மந்திரச் சிற்பிகள் 2

முதல் பாகத்தை படிக்க இங்கே போங்க::
http://nilaraj.blogspot.com/2006/03/1.html


பதில் சொல்லிச்சு. என் முறை வந்ததும் 'அநியாயத்துக்கு போர் அடிச்சது. நான் ஒண்ணுமே கத்துக்கலை'ன்னேன். மனுஷன் என்னை விநோதமாத்தானே பாத்திருக்கணும்? என்னை ஆச்சரியமாப் பார்த்திருக்கார். பிறகு வேலை தொடரத் தொடர ஒவ்வொரு கட்டத்திலயும் என்னோட பலத்தை எனக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான். ஒரு நல்ல இஞ்சினியர்னு பேர் எடுத்தேன்னா (நம்புங்க சாமி :-))) அதுக்கு அடிப்படை அவர் போட்டதுதான். எனக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு நான் நெனச்சப்ப 'உனக்கு எவ்வளவு தெரியும்னு காட்றேன் பார்'ங்கற மாதிரி பதிலை என்கிட்டருந்தே வரவழைப்பார். நல்ல வாத்தியார் - கல்வில மட்டுமில்ல; வாழ்க்கையிலயும்.
அதுக்கப்பறம் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில, சேந்து ஒரு வருஷத்திலேயே திடீர்னு கூப்பிட்டு SWOT Committeeல இடம் கொடுத்தாங்க. அடுத்த 'ஆங்?'. கமிட்டில மக்களெல்லாம் ஜாம்பவான்கள். நான்தான் அதில சின்னது. நம்மளை எதுக்கு எப்படி எடுத்தாங்கன்னு ஒரே ஆச்சரியம். ஒரு நானூறு பேரு வேலை பார்த்த எங்க கம்பெனியோட Strength, weakness, Opportunities, Threats பற்றி அனலைஸ் பண்ற கமிட்டி அது. கமிட்டில மொத்தம் 12 பேருன்னு நினைக்கிறேன். நேர சேர்மனோட கமிட்டி மீட்டிங். எந்த நேரம் நம்மோட கத்துக் குட்டித்தனம் வெளிப்படுமோன்னு திக்திக்குங்குது. திடீர்னு சேர்மன் என்னைப் பாத்து ஏதோ கேக்கறாரு. 'அம்புட்டுதான், உன் வேஷம் கலைஞ்சது''னு ஒரு பக்கம் பதறுது. என்னோட மறுபக்கம் அவருக்கு ஏதோ பதில் சொல்லுது. 'வெரிகுட் சஜஸன்'ங்கறாரு மனுஷன்!
ஆஹா... தப்பிச்சோம்னு நெனச்சால் 'இன்னும் ரெண்டு வாரத்தில உங்களோட யோசனையை டீடெய்ல்டா பிரசன்ட் பண்ணுங்க'ங்கறாரு. நம்ம பட்டிக்காட்டு இங்கிலீஷை வச்சுக்கிட்டு ப்ரசன்டேஷன் கொடுத்து எப்படியோ தப்பிச்சோம். அப்புறம் ஆபீஸ்ல எந்த விழான்னாலும் அதில அமைப்பாளரா நம்மமளையும் சேத்துக்கிடுவாங்க. அந்த அனுபவங்கள்தான் ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணை பட்டணத்துக்குக் கொண்டு வந்திச்சு. கார்ப்பொரேட் கல்சர் அங்கேதான் கத்துக்கிட்டேன். இப்படி அவங்க என்னை அடையாளம் கண்டு அந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்காட்டி இதெல்லாம் எனக்குப் பண்ண முடியும்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. என்னுடைய பல பரிமாணங்கள் இந்த வாய்ப்பில் எனக்குத் தெரிஞ்சது. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமான சிற்பி யாருன்னு தெரியாட்டாலும் அந்த நிறுவனைத்தை நன்றியோட
நினச்சுக்கறேன்.

