வார்த்தையின் கடைசி எழுத்து.
இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்
மல்லிகை:
தருமியின் வீட்டு இலக்கத்தின் கூட்டு எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தை (ஆங்கில எழுத்து வரிசையில்) கண்டு பிடியுங்கள். இது ஒரு நாட்டின் முதல் எழுத்து. இந்த நாட்டின் கடைசி எழுத்தும் செல்வன் பிறந்த ஊரின் முதல் எழுத்தும் ஒன்றே. இந்த நாட்டின் இரண்டாவது எழுத்தும் செல்வன் முதன்முதல் சென்ற அயல்நாட்டின் இரண்டாவது எழுத்தும் ஒன்றே
7 எழுத்துக்கள் கொண்ட இந்த நாட்டின் பெயரைக் கண்டுபிடியுங்கள்
சாமந்தி:
கீழ்க்கண்ட குறிப்புகளில் பிரபலமான ஒருவரின் பெயர் அடங்கி இருக்கிறது:
பெயரின் 4வது எழுத்து: கௌசிகனின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி மூன்று எண்களின் கூட்டுத் தொகைக்கு நிகரான ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்)
ஹரிகரன் முதன்முதலின் சென்ற அயல்நாட்டின் மூன்றாவது எழுத்தும், கடைசி எழுத்தும் இந்தப் பெயரின் மூன்றாவது எழுத்தாகவும் ஐந்தாவது எழுத்தாகவும் அமைகின்றன.
ஹரிகரனின் கதவிலக்கத்திலுள்ள ஆங்கில எழுத்து இந்தப் பெயரின் இரண்டாவது எழுத்தாகும்
இவர் இந்திய-பாகிஸ்தானிய இளைஞர்களின் கனவில் வருபவர் என்பது கூடுதல் க்ளூ
21 Comments:
ஏங்க, நம்ம குறிப்பில நாலாவது எழுத்துக்கு ஒண்ணும் இல்லையே. கெஸ்தான் அடிக்கணுமா?
கொத்ஸ்,
கெஸ்தான்
ஆனா தப்பா போக வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி
Angel
சரியா?
கொத்ஸ்,
சரியா ரூல்ஸ் படிங்க... விளக்கம் கேட்டிருந்தேனே...
Cyril,
Wake up man
//கொத்தனாருடைய கதவிலக்கத்திலிருக்கும் ஆங்கில எழுத்துதான் இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து.//
கதவிலக்கம் - 21A. ஆக A
//குமரனின் கதவிலக்கத்தின் கடைசி எண்ணுக்குரிய ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்) இந்த வார்த்தையின் மூன்றாவது எழுத்தாகும்//
கதவிலக்கம் - 8297. கடைசி எண் 7, அதன் ஆங்கில எழுத்து G
கொத்தனார் பிறந்த ஊரில் அருகருகே இருமுறை ரிபீட் ஆகும் எழுத்து இந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்து.
பிறந்த ஊர் - Chennai. இதிலிருந்து N
//ஒளியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து இந்த வார்த்தையின் கடைசி எழுத்து.//
ஒளி = Light. இதில் L.
கிடைத்தது ANG-L.
நான்காவது எழுத்து கெஸ் -E
ஆக விடை - ANGEL.
போதுமா?
கொத்தனாரே... ஒளி வேகத்தில கண்டு பிடிச்சிட்டீங்க.
வாழ்த்துக்கள்
விடை தரும்போதே விளக்கம் தராததனால உங்கள் அணிக்கு 20 மதிப்பெண்கள் மட்டுமே.
(அதான் ரூல்ஸை ஒழுங்கா படிக்கணும்)
//moonraavathu ezhuthu A.//
கௌசிகன்
யாரையும் முந்த விட மாட்டீங்க போலிருக்கே...
