பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை
பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை. பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை' என்பது போன்ற ஒரு வசனம் பைபிளில் உண்டு. எனக்குப் பறவைகளைக் காணும்போதெல்லாம் இதுதான் தோன்றும். என்னைப் பொறுத்தவரை பறவை என்பது சுதந்திரத்தின் அடையாளம். இறக்கைகளை விரித்தபடி மனம் போன போக்கில் காற்றில் மிதப்பதைப் போல சுகம் என்ன இருக்கும். ஏதேனும் ஒரு பிறவியிலாவது பறவையாய்ப் பிறக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. (ஆனா கோழியா மட்டும் பிறந்திடக்கூடாதுப்பா... விதவிதமா சமைச்சிருவாங்கல்ல :-))
என் பறவைக்காதல் எபோது ஆரம்பித்தது என்று நினைவில்லை. சிறுவயதில் வீட்டில் கூடு கட்டும் சிட்டுக் குருவி தத்தித் தத்தி குப்பையைக் கிளறுவதைப் பார்த்து பரிதாபப்பட்டு அரிசி மணி கொடுத்து அது கொத்திக் கொண்டு போவதை ஆசையாய்ப் பார்த்திருக்கிறேன். பம்பு செட்டில் மறைந்து கொண்டு மைனா தன் குஞ்சுக்கு இறை ஊட்டுவதைக் காண தவமிருந்த காலங்கள் உண்டு. எவ்வளவு நேரமானாலும் கிணற்றுப் பக்கவாட்டுச் சுவரிலுள்ள கூட்டிலிருக்கும் மைனாக் குஞ்சுகள் தம் ஆரஞ்சு நிற வாயைத் திறந்து தன் தாயிடம் இரை வாங்கிக் கொள்வதை.... மேலும்
21 Comments:
என்னடா உலகம், அதுக்குள்ள மறந்துட்டாங்கப்பா:-)))
இன்னும் மறக்கல. நீங்க நிலாச்சாரலுக்கு வெச்ச baitஐயும் கடிச்சி, அங்க போய் fontகளோட போராடி, எப்படியோ முழு பதிவையும் படிச்சி, அப்பிடியே பூரிச்சிப் போய்........ சரி, இதுக்கு மேல வேண்டாம் :) ஒரே ஒரு எண்ணம் மட்டும் கொஞ்சம் உறுத்திச்சு. "பறவைகளுக்குக் கவலையில்லை, அவை அழுவதில்லை......." அப்பிடிங்கற கருத்த கொஞ்சம் அதிகப்படியா வலியுறுத்தின மாதிரி இருந்துச்சு. என்ன இருந்தாலும் அது ஒரு perception (அனுமானம்?) தானே? இப்பிடியெல்லாம் கேட்டா poetic licenseனு பதில் வரும். நடத்துங்க :)
பறவைக் காய்ச்சல்னு சொல்லி பறவைகளை கூட்டம் கூட்டமா, ஒட்டு மொத்தமா அழிக்கும் (culling) நடவடிக்கைகளப் பத்தி என்ன நினைக்கிறீங்க? எப்படியும் அவை இறையாக வேண்டியவைதானேன்னு எண்ண வாய்ப்பிருக்கு. இருந்தாலும், எனக்கு என்னவோ அது மனிதாபிமான செயலாப் படல்ல.
நிலா
அதுக்குள்ள எல்லாம் மறக்கல..நேரம் கிடைக்கும் போது ஒரு பட்டியல் இருக்கு. வந்து கட்டாயம் பாப்போம்ல :-)).
