*** நட்சத்திர பேட்டி ***
நட்சத்திர வாரத்து ஸ்பெஷலா ஒரு நட்சத்திரப் பேட்டி செய்யலாம்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்லர்ந்து சண்டக்கோழி விஷால் வரைக்கும் ட்ரை பண்ணியாச்சு. ஒண்ணும் நடக்கல. அதினால என்ன, நம்மதான் இந்த வாரத்து ஸ்டார் ஆச்சே. அதனால நம்ம பேட்டியைப் போட்டா போச்சுன்னு முடிவு பண்ணினேன். நம்ம இன்டர்வ்யூவை நம்மளே பண்ணினா நல்லா இருக்காதுல்ல, அதான் நம்ம ரசிகக் கண்மணிகளாகிய (அடிக்க வராதீங்கப்பா:-) உங்கள்கிட்டேயே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன்.
இதில பல நன்மைகள் இருக்கு. நம்மைப் பற்றி சுயதம்பட்டம் அடிக்கிற வேலை மிச்சம். யாராருக்கு என்ன தெரியணுமோ கேட்டுத் தெரிஞ்சிக்கிடலாம்; பத்திரிகையாளராகணும்னு ஆசைப்பட்டவங்க ஆசையைப் பூர்த்தி செய்துக்கலாம்:-) அதோட நமக்கும் பேட்டி குடுத்த பழகினாப்ல இருக்கும்ல :-)))
இன்டர்வ்யூ பண்றது ஒண்ணும் லேசான விஷயம் இல்லீங்கப்பு. நல்ல கேள்விகள் கேட்கறதுக்கு ரிசர்ச் பண்ணணும். நல்ல பதில் கொண்டு வர்றதுக்கு சாமர்த்தியம் வேணும்; அதனால நல்ல கேள்வி கேட்கறவங்களுக்கு என் ஆட்டோகிராஃப் போட்ட புகைப்படம் ஒண்ணு அனுப்பிவைப்பேன் :-))) (ஓடீறாதீங்க. சும்மா சொன்னேன்).
அப்புறம்... சும்மா கன்னா பின்னான்னு பெர்சனலா கேள்வி கேட்டா போட மாட்டேன். கேலி, கிண்டல் எல்லாம் இருக்கலாம். ஆனா ஒரு அளவோட இருக்கணும். சரிதானே?
முதல் கேள்வி கேட்கிறவங்களுக்கு ஒரு பட்டம் வேணா குடுக்கலாம் :-)))
வருங்கால முதல்வரை பேட்டி காண்கிற அரிய வாய்ப்பை இழந்துடாதீங்க. (பின்னே, ஸ்டார் ஆகியாச்சு. அதுக்கடுத்த படி அதுதானே:-)))
Shoot your questions!
முக்கியமான பின்குறிப்பு:
இந்தப் பதிவை வார துவக்கத்திலயே போடறதா இருந்தேன். ஆனா பூப்பறிக்க பொறப்பட்டதுல நேரம் பறந்திருச்சி. இதிலயும் எறங்கிட்டோம்னா நிலாச்சாரலோட 250வது இதழைக் கோட்டை விட்ருவோம்னு நிறுத்திட்டேன்.... இப்போ இது சும்மா ஒரு டம்மி பதிவு. ஆனாலும் வருங்கால முதல்வரைப் பேட்டி கண்டே ஆவேன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சீங்கன்னா, நடத்துங்க உங்க ஆட்டைய. நேரம் கெடைக்கும்போது பதில் சொல்றேன்.
51 Comments:
அன்புடன் நிலா !
ஆழமான நதியில் கணவன் ,மனைவி ,செல்ல குழந்தை,மற்றும் படகோட்டி இவர்கள் ஓர் சிறிய படகில் பயணம். பயணம் இனிதாக இருக்கும் ஒரு திருப்பத்தில் ஓர் கொடும் முதலை படகை துரத்தியது. இந்த விளையாட்டை எட்டி பார்த்த சிறுவனை கண்டு விட்டது முதலை! அவனின் சிறு கரத்தை கவ்வி பிடித்தது முதலை.இன்னும் ஓர் வினாடியில் அந்த குழந்தை முழுவதுமாய் முதலை வாயில்! அதே கணம் யாரேனும் நதியில் குதித்தால் குழந்தையை காப்பற்றலாம்! எப்படியோ ஓர் உயிர் பலி நிச்சயம் . யார் உயிரை இழப்பது?
நிலா, ஒவ்வொரு நட்சத்திர பதிவு முடிந்ததும், சூப்பர், நிறைவாய் இருந்தது, கலக்கிட்டீங்கன்னு
போடுவதே வழக்கமாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒருவிதமாய் கலக்குறீங்க. போன வார பச்சோந்தி,
அதுக்கு முன்னாடி மோகன் தாஸ், அதுக்கு முன்ன கிராமத்து குயில் சிவா... இப்படி வெரைட்டியா
செய்வதால், வாழ்த்த வார்த்தைகள் இல்லை. நிலா, உங்க சுறுசுறுப்பும், பன்முக பார்வையும், வித்தியாச
சிந்தனைகளும்... ஒவ்வொரு பதிவையும் விளக்கமாய் அலச வேண்டும் என்றிருந்தேன். மிக கவர்ந்தது
மதங்களைப் பற்றிய உங்கள் பார்வையும், கல்கி கதையும். கதையின் முடிவு இரண்டாவது வரியில்
உகிக்க முடிந்தது என்றாலும், மண்வாசனை வீசும் எழுத்துக்கு .. கையை குடுங்கள்.
