சூரியநாராயணாவின் குடும்பம்
ஆப்ஃகானிஸ்தானில் தாலிபான்களால் கொல்லப்பட்ட பொறியாளர் சூரியநாராயாணா குடும்பத்தை நினைக்கையில் மனம் கலங்குகிறது. அவர் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு 'எனது கணவர் திரும்ப வராவிட்டால் நானும் என் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம்' எனக் கதறிய அவர் மனைவியின் துயரம் என்னை வெகுவாய்ப் பாதித்தது.
சூரியநாராயணா இறந்த செய்தியைக் கேட்டதும் அந்தப் பெண்ணைப் பற்றிய கவலை பெரிதாக எழுந்தது. ஒரு இரவில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரேடியாக மாறிப் போயிருக்கும். ஈட்டுத்தொகை, அரசாங்க வேலை இதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு தூரம் ஆறுதல் தரும்?
போதாக்குறைக்கு அவரின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக் கொண்டு இரு குழந்தைகளுடன் ஒரு பெண் வந்து சேர்ந்திருக்கிறாராம். இது அந்தக் குடும்பத்துக்கு எப்படிப்பட்ட அதிர்ச்சியாய் இருந்திருக்கும்?
இத்தகைய துயரங்களை, கருணையே உருவான சர்வ வல்லமை பெற்ற கடவுளாக இருப்பவர் பூஞ்சை மனம் கொண்ட மானுடர்களுக்குத் தருவானேன் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அந்தக் குடும்பத்துக்கு அன்பும் அனுதாபமும் நிறைந்த நினைவுகளை அனுப்பவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் நம்மால்?
4 Comments:
இதற்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கவில்லையென்றால் இது வளரும் மத்திய அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும்.
அந்த குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இறங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என்னார்,
வருகைக்கு நன்றி
அரசியல் ரீதியாக என்ன பதிலடி கொடுத்தாலும் அந்தக் குடும்பத்தின் இழப்பு சற்றும் சரிக்கட்டப்படாது.
ஆனால் மேலும் இவ்வாறு நடக்காமலிருக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை என்பதை ஒப்புக் கொள்கிறேன்
நிலா,
மிகவும் வருத்தப்படவேண்டிய நிகழ்வு...உங்கள் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறென்.
அந்தக் குடும்பத்தின் இழப்பும் துயரமும் தாங்கற்கரியது. அவர்கட்கு நமது இரங்கல்கள்.
அவரின் இரண்டாவது மனைவியின் நிலையும், அவர் உண்மையை பேசுபவராக இருந்தால், மிக வருத்ததிற்கு உரியதே. ஒரு சட்ட அங்கீகாரமுமின்றி நிராவாதராக நிற்பதும் துணையின் இழப்பை பகிர்ந்து கொள்ள இயலாததும் வேதனையே.
Post a Comment
<< Home