*** பூப்பறித்த அனுபவம் ***
பூப்பறிக்க வருகிறோம் நடந்து முடிந்து அலை ஓயத் தொடங்கிவிட்டது. பூப்பறித்த அந்த இனிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அந்த அவசரப் பதிவு.
இப்படி ஒரு விளையாட்டு நடத்தலாம் என்ற எண்ணம் வந்ததும் போட்டியாளர்களாக எப்படிப்பட்ட ஆட்கள் தேவை என சிந்தித்தேன் - உற்சாகமான, இணக்கமான, அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்தாத அதே சமயம் பொறுப்பானவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அப்படி சட்டென்று நினைவில் வந்தவர்களுக்கு அஞ்சல் அனுப்பி விருப்பம் கேட்டேன். (நான் கேட்காதவர்களுக்கு இந்த குணங்கள் இல்லை என்று அர்த்தமில்லை. எனக்கு உடனே நினைவிற்கு வந்தவர்கள் என்று குறிப்பிட்டதை கவனிக்கவும்). 8 பேரில் 7 பேர் உடனே விருப்பம் தெரிவித்து விட்டார்கள். சுந்தர் ஊரில் இல்லாததால் பதில் தர இயலவில்லை என்று பின்பு தெரிந்தது. அதற்குள் கொத்ஸின் உதவியால் கௌசிகனைப் பிடித்தோம்
இந்தப் போட்டியில் பல்வேறு திறமைகளை சோதிக்க விரும்பினேன். அதில் ஒன்று எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பது. அதனால்தான் ஒரு குழுவில் அமெரிக்காவிலிருந்து ஒருவரும் இந்தியாவிலிருந்து ஒருவருமாய் அமைத்தேன். இந்த நேர வித்தியாசத்தை எவ்வளவு சாதகமாய் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க இந்தியாவிலிருப்போருக்கு சாதகமாய் சில சுற்றுக்களையும் அமெரிக்காவிலிருப்போருக்கு சாதகமாய் சில சுற்றுக்களையும் ஆரம்பிக்க முடிவெடுத்து வேலைகளைத் தொடங்கிவிட்டேன்.
இடையில் நான் போட்ட சில அஞ்சல்களுக்கு போட்டியாளர் கைப்பு பதில் சொல்லாமல் போக, கொஞ்சம் கவலை வர ஆரம்பித்தது. ஆபத்பாந்தவன் கொத்ஸ் HariharanS-ஐ கைப்புவுக்கு standby ஆக ஏற்பாடு செய்தார். இந்த நேரத்தில் ராகவனிடமிருந்து ஒரு அணுகுண்டு வந்தது - பணி காரணமாக போட்டியில் கலந்து கொள்ள முடியாதென்று. உடனே standby ஆக இருந்த கரிகரன்ஸ் ராகவன் இடத்திற்கு வந்து விட்டார். நேரம் கடந்து கொண்டே இருந்தது. கைப்புவை ஆளைக் காணோம். குமரன் இந்தியாவில் இருக்கிறாரா அமெரிக்கவிலிருக்கிறாரா என்ற குழம்பத்திற்கு நடுவே தனக்கு போட்டி பற்றி சரியாகத் தெரியாமல் விருப்பம் தெரிவிக்க யோசிப்பதாக குமரன் சஸ்பென்ஸ் வைத்தார். கைப்பு சனி மாலை வரை அட்டெண்டன்ஸ் கொடுக்காததால் ஆள் தேடி அலைய வேண்டியதாகப் போயிற்று. ஒரு 10 பேர் கதவையாவது தட்டி இருப்பேன். ஒரு வழியாக குமரன் உறுதி செய்ய மூச்சு வந்தது
ஒவ்வொரு சுற்றின் பின்னணியையும் குறிப்பிட்டு விடுகிறேன்:
முதல் சுற்றில் இரண்டு கேள்விகளைத் தவிர அனைத்துமே இரண்டு புதிர்களைக் கொண்டவை. உதாரணமாக, ஒரு கேள்வியில் இருவர் நிற்கும் படத்தை மட்டும் கொடுத்து 'இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு நாடுகள் எவை' என்று கேட்டிருந்தேன். முதலில் அது எந்த சம்பவம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அது தெரிந்தால்தான் சம்பந்தப்பட்ட நாடுகளைக் கண்டுபிடிக்க முடியும். இதனை ஒரு பொது அறிவு சுற்றெனக் கொள்ளலாம். அதே சமயம் போட்டியாளார்கள் எவ்வளவு விரைவாக சிந்தித்து செயல்பட முடிகிறது எப்பதையும் இது சோதித்தது.