என் கேள்வி- உங்கள் பலம் எது? பலகீனம் எது? ( இதில் எந்த நபரையும் சொல்லக்கூடாது. உங்க பிளஸ், மைனஸ் பாயிண்ட சொல்லணும்)
நெசமாவே பேட்டி எடுக்க மண்டையில மசாலா வேணும் போலிருக்கு. ஒன்னுமே தோண மாட்டுது உருப்படியா.
ஆனா நான் கேக்க நெனச்ச கேள்வி சில:
1. மம்சாபுரம் எங்கிருக்கு? எந்த மாவட்டம்? மம்சாபுரம் எங்கிருக்குன்னு கூட தெரியாம எப்படிடா நீ தமிழ்நாட்டுல இருந்தேனு கேக்காதீங்க. கூகிள்ல தேடியும் கெடக்கலை.:)-
2. ஒரு பதிவுல ஸ்பேஸ் டெக்னாலஜி வகுப்புல படிச்சதா சொன்னீங்க. நீங்க கெமிக்கலுக்கு அப்புறம் எம்.டெக் ஏரோஸ்பேஸ்ல பண்ணீங்களா? இல்ல ஸ்பேஸ் டெக்னாலஜி பி.டெக்லியே இருந்துச்சா?
3. அண்ணா பல்கலைக்கழகத்துல நீங்க எந்த காலேஜ்? ஏ.சி.டெக் தானே?
(கேள்வி ரொம்ப சில்லறை தனமா இருந்தா ஒரு தனி மெயில் அனுப்புச்சாலும் சரி தான்)
சிங்.செயகுமார். நீங்கள் தெரிந்தே கேட்டீர்களா இல்லை சாதாரணமாய் கேட்டீர்களா தெரியவில்லை. ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியில் உள்ள நிகழ்ச்சி அண்மையில் உண்மையிலேயே நடந்ததாக என் மனைவியார் எங்கோ படித்துவிட்டு ரொம்ப துன்பப்பட்டு வந்து சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் இந்தக் கேள்வியை நட்சத்திரத்திடம் கேட்டிருப்பதால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நிலா நட்சத்திரமே. என் கேள்வி கொஞ்சம் எளிமையானது தான். இதனைப் பற்றி எழுத நீங்கள் ஏற்கனவே எண்ணியிருப்பீர்கள். என் கேள்வி: நீங்கள் நிலவாய் இருந்து நட்சத்திரம் ஆனது ப்ரமோசனாய் நினைக்கிறீர்களா இல்லையா?
My questions are very simple.
1. Who is your favourite writer and favourite book/novel
2. Is your short stories published as a collection already? If not, are u planning to publish them soon?
கேள்வி கேக்குறதென்ன அம்புட்டு லேசா...ஆனாலும் கேப்போம்.
விதையாய் இருப்பது, செடியாய் இருப்பது, மரமாய் இருப்பது, காயாய் இருப்பது, கனியாய் இருப்பது......எப்படியெல்லாம் இருந்திருக்கின்றீர்கள். இருந்ததில் சிறந்தது எது? கடியது எது?
முதலில் இப்படி தனியாக கேள்விகளை மட்டும் கேட்டு பதில் வாங்குவது எனக்கு பிடிக்காத வேலை. ஏனென்றால் முதல் கேள்விக்கான பதிலில் நமக்கு தோணும் கேள்விகளை கேட்க முடியாமல் போய் விடுகிறது. இருந்தாலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஒரு ஐந்து கேள்விகளை கேட்க்கலாம் என உட்கார்ந்தால் கூடவே நமது அன்னியன் (அதாங்க alter ego) வந்து நீ ஒரு கேள்வி கேட்டா நான் ஒரு கேள்வி கேட்பேன்னு அடம். அதனால ஒவ்வோரு கேள்விக்கும் ஒரு நக்கல் கேள்வி இலவச இணைப்பு. பதிலைப்போடுங்க.
1) இந்த வாரம் நட்சத்திரமாய் தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தீர்களா?
2) உங்கள் எண்ணத்தில் இது நேரம் கடந்து வந்த வாய்ப்பா? உங்கள் திறமைக்கு இன்னும் முன்னுமே வந்திருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தீர்களா?
3) இந்த வாரத்தில் என்னனென்ன செய்ய வேணும் என் திட்டமிடீர்கள்? அவை அனைத்தையும் செய்ய முடிந்ததா?
4) யார் காலையாவது வார வேண்டும் என நினைத்து முடியாமல் போயிற்றா?
5) உங்கள் பதிவுகள் அதிகம் பின்னூட்டப்பட்டன. இவ்வளவு ஆதரவு வரும் என எதிர்பார்த்தீர்களா?
6) போலி டோண்டு வந்தாரா?
7) இந்த வாரத்தை மீண்டும் செய்ய முடிந்தால் எதை மாற்றுவீர்கள்?
8) இந்த வம்பெல்லாம் வேண்டாமென முன்பே எழுதியிருந்தவற்றை பதிவிலிட்டு போயிருப்பீர்களா?
9) அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு உங்க அறிவுரை என்ன?
10) அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் காட்டமாய் பின்னூட்டம் இடுவீர்களா?
