புக் எடிட்டர்
நண்பர்களே,
ஆங்கிலப் புத்தகங்களில் ஆசிரியர் தவிர எடிட்டர் என்று வேறு ஒருவரின் பெயரைப் பார்த்திருப்பீர்கள். தமிழ்ப் புத்தகங்களில் நான் அப்படி ஒரு அமைப்பைப் பார்த்ததில்லை.
ஆனால் ஒரு எடிட்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதனை அனுபவபூர்வமாக மின் நூல்கள் தயாரிக்கும்போது காண்கிறேன். உதாரணமாக எடிட்டர் செய்யும் சில வேலைகள்:
* படைப்பை ஒழுங்கு படுத்துதல் - பாகங்களாக/ அத்தியாயங்களாக உரிய தலைப்புகளுடன்
* படைப்பை ஆழ வாசித்து தேவையான மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்குதல்
* முன்னுரை பெற சரியான படைப்பாளிகளை/பிரபலங்களை பரிந்துரை செய்தல் - சில சமயம் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கு முன்னுரை பெறுதல்
இந்த வேலைகளுக்குரிய அங்கீகாரம் எடிட்டருக்குத் தரப்பட வேண்டும் என நினைக்கிறேன். மாகசின் எடிட்டர் என்பதை பத்திரிகை ஆசிரியர் என மொழி பெயர்க்கிறோம். ஆனால் புக் எடிட்டர் என்பதை புத்தக ஆசிரியர் என மொழிபெயர்க்க இயலாதே?
உங்களது ஆலோசனைகளைச் சொல்லுங்களேன்...
அது ஒரு புறமிருக்க, நிலவுச் சுடர், குட்டி நிலவு போட்டிகளின் கடைசி தேதி மே 7 என்பதையும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.
விபரங்கள் இங்கே:
http://www.nilacharal.com/notice/nilacharal_contest.asp
http://www.nilacharal.com/notice/children_contest.asp
4 Comments:
புத்தகத் தொகுப்பாளர்?
பொன்ஸ்
புத்தகத் தொகுப்பாளர் என்பது நல்ல ஆலோசனையாகத்தான் தெரிகிறது.
வேறு ஏதாவது யோசனைகள் வருகிறன்றனவா எனப் பார்ப்போ
பொன்ஸ் சொன்னபடி தொகுப்பாளர் சரிதான்....
தொகுப்பாசிரியர் - சரிங்களா?
நாகு
தொகுப்பாளரை விட தொகுப்பாசிரியர் நன்றாக இருக்கிறது.
கவிஞர் புகாரி அவர்கள் பதிப்பாசிரியர் என்பது பல காலமாக பதிப்பிலிருப்பதாகக் குறிப்பிட்டார். நானும் பத்தகங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் முக்கியத்துவம் தெரியாததால் மனதில் பதியாமல் போய்விட்டது.
Post a Comment
<< Home