அம்மாவின் பாஸ்போர்ட்
இந்திய அரசு அலுவலகங்கள் என்ன அழகில் வேலை செய்கின்றன என்பதை என் அம்மாவுக்கு பாஸ்போர்ட் வாங்க முயற்சி செய்ததில் தெரிந்து கொண்டேன்
பெற்றோரை எங்களுடன் சில வாரங்கள் இங்கு தங்க அழைக்கலாம் என்ற வெகு நாளைய திட்டத்தை சென்ற வருடம் செயல் படுத்த முயன்றபோது ஓய்வு பெற்ற ஆசிரியரான என் அப்பா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மிகவும் தயங்கினார். அவர் சொன்ன காரணம் அரசாங்க அலுவலகத்துக்குத் தன்னால் அலைந்து கொண்டிருக்க முடியாதென்பது. நான் சொல்லி சொல்லிப் பார்த்து அலுத்துப் போய் அதெப்படி அரசு அலுவலகங்கள் அவ்வளவு மோசமாய் இயங்க முடியும் என்று அவர் மேல் எரிச்சல் வேறு பட்டேன்.
ஒரு வழியாக மிகவும் வற்புறுத்தி உறவினர் ஒருவரின் உதவியுடன் கடந்த டிசம்பர் 2ம் தேதி விண்ணப்பிக்கச் செய்தாகிவிட்டது. அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி என நல்வரும் ஒரே சமயத்தில் விண்ணப்பித்தார்கள். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அம்மாவைத் தவிர மற்ற மூவருக்கும் பாஸ்போர்ட் வந்துவிட ஒன்றும் புரியாமல் நிலவரம் அறிய இணையதளத்தை நாடினோம். அங்கு 'மேலும் 4 புகைப்படங்கள் அனுப்பவும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அடடா இவ்வளவு எளிதாக நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறதே என்று பெருமைப்பட்டுக்கொண்டோம். ஆனால் புகைப்படங்களை எப்படி எங்கு புகைப்படங்களை அனுப்புவது என்று விபரம் தெரியாததால் திருச்சி கலெக்டரேட்டில் வேலை செய்யும் நண்பர் ஒருவரை நாடினோம்.
அவர் கொஞ்சம் விசாரித்துவிட்டு 'நான் இன்னொரு விண்ணப்பம் அனுப்புகிறேன். அதை நிரப்பி புகைப்படத்தோடு அனுப்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். எதற்கு இன்னொரு விண்ணப்பம் என்று குழம்பினாலும் அதையும் அனுப்பி வைத்தோம். ஏப்ரல் 24ம் தேதி அதனை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சேர்த்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தார். 15 நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றார். 6 வாரங்கள் ஆகியும் பாஸ்போட் வரவில்லை
மே 31தேதி அப்டேட் செய்த இணையதள நிலவரம் இன்னும் 'மேலும் 4 புகைப்படங்கள் அனுப்பவும்' என்கிறது. இதற்கிடையில் திருச்சி, சென்னை, டெல்லி அலுவலகம் வரை ஏகப்பட்ட தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் அனுப்பியாகிவிட்டது. குறைகளைத் தெரிவிக்கவென்று தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் - டெல்லி எண் வரை- முயற்சி செய்தாயிற்று. ஒன்று எண் தவறாக இருக்கிறது அல்லது வாய்ஸ் மெயிலுக்குப் போகிறது அல்லது மணி அடித்துக் கொண்டே இருக்கிறது.
இன்னும் 2-3 வாரங்களில் என் பெற்றோர் இலண்டன் பயணப்படவில்லை என்றால் கோடை காலம் முடிந்துவிடும். இனி அடுத்த வருடம்தான் அவர்களால் வர இயலும். ஒரு வருடத்துக்குள் என்னென்ன நடக்குமோ என்ற திகிலில் நண்பருக்கு நண்பருக்கு நண்பருக்கு நண்பர் ஒருவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்வதாக அறிந்து அவரிடம் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள அணுகினோம். அவர் விசாரித்துவிட்டு 'கையெழுத்து தெளிவாக இல்லையாம். அதனால்தான் தாமதமாம்' என்கிறார். தலை சுற்றுகிறது!
இதில் எதை நம்புவது, அடுத்து என்ன செய்வது என்கிற மகா குழப்பத்தில் நான்.