இரண்டாவது சுற்று அட்சர சுத்தமாக க்ரியேடிவிடியையும் ஒரிஜினாலிடியையும் சோதிப்பதற்காகவெ அமைத்து சுற்று. அதே சமயம் எப்படி தங்கள் ஐடியாக்களைப் பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து வெளிக்கொணர்கிறார்கள் என்பதையும் கணிக்கும் விதத்தில் அமைந்திருந்தது
மூன்றாவது சுற்றும் பொது அறிவென்றாலும் அணியினர் இருவரும் இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்தத் தகவல் யுகத்தில் தகவல்களை எவ்வளவு விரைவில் எவ்வளவு சமயோசிதமாகக் கண்டறிகிறார்கள் என்பதற்கு சவாலாக அமைந்தது 4வது சுற்று. சந்தோஷ் கூட இதில் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஜோசப் அவர்களின் கதவிலக்கத்தைக் கொத்ஸ் கண்டறிந்த முறையைப் படித்தீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு சமயோசித புத்தி வேண்டும் என்று தெரியும். மதியிடமும் சிவாவிடமும் அஞ்சல் அனுப்பி பதில் பெற்றாலும் அதற்கு ஒரு இனிடிஅடிவெ வேண்டும். 4 பேர் அதே கேள்விகளை அவர்களிடம் கேட்கும்போது தங்களுக்கு பதில் சொல்ல வைக்கும் சுமுக உறவு இருக்கவேண்டும். Getting things done என்பதுதான் இந்த சுற்றின் நோக்கம்.
மற்ற சுற்றுகளிலாவது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தாங்களாகவே பதில் சொல்லி விடலாம். 5வது சுற்றில் அது சாத்தியமே இல்லை ஏனெனில் அது இரு அணி உறுப்பினர்களின் தனிப்பட்ட குறிப்புகளையும் இணைத்துத் தரப்பட்ட புதிர். இதற்கான பதிலைக் கண்டுபிடிப்பது சிரமமில்லை. ஆனால் இருவரும் எவ்வளவு விரைவாக தொடர்பு கொள்கிறார்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் இருக்கிறது என்பதை சோதிக்கவே இந்த சுற்று. இந்த சுற்றில் வேகத்துக்கு அதிக மதிப்பெண்கள் தந்தது ஏன் என்ற கௌசிகனின் கேள்விக்கு இது பதிலளித்திருக்கும் என்று நம்புகிறேன்
ஐந்தாவது சுற்று அறிவித்த உடனேயே ஆறாவது சுற்று அறிவிக்கக் காரணம் இந்தியாவிலிருப்போருக்கும் இதில் செயல்பட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே. ஆனால் போட்டியாளர்கள் 5வது சுற்றில் அதிகம் கவனம் செலுத்தியதால் நேரம் கடந்துவிட்டதென நினைக்கிறேன். இந்த சுற்றிற்குக் குறைந்த கால அவகாசம் அளிததற்குக் காரணம் நேர நெருக்கடியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைக் கணிக்கவே. அதில்தான் குமரனும் கொத்ஸும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். ஒருவருடைய இல்லம் தேடிச் சென்று வாக்கு கேட்க தன்னம்பிக்கை வேண்டும்.
குமரனும் கொத்ஸும் தாங்கள் பிரபலங்கள் என்று எண்ணி வாளாவிருந்திருந்தால் ஜெயித்திருக்க மாட்டார்களே? பாபுலாரிடியோடு பெரும் முயற்சியும் சேர்ந்துதான் அவர்களுக்கு வெற்றி தந்தது. செல்வனின் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். என்னிடம் வாக்குக் கேட்டது மட்டுமின்றி கொத்ஸின் பதிவில் பொய் வாக்குக் கேட்ட புத்திசாலித்தனத்திற்கு ஒரு ஷொட்டு. அதையும் அனுமதித்த கொத்ஸுக்கு சபாஷ் - எவ்வளவு ஸ்போர்டிவ் என்று பாருங்கள்!
