'அப்பா'வை மறந்து 'அம்மா'விடம் ராதிகா சரத்குமார்!
சரத்குமாரும் ராதிகாவும் அ.தி.மு.கவில் இணைந்தார்கள் என்ற செய்தியைப் படித்ததும் இந்தத் தேர்தலில் நடந்து வரும் கேலிக் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டதோ என்று தோன்றியது.
தன்மானத் தமிழன் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் இத்தகைய செயல்கள் அவர்களுடைய பச்சோந்தித் தனத்தைப் பிரதிபலிப்பதைவிட தமிழ் சமூகத்தின் அறியாமையையே வெளிப்படுத்துவதாக உணர்கிறேன்.
சில மாதங்களுக்கு முன் இந்த ஆட்சியைக் கடுமையாக விமரித்த வைகோ இன்று தன் சகோதரியின் (!!!!) ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்பதென்ன! ஸ்டாலின் மேயர் பதவியைத் துறக்கக் காரணமாக இருந்த கராத்தே தியாகராஜன் இன்று கருணாநிதியோடு பவ்யமாய் வேட்பு மனுத் தாக்கல் செய்யச் செல்வதென்ன! 'அப்பா' என கருணாதியை விளித்து உருக்கம் காட்டிய ராதிகா இன்று அம்மாவிடம் சரணடைந்ததென்ன!
தமிழக மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைத்திருந்தால் இதெல்லாம் நடக்கும்? ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில் தவறென்ன?
சமீபத்தில் கொள்கை பார்த்து தமிழகம் எப்போதாவது வாக்களித்திருக்கிறதா? சினிமா கவர்ச்சிக்கும் பணத்துக்கும் தமிழன் தன் வாக்கை விற்று வெகு நாட்களாகிப் போனதென்றுதான் நான் நினைக்கிறேன்
You get what you deserve!
வாழ்க ஜனநாயகம்!
5 Comments:
அதான் சொல்லுறோம் மால் கேட் வேந்தன்... தமிழ் வாலிபர்களின் ஒப்பற்ற தல அன்பு அண்ணன் கைப்பு தலைமையிலான வரு.வா.ச கூட்டணிக்கு ஆதரவு தாரீர்... தாரீர்...தாரீர்
தேவு
ஒங்க சங்கத்தோட கொள்கை (!!!) என்னான்னு சொல்லுங்கப்பு...
ரோசிப்போம்
/'அப்பா' என கருணாதியை விளித்து உருக்கம் காட்டிய ராதிகா இன்று அம்மாவிடம் சரணடைந்ததென்ன!/
சரணடைந்தல் என்பதற்கு தங்கள் மொழியில் சரியான அர்த்தம் என்ன என்று கொஞ்சம் விளக்கமுடியுமா?
"கொள்(கை)" தானுங்கோ
//you get what you deserve!// அதே.. அதே..!!
Post a Comment
<< Home