.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Wednesday, March 01, 2006

***பூப்பறிக்க வருகிறோம் - இறுதி முடிவுகள்!***

Your Ad Here

6வது சுற்று:
6வது சுற்றுக்கு முந்தைய நிலவரப்படி, போட்டி ரோஜாவுக்கும் சாமந்திக்கும்தான். அதனால் மல்லிகை அணிக்கு விழுந்த செல்லாத ஓட்டுக்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
(வாக்கு எண்ணிக்கையில் துணைபுரிந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி)

வாக்குகள் விபரம்:
தாமரை :0
ரோஜா :24
மல்லிகை:8
சாமந்தி:2

ஆக, 6 சுற்றுகளிலும் சேர்த்து மொத்தம் 94 மதிப்பெண்கள் பெற்று 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் சாமந்தி அணியைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடுவது பாப்புலர் பாண்டி நாட்டு தங்கம்s! வாழ்த்துக்கள்!

நேரப் பிரச்சனை அவர்களுக்கு பாதகமாக இருந்தாலும் கொத்தனார் - குமரன் அணி வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணங்கள் அவர்களது டீம் ஸ்பிரிட்டும் ஸ்போர்டிங் ஸ்பிரிட்டும்தான். சாமந்தி அணி நன்றாக விளையாடினாலும் 6வது சுற்றில் கவனம் செலுத்தவில்லை. அதுவே அவர்களது தோல்விக்கு முக்கியக் காரணம்.

குமரனுக்கும் இலவசக் கொத்தனாருக்கும் நிலா ஷாப் வழங்கும் சோ (அ) கிரேசி மோகனின் நாடக டிவிடி வழங்கப்படும். (போய் பார்த்து எது வேணும்னு சொல்லுங்க)
மின் நூல் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் அனுப்பிவைக்கப்படும்

கலந்து கொண்ட பார்க்கவந்த அனைவருக்கும் நன்றி.
இந்த அனுபவம் குறித்த விரிவான பதிவு விரைவில்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

At March 01, 2006 7:01 AM, Anonymous Anonymous said...

Great job!!
potti viruviruppaga ponathu

 
At March 01, 2006 7:49 AM, Blogger நிலா said...

அனானி
நன்றி
பாராட்டுதானே சொல்றீங்க. பேரைப் போடக்கூடாதா?

 
At March 01, 2006 7:52 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நிலா,
ரொம்ப நல்ல போட்டி. நன்றி.
ரெண்டு நாளாய் வெலை வெட்டி எதுவும் பார்க்கலை. கொஞ்சம் அதையும் பாத்துட்டு வந்து விரிவா ஒரு பின்னூட்டம் போடறேன்.

 
At March 01, 2006 9:45 AM, Blogger குமரன் (Kumaran) said...

இலவசக் கொத்தனார் கதைதான் எனக்கும். ஏதோ என்னோட நட்சத்திர வாரமே திரும்பி வந்த மாதிரி இருந்தது கடந்த இரண்டு நாட்களும். ஆபிஸ்ல ஒரு வேலை செய்யலை.

பரிசுக்கு நன்றி நிலா. எந்த DVDன்னு சீக்கிரம் சொல்றேன்.

 
At March 01, 2006 10:16 AM, Blogger Unknown said...

மிகவும் அருமையாக இருந்தது போட்டி.
வெற்றி பெற்ற குமரன்,கொத்தனார் அணிக்கு வாழ்த்துக்கள்

நட்சத்திர வாரத்தில் போட்டி என்பது அருமையான கான்செப்ட்.தமிழ்மணத்தையே ஒரு கலக்கு கலக்கிவிட்டீர்கள்.

 
At March 01, 2006 12:11 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நிலா போட்டியில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. முன்பே சொன்னதுபோல வேலைப் பழுகாரணமாக ஒன்றுமே செய்ய இயலவில்லை.

இருந்தாலும் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தொடர்ந்து பதிவுகள் போட்டுவந்திருந்தேன் ஆனால் இரு வாரங்களாக ஒரு பதிவுகூட போட முடியவில்லை.

தேவ் I am sorry I could not do much.

வெற்றி பெற்ற அணிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

 
At March 01, 2006 1:22 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

என்னடா உலகம்..ஒரு செல்லாத ஓட்டுக்கூட கிடைக்கவில்லை.

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். தெரிஞ்சிருந்தா கூட்டணி வச்சிருந்திருக்கலாம்.

:(

 
At March 01, 2006 8:02 PM, Blogger தருமி said...

ச்சே என்ன பார்ட்னர்...நான் சொல்ல நினச்சத அப்படியே சொல்லியிருக்கீங்க...அதனால அத ஒரு 'ரிப்பீட்' - "மிகவும் அருமையாக இருந்தது போட்டி.
வெற்றி பெற்ற குமரன்,கொத்தனார் அணிக்கு வாழ்த்துக்கள்

நட்சத்திர வாரத்தில் போட்டி என்பது அருமையான கான்செப்ட்.தமிழ்மணத்தையே ஒரு கலக்கு கலக்கிவிட்டீர்கள்."

 
At March 01, 2006 8:07 PM, Blogger Unknown said...

Thanks Nila.. It was nice to be a part of this contest.
Cyril No worries...Its all part of the game.
I got introduced to a few great people in the blogging world through this competition.

Congrajulations to the winners...
:)

 

Post a Comment

<< Home