இந்த சுற்று விளையாட்டோடு பொருந்தவில்லை என்ற கௌசிகனின் கருதை மதிக்கிறேன். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த இனிய அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில:
1. போட்டியாளர்களின் உற்சாகம் - முக்கியமாக ரோஜா அணியினரின் உற்சாகம் விளையாட்டைத் தூக்கிப் பிடித்தது
2. பார்வையாளர்களின் ஆர்வம் - முதல் சுற்றுக்கு மிக நல்ல வரவேற்பு
3. கொத்ஸின் நகைச்சுவை உணர்வு
4. தருமியின் கிராஃபிக்ஸ் திறமை
5. தேவின் விடா முயற்சி
6. சாமந்தி அணியினரின் க்ரியேடிவிட்டி
7. குமரனின் பிரசார வேகம்
8. Selvan's approach
9. வாக்காளப் பெருமக்களின் ஆர்வம். இறைவனே வந்து வாக்குக் கேட்டாலும் சோம்பல் படாமல் சாவடி சென்று ஓட்டுப் போடவேண்டுமல்லவா?
10. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.
பாடங்கள்:
1. அலுவல்களுக்கிடையில் பங்கேற்பது சிரமமாக இருந்தது என்ற கௌசிகனின் கருத்தை வழிமொழிகிறேன். நடத்தவும் சிரமமாக இருந்தது. அடுத்த முறை விடுமுறைநாளில் நடத்தலாம்
2. போட்டியாளர்களை நானே தேர்ந்தெடுத்து அணி சேர்ப்பதை விட அவர்களாகவே அணி சேர்ந்து விண்ணப்பித்தால் என் நேரத்தை சேமிக்கலாம்
3. போட்டிகளுக்கு தயார் செய்ய கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும்.
4. மணியன் அவர்களின் யோசனையின்படி பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.
நன்றி:
இந்தப்போட்டிக்கு உற்சாகத்தைக் கொண்டுவந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் பார்வையாளார்களுக்கும்
தங்கள் பதிவில் இந்தப் போட்டி பற்றிக் குறிப்பிட்ட அனைத்து அன்பு நண்பர்களுக்கும் (தருமி, கொத்ஸ், செல்வன் உட்பட)
புதிய யோசனைகள் தந்த மணியனுக்கும் கௌசிகனுக்கும்
இதனை நடத்தியதற்கு கணிசமான் நேரம் செலவிட்டாலும் முகம் சுளிக்காத அன்புக் கணவருக்கும்
அறிவிப்பு:
1. கொஞ்சம் இடைவெளிவிட்டு அடுத்த விளையாட்டைத் துவங்கலாம் என்றிருக்கிறேன். பூப்பறிக்க விருப்பமுள்ளவர்கள் கூட்டாளியுடனோ இல்லாமலோ உங்கள் வலைபதிவின் உரலோடு விண்ணப்பிக்கலாம்.
2. விளையாட்டுக்கு ஆதரவு தர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: nila at nilacharal dot com
ஆதரவு போட்டியாளர்களுக்கான பரிசுகளாக இருந்தால் போதுமானது - புத்தகங்கள், குறுந்தகடுகள் அல்லது பொற்காசுகள், யானைகள் என்று என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் :-)
26 Comments:
நிலா,
அவசர பதிவே இப்படியா? நான் சொல்ல வந்தது எல்லாமே சொல்லிட்டீங்களே.
சரி, அந்த அந்த சுற்றின் பதிவுகளில் போய் கருத்தை சொல்லலாம் என்றால், எங்கள் தலைவர் (பார்ட்னரெல்லாம் இல்லீங்கோ) குமரன் அந்த வேலையையும் செய்து விட்டார். கும்ஸ், இந்த மாதிரி பதிவு பதிவா போறதுக்கே உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கணும்.
அதனால் என் வழக்கப்படி நான் இதற்கு ஒரு தனிப்பதிவு போடலாமென்று முடிவு செய்து விட்டேன். போட்டவுடன் எல்லாரும் வந்து பாருங்க. (இதெல்லாம் இல்லைன்னா, நான் எப்படி 50ஆவது பதிவு, 75ஆவது பதிவுன்னு பிலிம் காட்டறது?)