உங்களுக்கு ஒரு பிறவி எஸ்.பி.பி மகளாக, இன்னொன்னு குருவியாகவா...பேசாம எஸ்.பிபி-ய குயிலா படைச்சி, உங்களை அவருக்கு மகளா பிறக்க சொல்லிறலாம்..ஹா ஹா..அப்போ நீங்களும் குயிலாகிடுவீங்க..மூனாவது ஆசையும் உங்களுக்கு நிறைவேறிடும் :-)))
கட்டுரையை நிலாசாரல் போய் படிச்சேன். பறவைல ரசிக்க நிறைய இருக்கு. நிறைய ரசிச்சி எழுதி இருக்கீங்க..நான் கூட ஒரு தடவை ஒரு குருவி கூட்டுல போய் அதோட ரெண்டு குஞ்சை தூக்கிட்டு வந்து ப்ரை பண்ணிட்டேன் :-)..பயந்துட்டீங்களா :-)).. இல்ல..இல்ல..ஒரு சட்டில ஓட்டைய போட்டு அதுக்குள்ள அத வச்சி செவத்துல தொங்க போட்டுட்டேன். அதோட தாய் குருவி அங்கேயே வந்து தங்கிட்டு..அப்புறம் அது சாப்பாடு கொண்டு வருவதை எல்லாம் வீட்டுல இருந்தே பார்ப்பேன். அப்புறம் ரெக்கை முளைச்சவுடனே பறந்து போச்சி..
நீங்களும் பறவை பற்றி சொல்லிருக்கீங்க..நானும் புராணத்துல ஒரு கிளி கதை சொல்லி இருக்கேன். நேரம் கெடைக்கும் போது போய் பாருங்க நிலா.
வரட்டா :-))
/இன்னும் மறக்கல.//
நீங்கதான் உண்மையான நண்பரப்பா:-) வந்தனம்:-)
// நீங்க நிலாச்சாரலுக்கு வெச்ச baitஐயும் கடிச்சி, அங்க போய் fontகளோட போராடி, எப்படியோ முழு பதிவையும் படிச்சி, அப்பிடியே பூரிச்சிப் போய்........ சரி, இதுக்கு மேல வேண்டாம் :) //
சமர்த்து... ஆமா ஏன் எழுத்துரு பிரச்சனை? IE பயன்படுத்திறதில்லையோ? சரி எப்படியோ, படிச்சீங்களே... பெரிய விஷயம்
//ஒரே ஒரு எண்ணம் மட்டும் கொஞ்சம் உறுத்திச்சு. "பறவைகளுக்குக் கவலையில்லை, அவை அழுவதில்லை......." அப்பிடிங்கற கருத்த கொஞ்சம் அதிகப்படியா வலியுறுத்தின மாதிரி இருந்துச்சு. என்ன இருந்தாலும் அது ஒரு perception (அனுமானம்?) தானே? இப்பிடியெல்லாம் கேட்டா poetic licenseனு பதில் வரும். நடத்துங்க :) //
அதுக்குத்தானய்யா வைரமுத்துவையும் மேற்கோள் காட்டிருக்கோம்:-))
அதுவும் இல்லாம உஷாரா 'என்னைப் பொறுத்தவரை...' அப்படின்னு போட்டு இது எங்க ஃபீலிங்தான்னு சொல்லிருக்கோமில்ல :-))
//பறவைக் காய்ச்சல்னு சொல்லி பறவைகளை கூட்டம் கூட்டமா, ஒட்டு மொத்தமா அழிக்கும் (culling) நடவடிக்கைகளப் பத்தி என்ன நினைக்கிறீங்க? எப்படியும் அவை இறையாக வேண்டியவைதானேன்னு எண்ண வாய்ப்பிருக்கு. இருந்தாலும், எனக்கு என்னவோ அது மனிதாபிமான செயலாப் படல்ல.//
கொடுமையாதான் இருக்கு. பதறத்தான் செய்யுது... ஆனா இதுக்கு வேற என்ன வழின்னும் தெரியலையே?
உண்டு எச்சங்களில் விதையை விதைப்பதே பறவைகள் தான் அதில் கிடைக்கும் தானியம், பழங்களை உண்பதும் அவைகளே. பாது காப்பதில்லை
தண்ணீல் பாய்ச்சுவதில்லையே?
//அதுக்குள்ள எல்லாம் மறக்கல..நேரம் கிடைக்கும் போது ஒரு பட்டியல் இருக்கு. வந்து கட்டாயம் பாப்போம்ல :-)).//
கிராமத்து மனுசங்க மறக்க மாட்டாங்கன்னு காட்டிட்டீங்கல்ல:-)
//உங்களுக்கு ஒரு பிறவி எஸ்.பி.பி மகளாக, இன்னொன்னு குருவியாகவா...பேசாம எஸ்.பிபி-ய குயிலா படைச்சி, உங்களை அவருக்கு மகளா பிறக்க சொல்லிறலாம்..ஹா ஹா..அப்போ நீங்களும் குயிலாகிடுவீங்க..மூனாவது ஆசையும் உங்களுக்கு நிறைவேறிடும் :-)))
//
சிவா,
செம லாஜிக்கா இருக்கே. :-))
//அதோட தாய் குருவி அங்கேயே வந்து தங்கிட்டு..அப்புறம் அது சாப்பாடு கொண்டு வருவதை எல்லாம் வீட்டுல இருந்தே பார்ப்பேன்.//
ரொம்ப நல்லா இருக்குமில்ல?
