நாலில்லாமல் நானில்லை
கொத்தனார் மற்றும் தேவுக்கு சமர்ப்பணம்
கொத்தனாரும் தேவும் சங்கிலியில இணைச்சு விட்டதால எழுதற பதிவு. எப்பவோ எழுதிருக்கணும். சரி, இப்பவாவது எழுதிடறேன்
பிடித்த 4 பிரபலங்கள்:
சச்சின் டெண்டுல்கர் : எல்லாருக்கும் தெரிஞ்ச காரணங்கள்தான். இன்னொரு ஸ்பெஷல் காரணம் - ஒரு முறை பார்த்த ரசிகர்களின் பெயரைக் கூட அநேகமாக நினைவு வைத்திருப்பாராம் . மனிதர்களை நேசிக்கிறவர்களுக்கே ஆகிற காரியம் இது. மறைந்த என் மகனுக்கு சச்சின் என்று இவர் பேரைத்தான் சூட்டி இருந்தேன்.
மைக்கேல் ஷூமாக்கர் : வெற்றி, வெற்றி, மேலும் வெற்றின்னு F1 ல ஏழு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இவரை இவரின் வெற்றிக்காகவே பிடிக்கும். சென்ற வருடம் அலான்ஸோவிடம் பட்டத்தைப் பறிகொடுத்த பின் குளிர்கால விடுமுறைக்குக் கூடப் போகாமல் பயிற்சி ஆரம்பித்துவிட்டாராம். அவ்வளவு டெடிகேஷன்! அடுத்த மாதம் ஆரம்பிக்கவிருக்கிற சீசனில் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினால் நன்றாக இருக்கும் 37 வயதாகிவிட்டதால் இந்த வருடத்தோடு ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் . புதிதாக ஒரு அணி ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
எஸ் .பி. பி: இவரது தெவிட்டாத குரலுக்கும் தன்னடக்கத்துக்கும் நான் பரம விசிறி . எனக்கு மிகச் சின்ன வயதில் இவர் பாடிய 'அவள் ஒரு நவரச நாடகம் ' பாடல்
மிகவும் பிடிக்கும். பாடகர் பார்த்தெல்லாம் பிடிக்கிற வயதில்லை அது. அதன் பின் தலைவர் என்னை பல முறை அழவைத்திருக்கிறார்; சிரிக்க வைத்திருக்கிறார்; சிந்திக்க வைத்திருக்கிறார் - எல்லாம் பாடல்கள் மூலமாகத்தான். எல்லவற்றையும் விட இவரின் அடக்கமும் எளிமையும் இவரை பிரபலங்களில் தனித்து நிறுத்திவிடுகிறது. நிலாச்சாரல் மூலம் ஒரு சில பிரபலங்களைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலவர்களின் கண்களிலேயே ஒரு மிதப்பு தெரியும். ஒரு விட்டேற்றித்தனம் இருக்கும். அதனாலேயே நேர்முகம் செய்வதை விட்டுவிட்டேன். எஸ் .பி .பியை இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் சந்தித்தவர்கள் சொல்லிக் கேள்வியுற்றிருக்கிறேன் இவர் வித்தியாசமென்று.
அம்மா அமிர்தானந்த மயி: என் தேடல்களினால் நான் சந்தித்த ஒரு ஆன்மீகவாதி. இவரை ஒரு ஆன்மீகவாதி என்பதைவிட மிகவும் மனித நேயமுள்ள மனுஷியாக பிடிக்கும். சந்திக்க வரும் அனைவரையும் கட்டியணைத்து ஆறுதல் சொல்ல்வதால் Hugging Saint என்று உலகளவில் பெயர் பெற்றுள்ளார். பக்கத்தில் அந்நியர் அமர்ந்தாலே மனசு சுளிக்கும் மனிதர்களுக்குள் எந்த பாகுபாடுமின்றி உள்ளன்போடு எத்தனை பேர் வந்தாலும் அணைத்துக் கொள்வதற்கு ஒரு பெரிய மனது வேண்டும்.
நிறைவேறிய 4 கனவுகள்:
1. மேடையில் ஒரு முறையாவது பாடுவது (பெரிய பாடகி என கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.)
2. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது - இதில் காமெடி என்னவென்றால் சிறு வயதிலிருந்த இந்த ஆசை பின்பு போய்விட்டது. ஆனால் பாருங்கள், மிகுந்த வற்புறுத்தலின் பேரில் ஒரு சமயம் செய்தி வாசிக்க நேரிட்டது.
3. இங்கிலாந்தில் வசிப்பது - முதல் முறை இங்கு பணி நிமித்தமாக வந்த போதே மிகவும் பிடித்துவிட்டது .