உங்கள் நட்சத்திர வார சிறப்பு போட்டிகள் மூலம் சோம்பிக் கிடந்த தமிழ்மணத்தை புத்துயிர் பெறச் செய்துள்ளீர்கள். அதற்கான உங்கள் உழைப்பும் ஆர்வமும் முன்னேற்பாடுகளும் போட்டி நடத்திய விதத்தில் தெரிந்தது.நன்ரிகள் பல.
Hats off to your organising capacity in the virtual world!
//4. மணியன் அவர்களின் யோசனையின்படி பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.//
பொதுமக்கள் கருத்தையும் கவனத்தில் கொள்ளும் தேர்தல் ஆணையருக்கு நன்றிகள்.
நிலா, பதில் கொடுக்காத ஆள் நாந்தான். கணிணி சரியில்லாம போனதால இந்த தாமதம். அதற்குள்
ஆட்டம் ஆரம்பித்து என்ன ஏதுன்னு புரியாம ஓட்டுகேட்ட தம்பிகளுக்கு ஓட்டும் போட்டாச்சு.
மல்லிகை அணிக்காரங்க, தோற்று போனதற்கு இதுதான் காரணம் :-) தருமிசார், அடுத்த முறை
விடாதீங்க. இதுல தேர்தல்ல நிக்கிறவங்கள தவிர அபிமானிங்க வேற வாக்கு கேட்டு மெயில் போட்டாங்க. என்னத்தான் சொல்லுங்க, வீட்டாண்ட வந்துக் கேட்டா அதுக்கு மவுசு தனிங்க. :-)))).
"தருமி, அடுத்த முறை
விடாதீங்க. "//
அட போங்க உஷா, பயமா இருக்கு :-(
//பூப்பறிக்க வருகிறோம் நடந்து முடிந்து அலை ஓயத் தொடங்கிவிட்டது. //
பூப்பறிக்கிறதுக்கும் அலைக்கும் என்ன சம்பந்தம் நிலா? ஓ நிலாவை நட்சத்திரம் ஆக்குனது மாதிரியா இதுவும். :-)
//குமரன் இந்தியாவில் இருக்கிறாரா அமெரிக்கவிலிருக்கிறாரா என்ற குழம்பத்திற்கு//
இந்தக் குழப்பம் ஏன் வந்ததென்றே புரியவில்லை. நான் தான் எல்லாப் பதிவுலயும் பின்னுட்டங்களிலும் நான் அமெரிக்காவுலத் தான் இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேனே.... அது சரி. உங்களுக்கு என்னை சட்டுனு முதல்லயே நினைவுக்கு வரலையா?
// உற்சாகமான, இணக்கமான, அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்தாத அதே சமயம் பொறுப்பானவர்களாகவும் இருக்கவேண்டும்// இது எல்லாமே இருப்பவர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா.... :-)
//மதியிடமும் சிவாவிடமும் அஞ்சல் அனுப்பி பதில் பெற்றாலும் அதற்கு ஒரு இனிடிஅடிவெ வேண்டும்.//
அது.
//ஆனால் போட்டியாளர்கள் 5வது சுற்றில் அதிகம் கவனம் செலுத்தியதால் நேரம் கடந்துவிட்டதென நினைக்கிறேன்.//
நாங்கள் அது செய்யவில்லை. கொத்தனார் 5வது சுற்றைக் கவனித்துக் கொள்ளும் போது நான் 6வது சுற்றுக்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டேன். :-)
//ஒருவருடைய இல்லம் தேடிச் சென்று வாக்கு கேட்க தன்னம்பிக்கை வேண்டும்.
//
அப்ப நம்ம அரசியல்வாதிகளுக்கு அது நிறைய இருக்குன்னு தான் சொல்லணும். :-) தன்னம்பிக்கை எல்லாம் வேணாம். தில்லு இருந்தா போதும். :-)
//குமரனும் கொத்ஸும் தாங்கள் பிரபலங்கள் என்று எண்ணி வாளாவிருந்திருந்தால் ஜெயித்திருக்க மாட்டார்களே?//
எங்கள் பாப்புலாரிட்டி பத்தி எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்கு வரும் பின்னூட்ட எண்ணிக்கைகளையும் நாங்கள் அரவணைத்துச் செல்லும் (பின்னூட்டம் இட்டுத்தான்) வலைப்பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் அது நன்றாய் புரியும். ஆனாலும் தருமி ஐயா, செல்வனோட பாப்புலாரிட்டியும் நன்றாகத் தெரிந்ததால், மற்ற இரு அணியினரும் மற்ற சுற்றில் நன்றாகச் செய்தார்கள் என்பதாலும், தன் பலம், மாற்றார் பலம் எல்லாவற்றையும் சீர்தூக்கி இந்த சுற்றில் முழு மூச்சாய் இறங்கினோம்.
