மந்திரச் சிற்பிகள் 3
முதல் 2 பாகத்தை படிக்க இங்கே போங்க:
http://nilaraj.blogspot.com/2006/03/1.html
http://nilaraj.blogspot.com/2006/03/2.html
இங்கதான் வாழ்க்கைல ஒரு திருப்புமுனை...
லண்டன் வந்த புதுசுல ஒரு தமிழ் இணையதளத்துக்கு வாலன்டியரா வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். திருப்தியா இல்லை. நம்ம பதி ராஜு, 'நீயே ஒரு தமிழ் சைட்
ஆரம்பிச்சிறேன்'னார். அவருக்கென்னெ நெலாவைப் புடின்னு சொல்லிட்டுப் போயிருவாரு. ஆகிற காரியமான்னு பேசாம இருந்துட்டேன். ஆனா அவர் திரும்பத் திரும்ப என்னால முடியும்னு சொல்லிக்கிட்டே இருந்தார். எறும்பு ஊற ஊற கல்லே தேயுமாம், மனுஷி தேயமாட்டாளா?
இப்படி இணையம்கற சமுத்திரத்தில தள்ளிவிட்டுட்டு ஆள் எட்டி நின்னு வேடிக்கை பாக்கறது. நம்ம முழுகற மாதிரி தெரிஞ்சா ஓடி வந்து ஒரு கயித்தைப் போடறது, அப்பறம் திரும்ப ஒளிஞ்சிக்கிடறது. கயித்தப் பிடிச்சு கஷ்டப்பட்டு மேல வந்ததுக்கப்புறம் 'என்ன நீந்தறே நீ'ன்னு கடுமையா விமர்சனம் செய்யறது. முதல்ல ரொம்பக் கடுப்பா இருந்துச்சி 'இந்த ஆளு நம்மளத் தள்ளிவிட்டதுமில்லாம இப்படிக் கடிச்சு வேற குதறணுமா'ன்னு. நீந்த கத்துக்கறதுக்குள்ளா உசுரு போயில்ல வந்துச்சி. ஓரளவு நீந்தக் கத்துக்கிட்ட பெறகு பாத்தா நம்மள சுத்தி அழகழகா உசுருங்க... நம்ம கூட நீந்தறதுக்கு... அப்பறமென்ன, மெல்ல மெல்ல எல்லாருமா சேந்து சின்னச் சின்னக் கல்லா போட்டுக் கட்ட ஆரம்பிச்சோம்... இன்னைக்கு அது நிலாச்சாரல்னு ஒரு அழகான மாளிகையா வந்திருக்குன்னு நெனக்க பெருமையா இருக்கு.
'இந்த மாளிகை கட்ட நீதான்யா காரணம்'னு வீட்டுக்காரர்கிட்ட சொன்னா 'அட போடி, பைத்தியக்காரி... நீ கஷ்டப்பட்டுக் கட்டீட்டு என் பேரை ஏண்டி சொல்றே'ன்கறாரு. யாருங்க இதில பைத்தியம்?
நம்ம என்னமோ அதுக்கு அஸ்திவாரம் போட்டாம்னு வச்சுக்கிட்டாக் கூட, நம்ம கூட சேந்து கட்டின கூட்டுக்காரங்கதான் மாளிகை எந்திருச்சதுக்கு காரணம். உலகத்தில சந்து பொந்திலர்ந்துல்லாம் கல்லெடுத்துக் குடுத்துருக்காக... கஷ்டப்பட்டு சிமெண்ட் போட்டுருக்காக... எதுக்கு... இந்த மாளிகை தங்கமா துப்பும்னா? இல்ல சாமி, மனசந்தோசத்துக்கு... கட்ற மாளிகைல நம்ம சனமெல்லாம் தங்கட்டும்னுதேன்.