4. பத்திரிகைகளில் கதைகள் எழுதுவது
(இன்னும்) நிறைவேறாத 4 கனவுகள்
1. கர்நாடக இசை பயில்வது
2. பரதநாட்டியம் பயில்வது
3. ஒரு ம்யூசிக் வீடியோ இயக்குவது
4. Financial Freedom (இதைப் பேராசையில் சேர்த்திருக்கலாமோ?)
பேராசைகள் 4:
1. இந்தியாவை சுத்தம் செய்வது
2. எஸ் .பி. பிக்கு மகளாகப் பிறந்து அவர் தாலாட்டில் உறங்குவது
3. தொலைக்காட்சி சேனல் அல்லது தயாரிப்பு நிறுவனம் நடத்துவது
4. அமைதியும் சமாதானமும் நிறைந்த உலகத்தில் வாழ்வது
நன்றி சொல்ல விரும்பும் 4 பேர்:
1.அத்தம்மா - என் மாமியார் : என்னை வழி நடத்துவதற்காக
2. பெற்றோர் - நான் செய்த சேட்டைகளை எல்லாம் பொறுத்து எதிர்ப்புகளை மீறி படிக்க வைத்ததற்காக
3. ராஜு - ஏகப்பட்ட குறைகளிலிருந்தாலும் அவற்றோடு என்னை நேசிப்பதற்காக
4. நிலாக்குழு - பிரதிபலன் எதிர்பாராமால் எனக்குத் தோள் கொடுப்பதற்காக. (என்ன தவம் செய்தேனோ)
பிடித்த பொழுதுபோக்குகள் 4:
1. Romcom (Romantic comedy) படம் பார்ப்பது
2. CD போட்டுக் கொண்டு சேர்ந்து பாடுவது
3. ஏரோபிக்ஸ் என்ற பெயரில் குத்தாட்டம் ஆடுவது (வீடு பத்திரமாதான் இருக்கு)
4. ஜெஃப்ரி ஆர்ச்சர்/சிட்னி ஷெல்டன் நாவல் படிப்பது
பாடப் பிடிச்ச 4 பாட்டு (சிடி ப்ளேயர் கூடத்தான்)
1. உன்னோடு வாழாத வாழ்வென்ன (அமர்க்களம்)
2. மனம் விரும்புதே உன்னை (நேருக்கு நேர்)
3. எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
4. எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)
அழைக்க விரும்பும் நால்வர்: (யார் எழுதிட்டாங்க, யாரு எழுதலைன்னே தெரியலை. நம்ம குரு உஷாவைக் கூப்பிடலாம்னு நினைச்சேன். அவங்க கொஞ்ச நாள் வனவாசம் போயிருக்காங்க. தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு உட்டுட்டேன்)
1. மதுமிதா
2. மதி
3. மணியன்
4. அன்பு
20 Comments:
test
test
அம்மா நிலா, என்ன நியாயமிது? உங்களை இந்த நால்வர் பதிவுக்கு அழைத்தது நான் (பார்க்க - http://mahamosam.blogspot.com/2006/02/blog-post_25.html ). நன்றிக்கடன் கொத்தனாருக்கா?...
பெரியவரே,
//நன்றிக்கடன் கொத்தனாருக்கா?...//
நீங்களும் அழைத்திருக்கலாம். ஆனால் முதலில் அழைத்தது நானே.
நிலா அவர்களே,
முதல் நாலில் மூன்று ஒத்து போகிறது.
அடுத்த நாலும் நமக்கு சரிவராது. (அந்த லண்டன் க்ளைமேட்டில் என்னத்தை கண்டீர்களோ)
மூன்றாவது நாலில் ஆதியும் அந்தமும் நமக்கும் ஆசைதான்.
அதுக்கப்புறம் நேரா பாட்டுக்கு விடு ஜூட். நாலும் சூப்பர் பாட்டு.
என்னவோ போங்க. நல்ல இருந்தா சரிதான்.
//அம்மா நிலா, என்ன நியாயமிது? உங்களை இந்த நால்வர் பதிவுக்கு அழைத்தது நான் (பார்க்க - http://mahamosam.blogspot.com/2006/02/blog-post_25.html ). நன்றிக்கடன் கொத்தனாருக்கா?...//
ஹரி
இப்போதான் பார்த்தேன்...
முன்னாடியே தெரிஞ்சிருந்தா இன்னொருத்தர் அழைக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டு இந்தப் பதிவை 'நாலு பேருக்காக நாலு.' ன்னு போட்டு ஃபிலிம் காட்டி இருக்கலாம். :-))
முன்னாலேயே சொல்லிருக்கலாம்ல?
பரவாயில்லை, பெத்தம்மாளுக்கும், அத்தம்மாளுக்கும் நன்றி சொல்லிட்டீங்க!
ஆகா, கடைசியில் நானும் மாட்டியாச்சா ? முடிந்தது என்று நினைத்தேன்.
உங்கள் விருப்பங்கள் உங்கள் பரந்த ஆர்வங்களை வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் விரும்பும் 'அம்மா' இன்று மும்பையில்.அவர்களின் அன்பு போற்றப்பட வேண்டியது.
நான்.. நம்ம கொத்ஸ்...அப்புறம் சார் எல்லாரும் உங்களை சங்கிலி பதிவு போடக் கோர்த்துவிட்ட நேரம் தான் நிலா நட்சத்திரமாகி... அப்புறம் 100 பின்னூட்டம் வாங்கிப் புகழின் உச்சிக்குப் போனதுக்கு காரணம் அப்படின்னு பதிவுலகம் முழுக்க ஒரே பேச்சாம்....