பின்னூட்டமே பதிவு லெவலுக்குப் போகிறது. அதனால் இத்துடன் இந்தப் பின்னூட்டத்தை நிறுத்திக் கொண்டு அடுத்தப் பின்னூட்டத்தில் தொடருகிறேன். :-)
//என்னிடம் வாக்குக் கேட்டது மட்டுமின்றி கொத்ஸின் பதிவில் பொய் வாக்குக் கேட்ட புத்திசாலித்தனத்திற்கு ஒரு ஷொட்டு//
என்னங்க செல்வனுக்கு மட்டும் தானா? நானும் உங்ககிட்டயும் செல்வன் பதிவுலயும் போய் கேட்டேனே. என்னைப் பாத்துட்டுத் தான் அவர் செங்சார்ன்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அவரை மட்டும் பாராட்டறீங்க. ஏற்கனவே செல்லாத ஓட்டை எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டீங்கன்னு தேர்தல் கமிஷன் மேல கேஸ் போடலாம்ன்னு இருக்கேன். ஜாக்கிரதை. ஒரு பக்கமாய் சாயாதீர்கள். :-)
//இந்த சுற்று விளையாட்டோடு பொருந்தவில்லை என்ற கௌசிகனின் கருதை மதிக்கிறேன்//
இதெல்லாம் சும்மா. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதை இது. (கௌசிகன்...கோவிச்சுக்காதீங்க...ச்ச்சும்மாமா.) :-)
//1. போட்டியாளர்களின் உற்சாகம் - முக்கியமாக ரோஜா அணியினரின் உற்சாகம் விளையாட்டைத் தூக்கிப் பிடித்தது
//
இந்த ஒரு வரி போதும் நிலா. நாங்கள் இருவரும் திங்களும் செவ்வாயும் அலுவலகத்தில் ஒரு வேலையும் செய்யாமல் எங்கள் நட்சத்திர வாரம் மாதிரி போட்டியில் கலந்து கொண்டதற்கு. :-)
//கொத்ஸின் நகைச்சுவை உணர்வு
//
அது....
//குமரனின் பிரசார வேகம்//
நான் கதவைத் தட்டிய வீடுகள் இந்த இருவகைக்குள் அடங்கும்: 1. என் பதிவுகளுக்கு வந்து ஒரு முறையாவது பின்னூட்டம் இட்டவர்கள், 2. என் பின்னூட்டத்தை ஒரு முறையாவது பெற்றவர்கள். மற்றவர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது என்பதால் அவர்கள் வீட்டைத் தட்டவில்லை. :-)
//Selvan's approach//
எது? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி குய்யோ முறையோன்னு புலம்பி அனுதாப ஓட்டு வாங்க முயற்சி செய்ததா? அது சரி. :-)
அவர் பதிவுக்கு போய் பாருங்கள். செய்றத எல்லாம் செஞ்சுட்டு 'வெற்றி வெற்றி'ன்னு பதிவு போட்டு கிடைச்ச 27 வாக்குகளும் அவரோட 'ரசிகர்கள்' போட்டதா சொல்லியிருக்காரு. அனுதாப ஓட்டு போட்டவங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். :-)
//ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.
//
இது மிகப்பெரிய பயன். சந்தேகமே இல்லை. சாதாரணமாக நட்சத்திரங்கள் கவனிக்கப் படுவார்கள். இதில் நீங்கள் நட்சத்திரமாகி போட்டியில் கலந்து கொண்ட எங்களையும் எல்லாரும் கவனிக்க வைத்துவிட்டீர்கள்.
//வாக்காளப் பெருமக்களின் ஆர்வம். இறைவனே வந்து வாக்குக் கேட்டாலும் சோம்பல் படாமல் சாவடி சென்று ஓட்டுப் போடவேண்டுமல்லவா?
//
உண்மை. எத்தனை முறை நன்றி சொன்னாலும் முடியாது.