இப்ப வீடு, ஆபீஸ் ரெண்டு இடத்திலயும் நெறைய பறவைகள். உக்காந்து பாக்கத்தான் நேரம் வாய்க்கமாட்டேங்குது :-(
//நானும் புராணத்துல ஒரு கிளி கதை சொல்லி இருக்கேன். நேரம் கெடைக்கும் போது போய் பாருங்க நிலா.//
பாத்து கருத்தும் சொல்லியாச்சு. நல்ல ஜாலியான பதிவு
//** கிராமத்து மனுசங்க மறக்க மாட்டாங்கன்னு காட்டிட்டீங்கல்ல:-) **// அது நெசந்தாங்க. என்ன நாஞ்சொல்றது.
//* பாக்கத்தான் நேரம் வாய்க்கமாட்டேங்குது :-( **//
வாழ்க்கையே மாறி போச்சு பாத்தீங்களா.. மனசுக்கு எது சந்தோசம்னு தெரியுதோ அதை எல்லாம் விட்டுட்டு ஓடிகிட்டே இருக்கோம்..ம்ம்ம்ம். பெரு மூச்சு தான் வருது நிலா.
நிலா,
பைபிளில் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
//இன்னக்கிதான் முதமுதலா நிலாச்சாரலில் கால் பதித்தேன். //
பாரதி
உங்களை எல்லாம் வரவைக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு பாருங்க...:-)
தங்கள் வரவு நல்வரவாகுக:-)
என்னார்
வருகைக்கு நன்றி.
//உண்டு எச்சங்களில் விதையை விதைப்பதே பறவைகள் தான் அதில் கிடைக்கும் தானியம், பழங்களை உண்பதும் அவைகளே. பாது காப்பதில்லை
தண்ணீல் பாய்ச்சுவதில்லையே? //
வித்தியாசமான சிந்தனை:-)
நல்ல கட்டுரை நிலா. உங்களின் எழுத்துக்களை அவ்வப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன் பின்னூட்டமுடியாத அவசரங்களுடன். இன்று உங்களின் பறவைக்காதல் இழுத்து எழுதவைத்துவிட்டது. பறவைகள் விடுதலையின் அடையாளங்கள் அவை கூண்டுக்குள் அடைக்கப்படாதவரை.
////அருகில் இருக்கும் அழகான விசயங்களை மறந்து வாழ்க்கை துரத்தும் திசையில் ஓடிக் கொண்டிருக்கையில் இது போன்ற இழப்புகள் ஏராளம். /////
மிகச்சரி பாரதி.
நிலா,
நல்லா இருக்கு.
//வாழ்க்கையே மாறி போச்சு பாத்தீங்களா.. மனசுக்கு எது சந்தோசம்னு தெரியுதோ அதை எல்லாம் விட்டுட்டு ஓடிகிட்டே இருக்கோம்..ம்ம்ம்ம். பெரு மூச்சு தான் வருது நிலா.//
சிவா,
இதில கொடுமை என்னன்னா இக்கரைக்கு அக்கரைப் பச்சைங்கறமாதிரி ஆயிட்டுது.
கிராமத்தில இருக்கும்போது வெளில வரத் தவியா தவிச்சோம்... வந்த பிறகு அங்க திரும்பணும்னு தவிக்கிறோம்...
அதுதான் வாழ்க்கை!!!
பறவைங்கன்னு சொன்னதும் நம்மளதையும்
பறவை எடுத்து விடலேன்னா எப்படி?
கடும் குளிரிலும்
கொட்டும் மழையிலும்
குயில் புடிக்க
கூட்டமாய் அலைந்தது!