70 வயசு குமரர் ஜம்பு, அவரு குடும்பத்தையே கூட்டியாந்து கொத்துவேலைக்குட்டத சொல்லவா? அவரு தம்பி பத்மநாபன், பாத்து பாத்து கோபுரம் கட்றத சொல்லவா? எதுக்குன்னாலும் மொதல்ல நிக்கற இஞ்சினியரு ஏ.கே.ஆர சொல்லவா? கல்லு கொஞ்சங்காட்டி கொறையறாப்ல இருந்தா போட்டுக் குமிச்சிர்ற நாகராஜனைச் சொல்லவா? வீட்ல எம்புட்டு வேல இருந்தாலும் இந்த கூட்டுவேலைல நானும் என் பங்கை செஞ்சே ஆவேன்னு பாத்துப் பாத்து அலங்கரிக்கிற
சுகந்தியை சொல்லவா? கடைசி நிமிசம் வரைக்கும் தன் வீட்டு வேலை மாதிரி இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யற பூங்கொடியச் சொல்லவா? இல்ல, சின்னப் பசங்கன்னாலும் செட்டுமையா, செறப்பா தூக்கிக் குடுக்கற ஜோதி, கார்த்திக் பத்தியெல்லாம் சொல்லவா? யாரைச் சொல்ல யாரை விட.... பிரேமா, தெரஸா, சக்திதாசன், மணிவண்ணன், திருமலை, விக்னேஷ்.... இப்பிடி கல்லு சொமந்தவகள அடுக்கிக்கிட்டே போலாம்யா...
இதுல கொஞ்ச பேர இங்க பாக்கலாம்:
http://www.nilacharal.com/about.html
கதாநாயகர் ரோல் இதோட முடிஞ்சி போயிறலை. நிலாச்சாரல்லதான் நம்ம ஆட்டமே ஆரம்பமாச்சின்னு வச்சிக்கோங்களேன்...
ஏதோ ஒரு கூட்டத்தில லண்டன் சத்சங்கம் ப்ரசிடென்ட் சுவாமிநாதனை சந்திச்சேன். எவ்வளவோ ஜாம்பவான்களுக்கு ரொம்பத் திறமைசாலின்னு இந்தக் கத்துக்குட்டியைப் பெருமையாய் அறிமுகம் செய்து வச்சார்! நான் என்ன செஞ்சுட்டேன்னு என்னை திறமைசாலின்னு சொல்றாருன்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அவர் என் மேல நம்பிக்கை வச்சு கொடுத்த பொறுப்புகள் ரொம்பப் பெருசு. திடீர்னு நீங்கதான் இந்த விழாவைத் தொகுத்து வழங்கணும்பார், தீடீர்னு உங்களை பட்டிமன்றத்தில போட்ருக்கேன்பார்... இதெல்லாம் நான் முன்ன பின்ன செஞ்சு அவர் பாத்ததுமில்லை. நான் செஞ்சதா அவர்கிட்ட சொன்னதுமில்லை. எங்கருந்து அவருக்கு இந்த நம்பிக்கை வந்தது? முன்பின் பார்த்திராத சிலர் கூட 'சுவாமிநாதன் உங்களைப்பத்தி சொல்லிருக்கார்'ம்பாங்க. இப்பிடி அவரோட நம்பிக்கையை எனக்குப் படிகளா அமைச்சுக் கொடுத்துட்டார். நானென்ன செய்து இந்தக் கடனை எல்லாம் தீர்க்கப் போறேனோ தெரியலை.
வருஷத்துக்கு ஒரு சில கதைகள், கட்டுரைகள்னு நிலாச்சாரல்ல எழுதிக்கிட்டிருந்த என்கிட்ட 'உங்க தமிழ் மிக அழகு. அதிகம் எழுதுங்கள்' அப்படீன்னு ஏத்திவிட்டது கவிஞர் புகாரி. அப்புறம் மாலன் போன வருடம் திசைகள் பெண்கள் சிறப்பிதழுக்கு எழுதச் சொல்லி கேட்டப்ப இன்னொரு 'ஆங்?' 'மாலனுக்கு எப்படி என்னைத் தெரியும்'னு. ஏன்னா நான் அப்போ நிலாச்சாரல் தவிர வேற எதிலயும் எழுதலை. உண்மையா சொன்னா அதுக்கப்புறம்தான் நிறைய எழுத ஆரம்பிச்சேன்.