//தங்கள் பதிவில் இந்தப் போட்டி பற்றிக் குறிப்பிட்ட அனைத்து அன்பு நண்பர்களுக்கும் (தருமி, கொத்ஸ், செல்வன் உட்பட)
//
தினம் ஒரு பதிவு போடும் நான் இந்த வாரம் எந்த பதிவும் போடவில்லை. ஏன் என்று உங்களுக்கே தெரியும். :-)
//ஆதரவு போட்டியாளர்களுக்கான பரிசுகளாக இருந்தால் போதுமானது - புத்தகங்கள், குறுந்தகடுகள் அல்லது பொற்காசுகள், யானைகள் என்று என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் //
யாராவது பொற்காசுகள் தர்றதா சொன்னா சொல்லுங்க. தக தக தக தக தங்கவேட்டைன்னு நானும் வந்து போட்டியில கலந்துக்கறேன். ஒரு பொற்காசாவது கிடைக்காதா என்ன? :-)
//எங்கள் தலைவர் (பார்ட்னரெல்லாம் இல்லீங்கோ) குமரன் //
கொத்ஸ். என்ன இது? தருமி ஐயாவுக்கும் செல்வனுக்கும் எத்தனை வயது வித்தியாசம்! ஆனாலும் அவர்கள் இருவரும் பார்ட்னர் என்று தான் அழைத்துக் கொள்கிறார்கள். நீங்களும் ஏறக்குறைய என் வயது தானே. என்னை பார்ட்னர் என்று சொல்வதில் என்ன தயக்கம்?
//கும்ஸ், இந்த மாதிரி பதிவு பதிவா போறதுக்கே உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கணும்.//
இது எல்லா நட்சத்திரங்களுக்கும் நான் வழக்கமா பண்றது தானே. சிலர் போல உங்க எல்லாப் பதிவையும் படிச்சேன். நல்லா இருந்ததுன்னு கடைசி பதிவுல சொல்லிட்டுப் போயிடலாம் தான். ஆனா அது நட்சத்திரங்கள் எதிர்பார்க்கும் ஊக்கத்தைக் கொடுக்காதே. அதனால் முடிந்த வரை எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டம் போடுவதுண்டு.
நீங்க உங்க வழக்கப்படி பதிவு போடுங்க. வந்து பார்க்கிறேன். :-)
//அது சரி. உங்களுக்கு என்னை சட்டுனு முதல்லயே நினைவுக்கு வரலையா?
//
ஏன் வராம? உங்க ப்ரொஃபைல்ல 'இப்போது மதுரையில்' அப்படின்னு இருந்தது. நீங்க விடுமுறையில மதுரை போயிருக்கீங்கன்னு நினைச்சேன்
//கொத்தனார் 5வது சுற்றைக் கவனித்துக் கொள்ளும் போது நான் 6வது சுற்றுக்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டேன். :-)
//
நீங்க யாரு, என்ன ரேஞ்சு:-)))
//அதனால் இத்துடன் இந்தப் பின்னூட்டத்தை நிறுத்திக் கொண்டு அடுத்தப் பின்னூட்டத்தில் தொடருகிறேன். :-) //
ஓ இதுதானா உங்க பின்னூட்டக் கலையின் ரகசியம்? :-)))
//உங்க ப்ரொஃபைல்ல 'இப்போது மதுரையில்' அப்படின்னு இருந்தது//
ஓ இது தான் குழப்பத்தின் காரணமா. ஆரம்பத்தில் 'மதுரை தற்போது xxxxx' என்று தற்போது இருக்கும் ஊர் பெயர் போட்டிருந்தேன். நண்பர்கள் அறிவுரைக்கேற்ப தற்போது இருக்கும் ஊர் பெயரை மட்டும் தூக்கினேன். 'மதுரை தற்போது, Minnesota' என்று படிப்பார்கள் என்று நினைத்தேன். நீங்கள் 'இப்போது மதுரையில்'ன்னு படிச்சிருக்கீங்க. 'பிறந்தது மதுரை' என்று ப்ரொஃபைல்ல மாத்திட்டேன்.
//கொத்ஸ். என்ன இது? தருமி ஐயாவுக்கும் செல்வனுக்கும் எத்தனை வயது வித்தியாசம்! ஆனாலும் அவர்கள் இருவரும் பார்ட்னர் என்று தான் அழைத்துக் கொள்கிறார்கள். நீங்களும் ஏறக்குறைய என் வயது தானே. என்னை பார்ட்னர் என்று சொல்வதில் என்ன தயக்கம்?//
இது வயசு சம்பந்த பட்ட விஷயமில்லை தலைவா. இது (சுட்டு விரலால, நெத்தி பக்கம் ரெண்டு முறை தட்டிக்கோங்க). அதுல நீங்க எங்க, நான் எங்க. அதுனாலதான் தலை.