கடைசியாக ஒரு சம்பிரதாயமான ஒரு கேள்வி, நீங்கள் நட்சத்திரமாக வராமல் இருந்திருந்தால் என்னவாயிருந்திருப்பீர்கள். இதற்கு நக்கல் பதில் தேவை.
// ஆழமான நதியில் கணவன் ,மனைவி ,செல்ல குழந்தை,மற்றும் படகோட்டி இவர்கள் ஓர் சிறிய படகில் பயணம். பயணம் இனிதாக இருக்கும் ஒரு திருப்பத்தில் ஓர் கொடும் முதலை படகை துரத்தியது. இந்த விளையாட்டை எட்டி பார்த்த சிறுவனை கண்டு விட்டது முதலை! அவனின் சிறு கரத்தை கவ்வி பிடித்தது முதலை.இன்னும் ஓர் வினாடியில் அந்த குழந்தை முழுவதுமாய் முதலை வாயில்! //
இந்த சம்பவம் ஒகேனக்கலில் உண்மையில் நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட குடும்பம் எனக்கு நேரடியாக தொடர்பு கிடையாது எனினும் எங்களுக்கு அறிமுகப்பட்ட குடும்பம்.. கடைசி வரை அந்த குழந்தையை காப்பாற்ற முனைந்தனர். முடியவில்லை. குழந்தையை கண்முன் காவு கொடுத்த அதிர்ச்சியில் குழந்தையின் தாயாருக்கு சித்த பிரமை பிடித்துவிட்டது... சமீபத்தில் சன் டிவியில் இதை ஒரு சம்பவமாக சொல்லி இதை வைத்து எப்படி திரைக்கதை அமைப்பீர்கள் என்று சினிமா நட்சத்திரங்களிடம் கேட்டு கேவலப்படுத்தியிருந்தார்கள்...
முகமுடி,
நான் அந்த நிகழ்ச்சியை சில நிமிடங்கள் பார்த்தேன். இது உண்மை சம்பவம் என தெரியாமல் போயிற்று. சன் டீவி செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது. மிகவும் வருந்தத்தக்கது.
பணி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்? (interested to know your time management)
Siram aruthal vendhanukku pozhudhupokku;
matravarkku uyirin vadhai
--idhu ungalaik kuritha kavidhaiya?
1. தமிழ் இணையத்தின் தவறவிடக் கூடாத வலையகமாக நிலாச்சாரல் உள்ளது. நிலாச்சாரலின் அடுத்த கட்டமாக என்ன நினைக்கிறீர்கள்?
2. வெப்2.0 கரைபுரண்டோடும் காலம் இது. தமிழ் தொழில் நுட்பங்கள் பிறமொழித் தளங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
3. மனத்திருப்திக்காக செயல்படும்போது விமரிசனங்களினாலும் பார்வையாளரைத் திருப்திப்படுத்தும் செய்கைகளும் கொள்கைகளை நீர்த்துப் போகவைக்கும் அபாயம் உள்ளது. தங்களின் சிந்தனை என்ன?
4. லாபத்தில் இயங்கினால் மட்டுமே தமிழ் வலையகங்கள் நீண்டநாள் நீடிக்க முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது. Eyeballs, pageviews போன்றவை முக்கியமான அளவுகளாகக் கருதுகிறீர்களா? வருகையாளர்களில் எவ்வளவு பேர் ஜனரஞ்சகமும் காத்திரமும் சம அளவில் நிறைந்த நிலாச்சாரல் போன்ற தமிழ்த்தளத்திற்கு சந்தா கட்டிப் படிக்க முன் வரக் கூடும்? இலவசமாக சேவை நடத்துவதன் மூலமே பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர முடியுமா?
5. நிலாச்சாரலில் தங்களை மிகவும் பாதித்த வாசகர் செய்கை/மறுமொழி எது?
அன்பர்களே,
என்னை நிஜமான நட்சத்திரமாகப் பாவித்து சிந்திக்க வைக்கும் கேள்விகள் எழுப்பியமைக்கு நன்றி.
நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பதில் சொல்கிறேன். உங்கள் பொறுமைக்கு நன்றி
//அன்புடன் நிலா !
ஆழமான நதியில் கணவன் ,மனைவி ,செல்ல குழந்தை,மற்றும் படகோட்டி இவர்கள் ஓர் சிறிய படகில் பயணம். பயணம் இனிதாக இருக்கும் ஒரு திருப்பத்தில் ஓர் கொடும் முதலை படகை துரத்தியது. இந்த விளையாட்டை எட்டி பார்த்த சிறுவனை கண்டு விட்டது முதலை! அவனின் சிறு கரத்தை கவ்வி பிடித்தது முதலை.இன்னும் ஓர் வினாடியில் அந்த குழந்தை முழுவதுமாய் முதலை வாயில்! அதே கணம் யாரேனும் நதியில் குதித்தால் குழந்தையை காப்பற்றலாம்! எப்படியோ ஓர் உயிர் பலி நிச்சயம் . யார் உயிரை இழப்பது? //
சிங். செயகுமார்,
நீங்கள் அதைக் கற்பனையாகக் கேட்டிருந்தாலும் மனதைத் துன்புறுத்துகிற இந்த நிகழ்வு உண்மையென நானும் கேள்வியுற்றிருக்கிறேன்.