காலேஜ்ல ராம்கின்னா அதே லெவல்ல இப்போ சத்தி சக்திதாசன். நிபந்தனையில்லாத ஆதரவு. அவரோட முதல் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை புத்தக ஆய்வு செய்யச் சொல்லி அன்புக் கட்டளை போட்டார். அசந்துட்டேன் - நான் மேடையில பேசி அவர் முன்னே பின்னே
பார்த்ததில்லை. புத்தக விமரிசனங்கள் கூட நான் எழுதினதில்லை. மனுஷனுக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கை வர்றதுக்கு போன ஜென்மத்தில நான் ஏதாவது செய்திருந்தால்தானுண்டு. புத்தக ஆய்வுரை நல்லா இருந்திச்சின்னு மக்கள் பாராட்டினாங்க. ஆனா பாராட்டு சக்திக்குத்தான் போகணும்னு எனக்குத்தான் தெரியும்.
நான் என்ன செய்தாலும்- 'டமார்'னு கீழேயே விழுந்தா கூட 'நல்லா விழுந்தீங்க'ன்னு நம்மள சுதாரிக்க வைக்கற ஆளு சக்தி. அவரோட எழுத்தை நான் குறை சொன்னா அதுக்காக எனக்கு நன்றி சொல்ற நல்ல மனுஷன்.
என்னடா, கதாநாயகர் ஒரு சீனுக்கு மாத்ரம் வந்துட்டு போயிட்டாருன்னு நெனக்காதீங்க. நான் இப்பிடி இணையத்தில சுத்திக்கிட்டும் எழுதிக்கிட்டும் இருக்கறதுக்கு பின்னால யாருங்கறீங்க... தலைவர்தான். நான் சின்ன ஸ்டெப்பா வச்சா 'ப்பூ... கடுகு மேல ஏறி நின்னுகிட்டு பெருமை வேறயா... அந்தா இருக்கு பாரு மலை... அதை ஏறுனா பெருமை. உனக்கு முடியும். செய்ய மாட்டங்கற'ன்னு போற போக்கில போட்டுட்டுப் போயிருவார். நமக்கு அவர் சொல்லிட்டா வேத வாக்கு ( பதிபக்தி... ஹி...ஹி...). அதில நான் ஏறும்போது பொறுமையா என்னோட எல்லா கோபதாபங்களையும் தாங்கிப்பார். ஏறி முடிச்சிட்டு அந்த ஆளைப் பாத்தா ஏதோ தானே பண்ணிட்டாப்ல முகத்தில பெருமை தாண்டவமாடும். எப்பவாவதுதான் அதை வாய்விட்டு சொல்றது. முக்காவாசி நேரம் அடுத்த மலையத் தேடிக்கிட்டிருப்பார், நம்ம
பாய் ஃப்ரண்ட்.
புதுசா யாரையாவது பாத்தா 'நான் ராஜு. நி(ர்ம)லாவோட ஹஸ்பெண்ட்'ன்னு சொல்லிட்டு சிரிப்பார். 'என்னைவிட என் ஒய்ஃபைத்தான் நெறய பேருக்குத் தெரியும். அதான்'ம்பார்... எத்தனை பேருக்கு இந்த பரந்த மனசு வரும், சொல்லுங்க.
பத்திரிகை ஆசிரியரா இருக்கறதினால நமக்கு உலக ஞானம் நிறைய இருக்கும்னு வேற மக்கள் நெனப்பாங்க. அவரு அறிவில பத்தில ஒரு பங்கு கூட நமக்குக் கிடையாது. சில சமயம் காலேஜ்ல ராஜன் சொல்லிக் குடுத்து பரிச்சை எழுதன மாதிரி இவரு கருத்தை வச்சு கட்டுரை எழுதிருக்கேன்; ரேடியோ ப்ரோக்ராம் செஞ்சிருக்கேன். இவருதான் இந்த நிலாவுக்கு ஒளி தர்ற சூரியன் - அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும்
தங்கத் தாம்பாளத்தில எனக்கு பழம் வரலைன்னு எம்பாட்டுக்கு இருந்த என்னை 'அட, கூமுட்டை உனக்கு உழைச்சு சம்பாதிக்க வக்கிருக்கு'ன்னு ஒவ்வொரு கட்டத்திலயும் காட்டிக் குடுத்தவங்க இப்ப நான் சொன்ன எல்லாரும்தான். சம்பாதிச்ச கனிக்குத்தானே ருசி அதிகம்?