செல்வன் தருமி அய்யாவை பார்ட்னர்ன்னு கூப்பிட்டாருன்னா, நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்லை
//இது எல்லா நட்சத்திரங்களுக்கும் நான் வழக்கமா பண்றது தானே. //
தலைவா, நான் நட்சத்திரங்களை மட்டும் சொல்லலை. வோட்டு கேட்டு, நன்றி சொல்லி. எங்கயோ பொயிட்டீங்க.
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
//'மதுரை தற்போது, Minnesota' என்று படிப்பார்கள் என்று நினைத்தேன்//
தல, இங்கதான் குழப்பம்.
மதுரை, தற்போது மினஸோட்டா. கமா இப்படி இல்ல வரணும்?
//ஓ இதுதானா உங்க பின்னூட்டக் கலையின் ரகசியம்? :-)))//
யக்கா, இது என்ன அக்குறும்பு?
எல்லாரும் தெரியத்தானே இவ்வளவு மெனக்கிடறோம். இப்படி ரகசியம்ன்னு சொல்லிபோட்டீங்க?
இங்ஙன போய் பாருங்கக்கோவ்.
http://koodal1.blogspot.com/2006/02/140.html
http://elavasam.blogspot.com/2006/01/blog-post_29.html
(பின்னூட்டங்களில்)
பாத்துட்டு சொல்லுங்க.
பாருங்க. ஒண்ணும் இல்லாமல் 4-5 பின்னூட்டம் போட்டாச்சு இல்ல. இதுக்கு நீங்களும் குமரனும் பதில் போட்டா மொத்தம் 10. அதிலேயும் ஒரு கேள்வி கேட்டு பதில் போட்டா 15.
இவ்வளவுதாங்க பின்னூட்ட கலை. இதைப்போயி தங்க மலை ரகசியம். தங்காத மலை ரகசியம் அது இதுன்னுகிட்டு.
// நீங்களும் ஏறக்குறைய என் வயது தானே. என்னை பார்ட்னர் என்று சொல்வதில் என்ன தயக்கம்?//
குமரன்
அது ஒண்ணுமில்லை, அக்கா, தலைவா, அண்ணான்னு கூப்பிட்டு தன்னை 25 வயது குமரனா காட்டிக்கிறது... :-)))
16ன்னு நினைச்சேன். இப்படி 25-ஆ பண்ணிட்டீங்களே :)
உங்களை அக்கான்னு கூப்பிடறேன். உங்களைப் பார்த்தா 25 வயசு ஆளுக்கு அக்கா மாதிரியா தெரியுது? நீங்களே உங்க வயசை சொல்லிடுவீங்க போல இருக்கே. அதான் மதுமிதா அக்காவுக்கு கூட சந்தேகம் வருது. :D
//உங்களை அக்கான்னு கூப்பிடறேன். உங்களைப் பார்த்தா 25 வயசு ஆளுக்கு அக்கா மாதிரியா தெரியுது? நீங்களே உங்க வயசை சொல்லிடுவீங்க போல இருக்கே.//
கொத்ஸ்,
நல்ல வேளை சொன்னீங்க, அந்த உலக ரகசியத்தை நானே உடைச்சிருவேன் போல்ருக்கே.
உங்களுக்கு 16ன்னே வச்சிக்கலாம்:-)))
//அதனால் என் வழக்கப்படி நான் இதற்கு ஒரு தனிப்பதிவு போடலாமென்று முடிவு செய்து விட்டேன். போட்டவுடன் எல்லாரும் வந்து பாருங்க. (இதெல்லாம் இல்லைன்னா, நான் எப்படி 50ஆவது பதிவு, 75ஆவது பதிவுன்னு பிலிம் காட்டறது?)//
கொத்ஸ்,
உங்க லொள்ளு பதிவைப் படிக்க ஆவலோ ஆவல்...
10 பதிவுக்குள்ளயே ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற அளவுக்கு எங்கேயோ போயிட்டீங்க... இன்னும் 50, 100ன்னு போனா.... சூப்பர்ஸ்டார் ஆகிடுவீங்க போலிருக்கே...