இந்த சூழலில் இப்படித்தான் ஒருவர் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் கொடூரமான செயலாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதைப் பற்றி ஆராய்ந்து சம்பந்தப் பட்டவர்களை மேலும் காயப்படுத்த வேண்டாமே. மறைந்த அந்த மழலைக்கும் தீராத் துயரில் ஆழந்த அந்தக் குடும்பத்திற்கும் நமது அன்பை அனுப்புவோம்.
உஷா
//ஒவ்வொரு பதிவையும் விளக்கமாய் அலச வேண்டும் என்றிருந்தேன்.//
அலசலுக்காகக் காத்திருக்கிறேன், குருவே...
//மிக கவர்ந்தது
மதங்களைப் பற்றிய உங்கள் பார்வையும், கல்கி கதையும். //
நன்றி
//கதையின் முடிவு இரண்டாவது வரியில்
உகிக்க முடிந்தது என்றாலும், மண்வாசனை வீசும் எழுத்துக்கு .. கையை குடுங்கள்.//
கையை உங்ககிட்டே கொடுத்துட்டா நானென்ன பண்றது:-)))
ச்ச்ச்ச்சும்மா:-)))
கையை நீட்ட்டினேனே வந்துச்சா?
//என் கேள்வி- உங்கள் பலம் எது? பலகீனம் எது? ( இதில் எந்த நபரையும் சொல்லக்கூடாது. உங்க பிளஸ், மைனஸ் பாயிண்ட சொல்லணும்)//
பதில் வந்துக்கிட்டே இருக்கு...
பாரதி இப்படி சொல்லறாரு
//நட்சத்திர வாரத் தொடக்கத்திலேயே பேட்டியைப் பற்றி நீங்கள் அறிவிக்கத் தவறிய குற்றத்துக்காக உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.//
இரண்டு வருடம் வேண்டாம். இரண்டு நாள் தனிமை தாங்குவீங்க?
உஷா,
உங்கள் கேள்விக்கான பதில்
பலம் - மன உறுதி
பலவீனம் - பலத்தை உணராமலிருப்பது
அற்புதம் நிலா!!!!
//1. மம்சாபுரம் எங்கிருக்கு? எந்த மாவட்டம்? மம்சாபுரம் எங்கிருக்குன்னு கூட தெரியாம எப்படிடா நீ தமிழ்நாட்டுல இருந்தேனு கேக்காதீங்க. கூகிள்ல தேடியும் கெடக்கலை.:)-//
அய்யா கைப்பு மம்சாபுரம் ரொம்பச் சின்னூருங்க. நானா இணையத்தில மம்சாபுரம் பற்றி எழுதினாதான் உண்டு. விருதுநகர் மாவட்டத்தில திருவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் நடுவில இருக்கு
//2. ஒரு பதிவுல ஸ்பேஸ் டெக்னாலஜி வகுப்புல படிச்சதா சொன்னீங்க. நீங்க கெமிக்கலுக்கு அப்புறம் எம்.டெக் ஏரோஸ்பேஸ்ல பண்ணீங்களா? இல்ல ஸ்பேஸ் டெக்னாலஜி பி.டெக்லியே இருந்துச்சா?//
பி.டெக் ஃபைனல் இயர்ல ஒரு பேப்பர் இருந்திச்சி. டாக்டர் மோகன் ரொம்ப சுவாரஸ்யமா கொண்டு போனார். எம்.டெக் ப்ளான்ட் டிசைன்ல பண்னேன் (அப்படின்னு பேரு:-))
//3. அண்ணா பல்கலைக்கழகத்துல நீங்க எந்த காலேஜ்? ஏ.சி.டெக் தானே?//
ஆமா, ஏ.சி.டெக் தான்
நீங்களும் அண்ணாவா - எங்கேயோ படிச்ச நினைவு
//(கேள்வி ரொம்ப சில்லறை தனமா இருந்தா ஒரு தனி மெயில் அனுப்புச்சாலும் சரி தான்)//
There is no silly question - அப்படின்னு டாக்டர் விஜயராகவன் சொல்வார்
அது சரி, நிலாவோட வாழ்க்கை வரலாறு எதுவும் எழுதப்போறீங்களா? கேள்வியெல்லாம் அந்த ரகமாவே இருக்கே:-))
//விருதுநகர் மாவட்டத்தில திருவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் நடுவில இருக்கு//
சூப்பருங்க. லெஃப்டுல பால்கோவா ரைட்டுல நாய். அப்போ நண்பர்களுக்கு பால்கோவாவும் எதிரிகளுக்கு நாயும் ரெடியா இருக்கு உங்க வீட்டுல?
//நீங்களும் அண்ணாவா - எங்கேயோ படிச்ச நினைவு//
ஆமுங்கோ! ஒரே கேம்பஸ் தான். வேற காலேஜ்...CEG
//அது சரி, நிலாவோட வாழ்க்கை வரலாறு எதுவும் எழுதப்போறீங்களா? கேள்வியெல்லாம் அந்த ரகமாவே இருக்கே:-))//
வாழ்க்கை வரலாறு எழுதற அளவுக்குத் தெறமை தான் நமக்கு இல்ல...உங்காத்து காரரு உங்களை ஒவ்வொரு எடத்துலயும் ஊக்கப் படுத்துனா மாதிரி நமக்கும் யாராச்சும் காட்ஃபாதர் கெடச்சா நான் ரெடி தான்:)-
//சூப்பருங்க. லெஃப்டுல பால்கோவா ரைட்டுல நாய். அப்போ நண்பர்களுக்கு பால்கோவாவும் எதிரிகளுக்கு நாயும் ரெடியா இருக்கு உங்க வீட்டுல?