ஆய்ந்து எடுத்தால்
அரை கைப்புடிக்குள்
அடங்கும் சின்ன குயில்
அதன் சுவை மட்டும் அறிந்த நான்
குரலோசை மறந்தேனே!
இன்றும் கேட்கிறது
இனிய அந்த ஓசை
திரும்பி பார்க்கையில்
தெரிகிறது
வருந்தி என்ன பயனென்று
சபதம் கொண்டேன்
இனி நான்
மறந்தும்
மரங்கள் வாழுயிருக்கு
மரணம் தர மாட்டேன்
நிலா,
நானும் பறவைகளின் ரசிகன். பறவைகள் இயர்க்கையின் அற்புதமானப் படைப்புகள். பறவைகள் மோனோகாமிகள். அவைகள் தன் ஜோடிகளை உயிருள்ளவரை மாற்றுவதில்லை!!. பறவை கள் அழும். அன்பு கிடைக்கவில்லையென்றால் அவை மன உழைச்சல் அடைந்து தன்னை தானே வருத்திக் கொள்கின்றன. தன் சிறகுகளை பிடுங்கிக் கொண்டு மொட்டையாக காட்சியளிக்கும் பறவைகள் டிப்ரெஸ்டு பறவைகள். இவைகளுது தேவையெல்லாம் சிறிது உணவும் நிறைய அன்பும்.
இவையெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்றால் நான் வளர்க்கும், எனது இரண்டாவது மகன், நீமோ என்ற பெயர்கொண்ட காகடீல் (Cockatiel) இனத்தைச் சேர்ந்த என் செல்ல கிளிதான். இவனைப் பற்றி என் அரேபிய அனுபவத் தொடருக்குப் பிறகு பதிகிறேன்.
//அருகில் இருக்கும் அழகான விசயங்களை மறந்து வாழ்க்கை துரத்தும் திசையில் ஓடிக் கொண்டிருக்கையில் இது போன்ற இழப்புகள் ஏராளம்.
//
உண்மைதான், பாரதி
அதனால்தான் அந்தந்த கணத்தில் வாழச் சொல்கிறார்கள் ஞானிகள்!
//நல்ல கட்டுரை நிலா.//
நன்றி, செல்வநாயகி
//உங்களின் எழுத்துக்களை அவ்வப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன் பின்னூட்டமுடியாத அவசரங்களுடன். இன்று உங்களின் பறவைக்காதல் இழுத்து எழுதவைத்துவிட்டது. //
:-)
//பறவைகள் விடுதலையின் அடையாளங்கள் அவை கூண்டுக்குள் அடைக்கப்படாதவரை. //
ஆஹா... சரியாகச் சொன்னீர்கள். கூண்டுக்குள் கீச்கீச்சென்று ஆனந்தமாய் அவை பாடிக்கொண்டிருந்தாலும் அப்படி அடைக்கப்பட்டிருக்கும் லவ் பேர்ட்ஸைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு எழத்தான் செய்கிறது
//
பறவைங்கன்னு சொன்னதும் நம்மளதையும்
பறவை எடுத்து விடலேன்னா எப்படி?//
தலைவியா, கொக்கா:-)
கலக்கிட்டீங்கள்ல
சிங். செயகுமார்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. சரியான ஆசுகவியாக இருப்பீர்கள் போலிருக்கிறதே.
//பறவை கள் அழும். அன்பு கிடைக்கவில்லையென்றால் அவை மன உழைச்சல் அடைந்து தன்னை தானே வருத்திக் கொள்கின்றன. தன் சிறகுகளை பிடுங்கிக் கொண்டு மொட்டையாக காட்சியளிக்கும் பறவைகள் டிப்ரெஸ்டு பறவைகள். இவைகளுது தேவையெல்லாம் சிறிது உணவும் நிறைய அன்பும். //
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்
//இவையெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்றால் நான் வளர்க்கும், எனது இரண்டாவது மகன், நீமோ என்ற பெயர்கொண்ட காகடீல் (Cockatiel) இனத்தைச் சேர்ந்த என் செல்ல கிளிதான். இவனைப் பற்றி என் அரேபிய அனுபவத் தொடருக்குப் பிறகு பதிகிறேன்.//
படத்துடன் நீமோவைப்பற்றி எழுதுங்கள்
நன்றி
Post a Comment
<< Home