இவங்களுக்கெல்லாம் நான் பட்ட கடன் எத்தனை ஜென்மத்தில அடையுமோ, தெரியலை. இவங்க யாருமே என்கிட்ட எதுவுமே எதிர்பார்க்கலை. ஆனா எனக்குக் கிடைச்ச இந்தக் குட்டி மேடையில அவங்களை கௌரவப்படுத்தணும்னு எனக்குத் தோணிச்சு.
முதல் அத்தியாயத்தில சொன்ன மாதிரி, என்னோட நன்றி நவிலலைப் படிச்ச உங்களுக்கும், குறிப்பாக பின்னூட்டமிட்ட Srikanth, தருமி, தெய்வா, வெளிகண்டநாதர், ஜெய.சந்திரசேகரன், சிங் ஜெயகுமார், சிறில், கைப்பு, ராகவன் ஆகியோருக்கும் நன்றி நவில கடமைப் பட்ருக்கேன் :-)
9 Comments:
கதாநாயகனுக்கு இந்த கதாநாயகியின் சமர்ப்பணமோ! சூரிய ஒளியில் பிரகாசிக்கும் இந்த நிலா, இந்த ஒரு வாரமும் பொளர்ணமியாய் தான் ஜொலித்தது, அம்மாவாசையாக எந்த கிரகங்களும் நடுவே வராமல், என்றும் ஜொளிக்கட்டும் இந்த நிலா, இனிய நிலா, வாழ்த்துக்கள்!
'கதாநாயகர்' ரொம்ப கியூட்தான் :) விசாரிச்சதா சொல்லுங்க.
நானும் பாத்துட்டேங்க. உண்மையிலேயே உசரம் ஏறினவங்க எல்லாருமே, அட, நான் என்னங்க பண்ணிட்டேன்..இதெல்லாம் சும்மா ஜுஜுபி அப்டின்னுதான் சொல்றாங்க...
நல்லா இருங்க
உங்க பதியையும் ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்க.
சந்திரனும் சூரியனும்
எந்திர கதியில்
பம்பரமாய் சுழன்று
மந்திர புன்னைகையால்
இந்திர லோகத்திற்கும்
எடுத்துக்காட்டாய்
மொத்ததில் ஓர் நிலவாய்
வாழ்த்துக்கள் நிலாபதி!
அருமையான பதிவு மேடம்! தாங்கள் கடந்து வந்த பாதையையும் அதில் சந்தித்த மனிதர்களையும் இன்னும் மறக்காமல் தக்க நேரத்தில் தங்களுடைய நன்றியையும் நவின்றிருக்கிறீர்கள். தாங்கள் தங்கள் கணவரின் துணையோடு மேன்மேலும் சாதனைகளைப் புரியவும் பல சிறப்புகளை அடையவும் என் வாழ்த்துகள்.
அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வாக்குபடி உங்கள் அடக்கமே உங்கள் உயர்வுக்கு காரணமாயமைந்ததை பதித்திருக்கிறீர்கள். There is a woman behind every successful man என்பதுபோல உங்கள் சாதனைகளுக்கு உங்கள் அன்புக் கணவர் துணையாக இருந்திருப்பதையும் அதனை நீங்கள் நினைவு கூர்ந்துருப்பதுவும் மனைமாட்சி.இந்நல்லறம் இனிதே தொடர வாழ்த்துக்கள்!!
உங்கள் நட்சத்திர வாரம் சூரிய சந்திரருடன் வலைப்பதிவு வானில் ஜொலித்தது.
//சூரிய ஒளியில் பிரகாசிக்கும் இந்த நிலா, இந்த ஒரு வாரமும் பொளர்ணமியாய் தான் ஜொலித்தது, //
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி, வெளிகண்ட நாதர்
//'கதாநாயகர்' ரொம்ப கியூட்தான் :) விசாரிச்சதா சொல்லுங்க.//
சொல்லீட்டேன், Viuce of Wings. He says hi
//royal salute to the SUN and the MOON//
Bharathi,
Accepting and saluting back:-))
thanks a lot
Post a Comment
<< Home