//
கைப்பு
நல்லா எடுத்துக் குடுத்திருக்கய்யா... வாழ்க.
நம்ம எதிரிகளுக்கு திகிலெடுத்திருக்கும்ல :-))
//வாழ்க்கை வரலாறு எழுதற அளவுக்குத் தெறமை தான் நமக்கு இல்ல...//
ரொம்பத் தன்னடக்கம் போல்ருக்கு :-)
//உங்காத்து காரரு உங்களை ஒவ்வொரு எடத்துலயும் ஊக்கப் படுத்துனா மாதிரி நமக்கும் யாராச்சும்//
படிக்கும்போது பொண்ணு கிண்ணு பார்க்கச் சொல்றீகளோன்னு நெனச்சேன் :-)))
//காட்ஃபாதர் கெடச்சா நான் ரெடி தான்:)- //
என்னா கைப்பு
காட் மதரெல்லாம் வேண்டாமாக்கும்?
//படிக்கும்போது பொண்ணு கிண்ணு பார்க்கச் சொல்றீகளோன்னு நெனச்சேன் :-)))//
என்னாங்கோ! நீங்களும் எங்க அம்ஸு மாதிரியே பேசறீங்க? எது பேசுனாலும் இப்பல்லாம் சுத்தி வளைச்சு பொண்ணு பாக்குறதுல தான் வந்து முடிக்கிறாங்க.
//காட் மதரெல்லாம் வேண்டாமாக்கும்?//
கெடச்சா கசக்குதா என்ன? ஆனா 'அடிக்காத' காட்மதரா யாராவது இருந்தாச் சொல்லுங்க
:)-
//'அடிக்காத' காட்மதரா யாராவது இருந்தாச் சொல்லுங்க
:)- //
சந்தடி சாக்கில தமிழ்மணத்தில காட்மதரா ஆகிடலாம்னு பாத்தா, இப்படி ஒரு கண்டிசனப் போட்டுப்பிட்டீங்களே... இதுதான இடிக்குது :-)))
//சந்தடி சாக்கில தமிழ்மணத்தில காட்மதரா ஆகிடலாம்னு பாத்தா, இப்படி ஒரு கண்டிசனப் போட்டுப்பிட்டீங்களே... இதுதான இடிக்குது :-)))//
ஆஹா! வந்துடாங்கையா! வந்துட்டாங்கையா! அப்ப வாய் பேசறத வுட கை பேசறது தான் அதிகம்னு சொல்ல வர்றீங்க? எனக்கும் இங்கிட்டு லைட்டா ஒதறுது!
//எனக்கும் இங்கிட்டு லைட்டா ஒதறுது! //
கட்டத்துரைய விட இனிமே நம்ம பேரக் கேட்டா அதிகமா ஒதறும்னு சொல்லுங்க:-))
இப்பத்தான நமக்கு ஒரு கெத்து வருது :-)))
அப்படியே இந்த இமேஜ பில்ட் அப் பண்ணிறணுமில்ல :-)))
பாஸ்டன் பாலா
தேர்ந்த பத்திரிகையாளரைப் போல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். சிந்தித்து பதில் தர வேண்டிய கேள்விகள். தனிப்பதிவாகவே பதில் போட்டுவிடுகிறேன் - ஒரு சில நாட்களில்
பொறுமைக்கு மிக்க நன்றி
பெயர் : மம்சாபுரம் நிலா
வயசு : இப்பவும் லந்து பண்ற வயசு தான்
ஊரு : "Landhu"an
தொழில் : எழுத்தாளர், எவனாச்சும் எக்குத்தப்பா மாடிக்கிட்டா எழுத்தாலேயே தூக்கிப் போட்டு பந்தாடறது
பொழுதுபோக்கு : தமிழ்மணத்தின் க்ளாஸ் டீச்சர் - எங்கள மாதிரி சின்னப் பசங்களுக்கு நிலா மிஸ்
ரசிகர்கள் கவனிக்க : ஊட்டாண்ட நாயும் இருக்கு, பால்கோவாவும் இருக்கு...ஒனக்கு எது வேணும்?
இந்த பில்டப் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
கைப்பு
நம்ம வாழ்க்க வரலாறை ஆர்மபிச்சாச்சு போல்ருக்கு. நல்லாருங்க....
பில்ட் அப் பரவால்ல. நம்ம கொத்ஸ் எந்திரிச்சு வந்து வேறென்ன பில்ட் அப் குடுக்கிறாருன்னு பாப்பம்
இந்த வயசு மேட்டருதான் கொஞ்சம் உதைக்குது. அத மட்டும் கட் பண்ணிக்கங்க, சரியா?
//இந்த வயசு மேட்டருதான் கொஞ்சம் உதைக்குது. அத மட்டும் கட் பண்ணிக்கங்க, சரியா?//
சரிங்க மிஸ்! நானே நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க!இனிமே கவனமா பாத்துக்கறேன்.
:)-
//சரிங்க மிஸ்! நானே நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க!இனிமே கவனமா பாத்துக்கறேன். //
டீச்சருக்கு அடங்கின பிள்ளை. உன்னைய போய் எல்லாரும் சாத்து சாத்துன்னு சாத்றாங்களேப்பா...