//இது எல்லா நட்சத்திரங்களுக்கும் நான் வழக்கமா பண்றது தானே. சிலர் போல உங்க எல்லாப் பதிவையும் படிச்சேன். நல்லா இருந்ததுன்னு கடைசி பதிவுல சொல்லிட்டுப் போயிடலாம் தான். ஆனா அது நட்சத்திரங்கள் எதிர்பார்க்கும் ஊக்கத்தைக் கொடுக்காதே. அதனால் முடிந்த வரை எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டம் போடுவதுண்டு.
//
குமரன்,
வாழ்க உம் தமிழ்த் தொண்டு :-)
//Selvan's approach//
//எது? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி குய்யோ முறையோன்னு புலம்பி அனுதாப ஓட்டு வாங்க முயற்சி செய்ததா? அது சரி. :-) //
இதெல்லாம் புத்திசாலித்தனமான அப்ரோச்தானே :
//ஓட்டு போடுவது முக்கியமான ஒரு கடமை.அதை செய்யும்போது பொறுப்புணர்ச்சிய்யொடு செய்ய வேண்டும்.
"மலர்களில் நான் மல்லிகை" என கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறான்
(மீரா) ஜாஸ்மின் தான் தற்போது புகழ் பெற்ற நடிகை.
"மலர்களிலே அவள் மல்லிகை" என பாட்டு இருக்கிறது.//
//இந்த விதிமுறையில் குழப்பம் இருக்கிறது.
ஒரு = 1. அதாவது
"வாக்காளர் 1 வலைபதிவு வைத்திருக்க வேண்டும்" என பொருள்.
அதாவது ஒன்றுக்கு மிகாமலும் ஒன்றுக்கு குறையாமலும் பதிவு வைத்திருக்க வேண்டும் என பொருள்.
இங்கு ஓட்டளித்தவர்கள் நிறைய பேர் நிறைய பதிவு வைத்திருப்பவர்கள் உதாரனம் மதுமிதா அவர்கள்.
நீங்கள் வாக்காளர் "கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு பதிவாவது வைத்திருக்க வேண்டும்" என சொல்லவில்லை
"ஒரு பதிவு வைத்திருக்க வேண்டும்" எனத் தான் சொன்னீர்கள்.
ஒன்றைத்தாண்டிய பதிவை வைத்திருப்பவர்களை ஓட்டளிக்க அனுமதித்ததுபோல் ஒன்றுக்கு குறைந்த பதிவு வைத்திருப்பவர்களையும் அனுமதிக்க வேண்டுகிறேன்.
//
//உங்கள் நட்சத்திர வார சிறப்பு போட்டிகள் மூலம் சோம்பிக் கிடந்த தமிழ்மணத்தை புத்துயிர் பெறச் செய்துள்ளீர்கள். அதற்கான உங்கள் உழைப்பும் ஆர்வமும் முன்னேற்பாடுகளும் போட்டி நடத்திய விதத்தில் தெரிந்தது.நன்ரிகள் பல.
Hats off to your organising capacity in the virtual world!//
//பொதுமக்கள் கருத்தையும் கவனத்தில் கொள்ளும் தேர்தல் ஆணையருக்கு நன்றிகள். //
நன்றி, மணியன் அவர்களே,
சிரம் தாழ்த்தி தங்கள் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்கிறேன்.
//நிலா, பதில் கொடுக்காத ஆள் நாந்தான். கணிணி சரியில்லாம போனதால இந்த தாமதம். //
அரசியல்ல இதெல்லாம் சகஜம் குருவே:-))
உண்மை தான் நிலா. செல்வனின் அப்ரோச் நன்றாகத் தான் இருந்தன. தருமி ஐயாவுக்கு ஏற்ற பார்ட்னர்.
//எல்லாரும் தெரியத்தானே இவ்வளவு மெனக்கிடறோம். இப்படி ரகசியம்ன்னு சொல்லிபோட்டீங்க?
இங்ஙன போய் பாருங்கக்கோவ்.//
கொத்ஸ், தமிழ் சமூகத்துக்கு நீங்க செய்யற சேவையைப் பாராட்டியே தீரணுமப்போவ்! வெளா வேணா எடுத்திறலாமா?
எங்க உங்க ரசிகர் மன்றத் தலைவியைக் காணும்?
Post a Comment
<< Home