நல்லதை எங்கேயாவது பார்த்தா வாய்விட்டுப் பாராட்டச் சொல்லுது; மனுஷங்களைப் பாத்தா நல்லதா ரெண்டு வார்த்தை சொல்லணும்னு தோணுது - ஏன்னா அப்படிச் சொன்னா எப்படி இருக்கும்னு நமக்குக் காமிச்சிட்டாருல்ல ஜிம்?
அதையும் விட ஒருத்தர் நம்மளைப் பாத்து 'ஸ்பெஷல்'னு ஏத்திவிட்டா அவங்க அப்படி நினைக்கறதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்னு ஒரு பொறுப்பு தானா வருதுல்ல... முயற்சி செய்யறேன்... எங்க முடியுது!
அடுத்து வரப் போற கடைசி எபிசோட்ல நம்ம ஹீரோ ரீ என்ட்ரி. மிஸ் பண்ணிடாதீங்க, சரியா?
12 Comments:
நட்சத்திர வாரத்தில் உன்களை பாதித்தவர்களை பற்றிய பதிவு நல்ல தேர்வு.
சீக்கிரம் ஹீரோவை பத்தி சொல்லுங்க!
வெளிகண்ட நாதர்,
கதாநாயகர் ரொம்ப வெக்கப்படறாரு :-))
உட மாட்டோம்ல...
அடடே! இது வித்தியாசமான ஆட்டோகிராஃபா இருக்கே? ஹீரோ எண்ட்ரிக்காக தான் வெயிட்டிங். அவருக்கு ஃபைட் சீக்வன்சு எல்லாம் வச்சிருக்கீங்க தானே? இல்ல அவரை சாஃப்டான ரொமாண்டிக் ஹீரோவா காட்ட உத்தேசமா?
ஆகா நல்லதொரு தேர்வு. அருமையான விளக்கங்கள். நிகழ்வுகள். செய்திகள்.
thanks Cyril
//அவருக்கு ஃபைட் சீக்வன்சு எல்லாம் வச்சிருக்கீங்க தானே? //
கைப்பு, நம்ம அடிவாங்குறதுல உங்களுக்கென்னப்பு அம்புட்டு சந்தோஷம்? :-)))
அக்கா,
கைப்பு அடிவாங்க்குவதற்கே பிறந்தவர். அவரைப் போய் இப்படி கேக்கறீங்களே.
//அக்கா,
கைப்பு அடிவாங்க்குவதற்கே பிறந்தவர். அவரைப் போய் இப்படி கேக்கறீங்களே. //
கொத்து மாதிரி ஆளுங்களோட சங்காத்தம் இருந்தா அடி மட்டும் தான் வாங்க முடியும்...பின்ன நல்ல பேரும் பாராட்டுமா கெடைக்கும்?
//பின்ன நல்ல பேரும் பாராட்டுமா கெடைக்கும்?//
நம்ம ஊருல ஒரு பழக்கம். எவனையும் நேரா பாத்து நல்லதா நாலு வார்த்தை சொல்ல மாட்டான். அது கடவுளே இருந்தாலும், பித்தான்னுதான் ஆரம்பிப்பான். அப்படியே பளகி போச்சுல்லா.
அது மாதிரி நம்ம சொல்லறது எல்லாம் பாராட்டுதான் சாமி. (ரொம்ப டென்சனாவரீங்க, விலகறதுக்கு முன்னாடி சமரசம் பேசிருவோம். )
//கைப்பு அடிவாங்க்குவதற்கே பிறந்தவர். அவரைப் போய் இப்படி கேக்கறீங்களே.//
கைப்புள்ளன்னு பேற வச்சுக்கிட்டு போடுத ஆட்டம் கொஞ்சமா பாருங்க...
எனக்கும் சேத்து நாலு போடு போடுங்கப்பா.....
:-)))))
//ஆகா நல்லதொரு தேர்வு. அருமையான விளக்கங்கள். நிகழ்வுகள். செய்திகள்.//
ராகவன்
இவ்வளவு லேட்டா நன்றி சொல்றதுக்கு ஸாரி.
Post a Comment
<< Home