குமரன்
//நீங்கள் நிலவாய் இருந்து நட்சத்திரம் ஆனது ப்ரமோசனாய் நினைக்கிறீர்களா இல்லையா? //
ப்ரமோஷனாகக் கருதவில்ல; பிரயோஜனமாகக் கருதுகிறேன்
நட்சத்திரம் என்பதற்காக யாரின் பதிவையும் நான் இதுவரை படித்ததில்லை. அதனால் நான் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றித்தான் நட்சத்திர வாரத்தில் நுழைந்தேன். முடியும்போது பல நண்பர்களோடும் அவர்கள் தந்த உற்சாகத்தோடும் வெளியேறினேன்
தெய்வா,
எனக்கு சிவசங்கரி பிடிக்கும். அவர் எழுத்துக்களில் முதிர்வும் பக்குவமும் தெரியும். சமீப காலமாய் அதிகம் தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதால் நிகழ்கால தமிழ் எழுத்தாளர்களில் யாரையும் சொல்லத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சரும் சிட்னி ஷெல்டனும் மிகவும் பிடிக்கும்
2. Is your short stories published as a collection already? If not, are u planning to publish them soon?
இன்னும் புத்தகமாக வெளிவரவில்லை. நண்பர்கள் இது குறித்து சில காலமாகவே வலியுறுத்தி வந்தாலும் இப்போதுதான் அந்த யோசனையை அசை போட ஆரம்பித்திருக்கிறேன்.
புத்தகம் வந்தால் படிக்க தெய்வா உண்டென்று எடுத்துக் கொள்ளலாமல்லவா? :-)
Definitely
//நட்சத்திர வாரத் தொடக்கத்திலேயே பேட்டியைப் பற்றி நீங்கள் அறிவிக்கத் தவறிய குற்றத்துக்காக உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.
சிறைக்குச் செல்லும் நீங்கள் கையில் ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துச் செல்லலாம்.
எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வீர்கள்?
ஏன்?//
பாரதி, நீங்கள் பார'தீ'யாக இருப்பீர்கள் போலிருக்கிறது - ஒரு சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
ஆனாலும் உங்கள் கொடுந்தீர்ப்பு நிறைவேற்றப்படுமானால் 'சிறையிலிருந்து தப்புவது எப்படி' என்ற புத்தகத்தை எடுத்துச் செல்வேன் :-)
Jokes apart, இந்தக் கேள்விக்கு சீரியஸான பதில் மகா பாரதம் என்பதாகத்தான் இருக்கும். 'வெளிச்சம் வெளியே இல்லை' என்பதான கட்டுரைகள் பலவற்றில் மகாபாரதத்தின் குறிப்புகளைப் பார்க்கிறேன். அதனால் மகா பாரதத்தை முழுமையாகப் படிக்க ஆவல். அதோடு பெரிய புத்தகமாக இருக்குமாதலால் ஒரு முறை படித்து முடிப்பதற்குள் ஆரம்பம் மறந்துவிடும். திரும்பப் படிக்க ஆரம்பித்து 2 வருடங்களைத் தள்ளுவது எளிதாகிவிடும் (தப்பிக்க முடியாவிட்டால்:-))
நன்றி தெய்வா
உங்கள் பதிலை புத்தகம் போட ஒரு காரணமாக எழுதி வைத்திருக்கிறேன் :-)
//டீச்சருக்கு அடங்கின பிள்ளை. உன்னைய போய் எல்லாரும் சாத்து சாத்துன்னு சாத்றாங்களேப்பா...//
இது. இதுதாங்க பிராப்ளம். முன்னாடி பெஞ்சுல உக்காந்தோம்மா போனோமான்னு இல்லாமா, பின்னாடி திரும்பி பாத்து எங்களையெல்லாம் போட்டு குடுத்தா...
அப்புறம் இவர போட்டு தப்பாமா என்ன செய்யறது.
//விதையாய் இருப்பது, செடியாய் இருப்பது, மரமாய் இருப்பது, காயாய் இருப்பது, கனியாய் இருப்பது......எப்படியெல்லாம் இருந்திருக்கின்றீர்கள். இருந்ததில் சிறந்தது எது? கடியது எது?//
ராகவன்,
என் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து கணக்கு வழக்கு எடுக்கவைத்த கேள்வி. நன்றி
முறைப்பாய், துவர்ப்பாய்,கடினமாய் பெரிய பிரயோஜனமெதுவுமில்லாத காயாகத்தான் நானிருக்கிறேன் என்பது என் எண்ணம். இதுதான் இயல்பு. அதனால் சுலபம். ஆனால் அன்பினால் மனம் கனிந்து நாலு பேரின் மனப் பசி போக்கும் 'அற்புதக் கனி'யாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
பயமெதுவுமறியாத, பொறுப்பேதுமில்லாத, தான்தோன்றித்தனமான செடியாய் வாழ்வின் பல கட்டங்களைக் கழித்திருப்பதற்காக வருந்துகிறேன்.
வித்திலிருந்து விருட்சம் உருவாவதில் தன்னையே கிழித்துக் கொள்ளும் பிரசவ வேதனை வித்துக்கு உண்டு.வித்தாய் இருப்பதுதான் கடினம்.நிலாச்சாரலுக்கு வித்தாய் இருந்ததில் பெருமை அடைகிறேன்.