மிகச் சரியான விடை. ஆனா விளக்கத்தில ஒரு சின்ன தவறு செய்ததினால் 2 மதிப்பெண் குறைஞ்சிருச்சி. 18 மதிப்பெண்கள் உங்கள் அணிக்கு
ஆகா. கௌசிகனுக்கும் குறைச்சாச்சா. பேஷ்.பேஷ்.
மக்களே
வெளாட்டோட வெளாட்டா நம்ம சீரியஸ் பதிவுகளையும் பாருங்க
கஷ்டப் பட்டு ஃபிலிமெல்லாம் காட்றேன். ஒருத்தரும் அந்தப் பக்கம் வர மாட்டேங்கறீங்களே:-))
அதெல்லாம் அப்புறம். பரிசெல்லாம் கரெக்ட்டா நமக்கு பேக் பண்ணி அனுப்பினீங்கனா வந்து பார்ப்போம். சரிதானே குமரன் ...:)
எங்கேங்க. போட்டி டென்சன்ல அங்க எல்லாம் வர்றது. இந்த வாரம் முடியறதுக்குள்ள உங்க நட்சத்திர வார முதல் பதிவைப் பார்த்து வாழ்த்துக்கள்னு சொல்லிடுவேன்னு நினைக்கிறேன். :-)
//அதெல்லாம் அப்புறம். பரிசெல்லாம் கரெக்ட்டா நமக்கு பேக் பண்ணி அனுப்பினீங்கனா வந்து பார்ப்போம். சரிதானே குமரன் ...:) // Exactly...
denmark
பில் கேட்ஸ்
This comment has been removed by a blog administrator.
செல்வன், சிறில்
ரெண்டு பேருமே விளக்கம் தரலை. விளக்கம் வேண்டும் - போட்டி முடிய இன்னும் 19 நிமிஷம்தான் இருக்கு
வந்தாசு...வந்தாச்சு ..அப்பாடா பார்ட்னர் வந்தாச்சு விடையோடு..
answer for our Q; DENMARK.
மார்க் குறைக்க முடியாது ஏன்னா...தனி மயில்ல காரணம்.
விளக்கM:
தருமி வீட்டு எண்: 31 : ஆக - 4
நாலாவது ஆங்கில எழுத்து -D
செல்வன் ஊரின் முதல் எழுத்தும், பதிலின் கடைசிஎழுத்தும் ஒண்ணூ; K
D------K; ஆச்சா, செல்வன் சென்ற முதல் வெளிநாடு - அதை வைத்து வந்த விடை: denmark
அப்பாடா, சுளையா 25 மார்க்.
தருமி,
என்ன பிரச்சனைன்னு புரியலையே.
//இந்த நாட்டின் இரண்டாவது எழுத்தும் செல்வன் முதன்முதல் சென்ற அயல்நாட்டின் இரண்டாவது எழுத்தும் ஒன்றே//
இதில என்ன குழப்பம்?
d E nmark n E therland
ஐந்தாவது சுற்றில் அணிகள் எடுத்த மதிப்பெண்கள்
தாமரை: 2 (குறித்த அவகாசத்துக்குள் விளக்கம் தரவில்லை)
ரோஜா : 20
மல்லிகை: 13 (விளக்கத்தில் குழப்பிவிட்டார்கள்)
5வது சுற்று முடிவில் அணி நிலவரம்:
தாமரை (சிறில் - தேவ்) 32
ரோஜா (பா. நா. த) (கொத்தனார் -குமரன்) 70
மல்லிகை (செல்வன் - தருமி) 33
சாமந்தி (கௌசிகன் - ஹரிஹரன்ஸ்) 58
12 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ரோஜாவே முன்னணியில் இருக்கிறது. இனி விளம்பரமும் பாப்புலாரிடியும்தான் மிச்சம். பார்க்கலாம்
இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். அதனால என்ன 6வது சுற்றுல வலையுலக வாக்காளப் பெருமக்களின் அமோக ஆதரவால எல்லாம் நல்லதா முடிஞ்சது.
Post a Comment
<< Home