'விஷயம்' தெரிந்தவர்கள் அம்மாவை நேரில் போய் பார்க்கச் சொல்லுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். அம்மாவுக்குப் பூஞ்சை உடம்பு. மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின் அவருக்கு பிரயாணம் அதிகம் ஒத்துக் கொள்வதில்லை. இந்த அக்கினி வெயிலில் 6 மணி நேரப் பிரயாணமாய் திருச்சி சென்று பாஸ்போர்ட் ஆஃபீஸில் காத்திருந்து பார்த்துவிட்டுத் திரும்ப 6 மணி நேரப் பிரயாணம் செய்து ஊருக்கு வரவேண்டும் என்று சொன்னால் அம்மா, 'நான் லண்டன் வரவேயில்லை. என்னை விட்டுவிடு' என்கிறார்கள். அப்பா இத்தனை ஏமாற்றத்திலும் 'நான் அப்பவே சொன்னேனில்லை!!!' என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்.
அப்படியே அம்மாவைக் கஷ்டப்பட்டு ஏசி காரில் அனுப்பி வைத்தால்கூட பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒழுங்காகக் காரியம் நடக்கும் என்பது நிச்சயமில்லை என்றே படுகிறது. எனக்கிருக்கும் ஆதங்கமெல்லாம் ஒரு சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பம் 6 மாதங்களுக்கு மேலாக இழுத்துக் கொண்டிருக்கிறது. சரி, பரவாயில்லை. ஆனால் என்ன காரணம், என்ன செய்யவேண்டும் என்று தெரியப்படுத்த வேண்டுமல்லவா? சரி, தெரியப்படுத்தத்தான் இல்லை. நாமாகத் தெரிந்து கொள்ள வழியாவது இருக்கவேண்டுமல்லவா?
திருச்சி டெலிஃபோன் டைரக்டரியைப் பார்த்து பாஸ்போர்ட் ஆஃபீஸின் அத்தனை எண்களையும் சுமார் 100 முறை சுழற்றியாயிற்று. இன்னும் ஒரு முறை கூட ஒரு கடை நிலை ஊழியரிடம் கூட என்னால் பேச முடியவில்லை.
எத்தனையோ பேர் திருட்டுத்தனமாக பல பாஸ்போர்ட்டுகள் கூட வாங்கிவைத்துக் கொள்கிறார்கள்! ஆனால் நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியை எல்லா ஆவணங்களையும் திருத்தமாக சமர்ப்பித்தும் கூட அவருக்கு இந்த நிலை!!! ஓரளவு விபரமும் தொடர்புகளும் கொண்ட நமக்கே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் என்றால் அதிகம் படிக்காத மக்கள் என்ன செய்வார்கள்?
அதிகம் கேட்கவில்லை ஜென்டின்மென், நான் கேட்பதெல்லாம் அரசு அதிகாரிகளிடமிருந்து என் அம்மாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த உண்மையான நிலவரமும் பொறுப்பான பதிலும்தான்...
என்னால் முடிந்த அத்தனை வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது... யாராவது பிரதமரையோ ஜனாதிபதியையோ தெரிஞ்சா கொஞ்சம் உதவி பண்ணுங்க... அவங்க சொல்லியாவது ஏதாவது நடக்குதா பாக்கலாம்...
விளையாட்டில்லீங்க... நெசம்மாவே யாராவது உதவினீங்கன்னா... எங்கம்மாவோடு ஆசீர்வாதம் கிடைக்கும் :-)
அதுக்கு நான் உத்தரவாதம்
26 Comments:
//இன்னும் 2-3 வாரங்களில் என் பெற்றோர் இலண்டன் பயணப்படவில்லை என்றால் கோடை காலம் முடிந்துவிடும்//
நிலா, லண்டணில் கோடைகாலம் இன்னும் மூன்றரை மாதங்களுக்கு(until mid of september) இருக்கும். கவலைப்படாதீர்கள்.
இட்லி வடையார் சொன்னா கலாம் கேட்கிறார். அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்க.
மகேஸ்
உங்கள் அன்புக்கு நன்றி. கோடை காலம் எவ்வளவு நீடிக்கும் என்று தெரியும்தான்.
உங்களுக்குத்தான் தெரியுமே... இங்கு அனைவரும் விடுமுறையில் செல்லும் காலம் இது. பொறுப்பான வேலையில் இருப்பதால் நீண்ட விடுமுறைகளுக்கு 6 மாதத்திற்கு முன்பே அனுமதி பெற்றிருக்க வேண்டும். தவிர மற்ற குடும்ப விவகாரங்களும் திட்டங்களும் இருக்கின்றனவே... நான் கோடை என்று சொன்னது வெறும் காலத்தை மட்டுமல்ல... திட்டத்தையும் சேர்த்துத்தான்
ஆனால் இங்கு பிரச்சனை அதுவல்லவே...