நிழல் தரும், கனிதரும், கூடு கட்ட இடம் தரும் மரமாய் இருப்பது சிறப்பு - அந்தச் சிறப்பை நோக்கி நிலாச்சரலின் மூலம் நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் போகுமிடம் வெகு தூரம்.
//1) இந்த வாரம் நட்சத்திரமாய் தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தீர்களா? //
கொத்ஸ்
இல்லை. அதுபற்றி யோசிக்க ஆரம்பிக்குமுன்பே வாய்ப்பு வந்துவிட்டது
நிலா இது ரொம்பவும் டூ மச்
ரகசியமான நம்ம உடன்பாட்டை போட்டு உடைச்சிட்டீங்களே
அநியாயமா:-))))))))))
இனி முதல் பேட்டின்னு எப்படி சொல்றது???????
கொஞ்சநாளா நெட்டுக்கு வரமுடியலம்மா
அதுக்காக இப்படி செய்யலாமா நிலா
ஓ... ஸாரி மது
நீங்க கேக்கறதுக்கு முன்னாடியே நான் டைப் பண்ணி வச்சிருந்த ஸ்கிரிப்ட் இது. உண்மையாகவே வேலைக்கு நடுவில நீங்க கேட்டதையே மறந்து போயிட்டேன்.
நீங்க ஸ்மைலி போட்டிருந்தாலும் எனக்கு சங்கடமா இருக்கு. பரவாயில்லை உங்களுக்கு ஸ்பெஷலா வேற ஏதாவது செய்யலாம். வரம் தந்தாச்சு - சட்டுன்னு புடிச்சிக்கோங்க:-))
//2) உங்கள் எண்ணத்தில் இது நேரம் கடந்து வந்த வாய்ப்பா? உங்கள் திறமைக்கு இன்னும் முன்னுமே வந்திருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தீர்களா?//
அழைப்பு வரும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை; நட்சத்திரங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும் தெரியாது; - அதனால் என் திறமையை ஏதோ ஒரு அளவுகோலில் அளந்து வாய்ப்பு எப்போது வந்திருக்கவேண்டும் என்று கணக்குப்போடத் தோன்றியிருக்கவில்லை.
//3) இந்த வாரத்தில் என்னனென்ன செய்ய வேணும் என் திட்டமிடீர்கள்? அவை அனைத்தையும் செய்ய முடிந்ததா? //
நட்சத்திர வாரம் பல்சுவையோடு இருக்கவேண்டும் என்பதை மதியின் மடல் வந்ததுமே தீர்மானித்துவிட்டேன். படம், பாடல், கதை, சிந்தனை, ஆன்மீகம் என்று முடிந்த வரை வெரைடி தரவேண்டும் என நினைத்தேன். விளையாட்டும் இந்தப் பட்டியலில் தாமதமாகச் சேர்ந்துகொண்டது.
திட்டமிட்டதில் ஒரு சில விஷயங்கள் செய்ய செய்ய முடியாமல் போனது - அதில் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட சீன ஆன்மீக இசை குறித்து எழுதி அதனை அனைவரையும் கேட்கச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். அதை நிறைவேற்றாமல் போனதில் ஒரு குறை உண்டு.
//4) யார் காலையாவது வார வேண்டும் என நினைத்து முடியாமல் போயிற்றா?//
இல்லை, ஐயா. நான் சமாதான விரும்பி :-)
//5) உங்கள் பதிவுகள் அதிகம் பின்னூட்டப்பட்டன. இவ்வளவு ஆதரவு வரும் என எதிர்பார்த்தீர்களா? //
நிச்சயமாக இல்லை. எண்ணிக்கையோடு மிக நல்ல கருத்துக்களும் வந்தன. அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
//6) போலி டோண்டு வந்தாரா?//
வந்தாரே... அவருக்கு நான் தந்த பதில் இங்கே:
***
நண்பர்களே,
இந்த பதிவில் என் நண்பர்களுக்கு நான் நன்றி தெரிவித்திருந்ததற்கு மிகவும் தரக்குறைவாய் என்னை விமரிசித்து மாண்புமிகு போலி டோண்டு பின்னூட்டம் அனுப்பியிருந்தார். அதோடு திரு.டோண்டு ராகவனின் பதிவில் பின்னூட்டமிட்டதற்காக மிரட்டியிருந்தார்.
அவருக்கு ஒரு குறிப்பு: சேற்றை அடுத்தவர் மேல் தெளிப்பதாக நினைத்துக் கொண்டு சாக்கடையாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு கண்டிப்பாக மனநல உதவி தேவை. என்றேனும் ஒரு நாள் உங்கள் உண்மை இயல்பை உணர என் அசீர்வாதங்கள். (உங்களோடு ஒப்பிடுகையில் நான் எவ்வளவோ உயர்ந்தவளாதலால் ஆசீர்வதிக்க எல்லா தகுதியும் இருக்கிறதெனக்கு).
இனி உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு பின்னூட்டம் அனுப்புவதில் செலவளிக்கத் தேவையில்லை. ஏனெனில் அதில் ஒரு வார்த்தை கூட நான் படிக்கப் போவதுமில்லை; தவறி படிக்க நேர்ந்தாலும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிற ரகமில்லை நான். இத்தோடு உங்களை ஒரு பொருட்டாக மதிப்பது இங்கே நிறுத்தப்படுகிறது.