நான் கொத்ஸ் எல்லாம் தெளிவாச் சொல்லிட்டோம் நாங்க அவங்களை இந்தச் சங்கிலில்ல கோர்த்து விட்டது என்னவோ வாஸ்தவம் தான் ஆனா அவங்க புகழ் பெற்றதுக்கு அவங்க திறமை தான் காரணம்ன்னு....இது எப்படி இருக்கு :)
//நீங்களும் அழைத்திருக்கலாம். ஆனால் முதலில் அழைத்தது நானே.//
அட... அட... அடா.... ரேஸில முந்தி பெரியவரைத் தோக்கடிச்சிட்டீங்களே!
//முதல் நாலில் மூன்று ஒத்து போகிறது.//
பரவாயில்லையே...
//அடுத்த நாலும் நமக்கு சரிவராது. (அந்த லண்டன் க்ளைமேட்டில் என்னத்தை கண்டீர்களோ)
//
இங்கிலாந்து நாட்டுப்புறம் பாத்திருக்கீங்களா? அழகுன்னா அழகு.
//மூன்றாவது நாலில் ஆதியும் அந்தமும் நமக்கும் ஆசைதான்.//
அப்ப்டியா? நாலாவதுக்கு ப்ரில்லியன்டா ஒரு ஐடியா கொடுங்க சாமி
//அதுக்கப்புறம் நேரா பாட்டுக்கு விடு ஜூட். நாலும் சூப்பர் பாட்டு. //
ஆமாம் பாட்டுக்கள்லாம் அசத்தன்... அதுவும் என் குரல்ல :-))))
thanks for the invite Nila.
Time is a big factor. I will try. just dont know when i could manage to do this.
I love English country side too. Would also love to visit Ireland, Scotland and esp. Welsh. ONE day. :)
-Mathy
//உங்கள் விருப்பங்கள் உங்கள் பரந்த ஆர்வங்களை வெளிப்படுத்துகின்றன.//
மணியன்,
நமக்கு ஆழ உழத்தெரிய மாட்டேங்குது. அகலத்தான் உழத்தோணுது :-)
//அப்ப்டியா? நாலாவதுக்கு ப்ரில்லியன்டா ஒரு ஐடியா கொடுங்க சாமி//
ஏங்க. முதலிலேயே வோட்டுக்கு பத்து ரூபாய்ன்னு ஒரு ஸ்பான்ஸர் பிடிச்சு இருந்தா கலக்கி இருக்கலாமில்ல.
சரி விடுங்க. நாலு பேத்துக்கு தெரியாம, தனி மடலில் ஒரு ஸ்கீம் போடுவோம். ஆனா 50-50. ஒக்கேவா?
தேவ்,
//நான்.. நம்ம கொத்ஸ்...அப்புறம் சார்// இது இப்படிதானா இல்லை
'நம்ம கொத்ஸ்...நான்.. அப்புறம் சார்' இப்படியா? கொஞ்சம் போட்ட நேரம் போய் பாக்கணும் போல இருக்கே....
//நான்.. நம்ம கொத்ஸ்...அப்புறம் சார் எல்லாரும் உங்களை சங்கிலி பதிவு போடக் கோர்த்துவிட்ட நேரம் தான் நிலா நட்சத்திரமாகி... அப்புறம் 100 பின்னூட்டம் வாங்கிப் புகழின் உச்சிக்குப் போனதுக்கு காரணம் அப்படின்னு பதிவுலகம் முழுக்க ஒரே பேச்சாம்.... //
தேவ்
புகழின் உச்சி - -நக்கலு??? :-)))
//நான் கொத்ஸ் எல்லாம் தெளிவாச் சொல்லிட்டோம் நாங்க அவங்களை இந்தச் சங்கிலில்ல கோர்த்து விட்டது என்னவோ வாஸ்தவம் தான் ஆனா அவங்க புகழ் பெற்றதுக்கு அவங்க திறமை தான் காரணம்ன்னு....இது எப்படி இருக்கு :)
//
ஆனாலும் ரொம்பத் தன்னடக்கமய்யா :-))
//பெத்தம்மாளுக்கும், அத்தம்மாளுக்கும் நன்றி சொல்லிட்டீங்க//
வெளிகண்டநாதர்,
அத்தம்மாவா இருந்தாலும் அடுத்தம்மாவும் இருந்தாலும், நமக்கு யாரு நல்லது செஞ்சாலும் நன்றி சொல்லணுமுல்ல. :-)
உங்கள் நால்வர் பதிவுக்கான அழைப்பை நிறைவேற்றி விட்டேன். இங்கே
(இன்னும்) நிறைவேறாத 4 கனவுகள்ல 1 & 4 எனக்கும் ஒத்துப் போவது. :-)
நன்றி நிலா
போட்டாச்சும்மா
http://madhumithaa.blogspot.com/2006/03/blog-post_17.html
Post a Comment
<< Home