****
இப்படி எழுதியதும் மற்றொரு பின்னூட்டம் உங்கள் பெயரில் போட்டார். முதல் வரியிலேயே தெரிந்துவிட்டதால் அழித்துவிட்டேன்.
(உங்கள் புகழ் தீ போல பரவுகிறது, கொத்தனார் அவர்களே:-)
என்னது என் பெயரில் போலியா? இனிமே நானும் போட்டோ, எலிக்குட்டின்னு, பின்னூட்ட பதிவு எல்லாம் போடணுமா?
கடவுளே.
லதா said...
பணி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்? (interested to know your time management)
March 05, 2006 9:52 AM
என் கேள்விக்கென்ன பதில் ? என் கேஏஏஏஏஏள்விக்கென்ன பதில் ?
:-))))
//பணி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்? (interested to know your time management)
என் கேள்விக்கென்ன பதில் ? என் கேஏஏஏஏஏள்விக்கென்ன பதில் ?
:-))))
//
லதாவின் ஆர்வம் காரணமாக கொத்தனாரின் கேள்விகளுக்கிடையில் அவருக்கு பதில் சொல்கிறேன்.
எனது நேரமேலாண்மை (Time management) கீழ்க்கண்ட மூன்று கூறுகளைக் கொண்டிருக்கும்:
- Listing and grouping the tasks
- Reverse engineering
- Delegation
செய்யவேண்டிய வேலைகளுக்கான பட்டியல் எபோதும் என்னிடம் இருக்கும் (வீட்டு வேலைகள், நிலாச்சாரல் மற்றும் இதரவேலைகள்). எந்த வேலை எப்போது முடிக்கப்பட வேண்டும் என்று அதில் குறித்துக் கொள்வேன். ஒரு வேலை குறித்த நாளில் முடியவேண்டுமென்றால் எப்போது ஆரம்பிக்கவேண்டும் என்று கணக்கிடுவேன் (reverse engg). பின் வேலைகளை எந்த வரிசையில் செய்தால் குறைந்த முயற்சியில் விரைவாக (Efficiently) முடிக்கலாம் என்று திட்டமிட்டு சிறு சிறு குழுக்களாக பிரித்துக் கொள்வேன். கடைசியாக, வேலைகளை சரியான ஆட்களிடம் ஒப்படைப்பேன். (delegation)
நானே செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு கால அட்டவணை போட்டுக் கொள்வேன். பணி நாட்களில் செய்ய சிறு சிறு வேலைகளும் விடுமுறை நாட்களில் செய்ய பெரிய வேலைகளுமாக ஒதுக்கிக் கொள்வேன். எல்லாமே பெரிய வேலைகளாக இருந்தால், அவற்றை சிறு சிறு கூறுகளாகப் பிரித்து பணி நாட்களில் ஒவ்வொரு கூறாய் செய்துவருவேன்.
இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்கும் சற்று நேரம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்கி வருகிறேன். பணி நாட்களிலும் குறைந்தது அரைமணி நேரமாவது பொழுதுபோக்குக்காக நேரம் செலவிடவேண்டுமென்று முயற்சி செய்து வருகிறேன்.
இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :-))
7) இந்த வாரத்தை மீண்டும் செய்ய முடிந்தால் எதை மாற்றுவீர்கள்?
பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டை டெஸ்ட் போட்டி போலல்லாமல் 20 - 20 போல இன்னும் விறுவிறுப்பாய்க் கொண்டு போவேன்
நான் பாடிய பாடல் ஒன்றை பதிவில் போட்டு உங்களை எல்லாம் பழிவாங்கி இருப்பேன் (நக்கலாக பதில் கேட்டீர்களே:-)
8) இந்த வம்பெல்லாம் வேண்டாமென முன்பே எழுதியிருந்தவற்றை பதிவிலிட்டு போயிருப்பீர்களா?
எந்த வம்பு? யார் வம்பு? எதற்கு வம்பு? ஏன் வம்பு?
(இந்த மாதிரி நட்சத்திர பேட்டின்னு போட்டு உங்க வம்பில மாட்டிக்கிட்டேனோ?)
9) அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு உங்க அறிவுரை என்ன?
அறிவுரையா ... அப்படின்னா?
//நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தண்டனையை ரத்து செய்து பொது மன்னிப்பு வழங்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில்//
ஆகா... நமக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்காங்கன்னு சொல்லுங்க:-)
//நீங்கள் என் வாலில் தீ வைத்து அடுத்த குற்றத்துக்கு ஆளாகி விட்டீர்கள் நிலா.//
அனுமார் வாலில் வச்ச தீ இலங்கையையே அழிச்சுதாமே.... (உங்களை அனுமார்ன்னு சொல்லலை பாரதி... :-)))) இந்த நிலாவை மன்னிச்சு உட்ருங்க பாவம்
//இருந்தாலும் நிறைய வேலை வைத்திருக்கிறீர்கள் அதனால் வழக்கைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கிறேன்.//
ஐயோ சாமி, இது வேறையா? சட்டுப்புட்டுன்னு பொதுமன்னிப்பு குடுத்துருங்கப்பு :-)
//நேரம் கிடைக்கும் போது புதிய பதிவோடு வாருங்கள்.//
நீங்க சொல்லிட்டீங்கல்ல, செஞ்சிருவோம், பாரதி. பாத்தீங்களா, வாலிலிருந்து தீயை எடுத்தாச்சு:-)
Post a Comment
<< Home