கொத்ஸ்
இந்தக் கதை தெரியாதே...
கதை தெரியலைன்னாலும் முயற்சி செய்து பாத்துறலாம்
டிப்ஸுக்கு நன்றி
Have you tried this number?
0431 - 2707943
Number teken from
http://news.tn.nic.in/tri_passport.htm
(By the way, சென்னையில் ஸாஸ்திரி பவன் கூட்ட நெரிசலையும், தள்ளுமுள்ளுவையும் விட, அடையாறு காவல் நிலைய பாஸ்போர்ட் அலுவலகம், இரண்டு இளம் போலீசார் நிர்வாகத்தில், மிகவும் திறமையாக உள்ளது.)
அலுவலகர்கள் ஏதாவது எதிர் பாக்கிறார்களோ தெரியவில்லை விசாரித்து பார்க்கவும்,
இந்தியன் படத்தில் மனோரம்மாவின் கணவர் இறந்தற்க்கான பணத்தை கொடுக்க 1000ரூபா கேட்டு இம்சை படுத்துவார்களே அதுமாதிரி ஏதாவது இருக்கும்.
இது கதை அல்ல நிஜம்,
நானும் 5 வருடங்கள் சென்னையில் இருந்திருக்கிறேன், பாஸ்போட் அலுவலகங்களில் அலைந்திருக்கிறேன்.
On Quota basis, we appointed talentless people( 35/40/50 pass mark) in goverment office. Then how can you expect government people will work perfectly?
நிலா, நீங்கள் ஏன் தட்கால்முறையில் பாஸ்பொர்ட் பெற முயன்றிருக்கக் கூடாது. அதற்காக எந்த சிறப்பு காரணங்களையும் கூற வேண்டியதில்லை. உங்களுக்கு அதிக பட்சம் 2 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் கைக்கு கிடைத்து விடும். ஆனால் சாதாரண முறையில் பெறுவதற்கு செலுத்தும் தொகையை விட அதிகமாக கட்டணம் செலுத்தவேண்டும்.
நமது ஊரில் அரசு அலுவலகங்களில், சில நேரம் காசு கொடுத்தால் தான் சீக்கிரம் வேலை ஆகிறது. அப்படியும் சற்று முயன்று பாருங்களேன்.
நான் ஈழத்தவன்; எம் நாடுகளின் நடைமுறைகளைக் கண்டவன் என்பதால் சொல்கிறேன். "தள்ள வேண்டிய இடத்தில்" தள்ள வேண்டு வேண்டுமென நினைக்கிறேன்; பிரதமர்;ஜனாதிபதி மேலும் சிக்கலைக் கொணரும்.
பிரதமருக் கெழுதிய "நெடுஞ்சாலைப் பொறியியலாளருக்கு";;;;சில வருடங்களுக்கு முன் என்ன??, நடந்ததென்பது ,நீங்கள் அறியாததல்ல!!!
ஊரோடில் ஒத்தோடு;;;;;;இப்போ நாடே!! ஓடிதுங்க!!!
கடவுள் துண!!
யோகன் பாரிஸ்
என் அம்மாவும் அப்பாவுன் ஒரே நேரத்தில் ஒரே ஆளிடம் அப்ளிக்கேசன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அப்பாவுக்கு மட்டும் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது அம்மாவுக்கு ஏதோ அட்ரெஸ் ப்ராப்ளமாம்.
அம்மாக்களுக்கு கஷ்டகாலம் போல.
தர்க்கால்/தட்கால்தான் சிரந்த வழி என நினைக்கிறேன்.
//அம்மாக்களுக்கு கஷ்டகாலம் போல//
அமாங்க. அம்மாக்களுக்கு கொஞ்சம் சிரமதசை தான். விரைவில் சரியாகிவிடும். :)))
//0431 - 2707943
Number teken from
http://news.tn.nic.in/tri_passport.htm//
Simulation
Tried already :-(
tks anyway
Tried & trusted way is to go in person. I had some issues with my passport and went in person. It is very systematic and token number based query system. The issue took two visits (i.e. two days) to resolve.
If the concerned person visits the passport office, he/she will be able to talk with the passport officer and in my case, the passport which was delayed by more than six months (since I was not present when the police came for inquiry and mu subsequent negligence), was delivered within two days.
Ask her to make a visit with the assumption that she has to stay for couple of days to finish up the required proceedings.
u can see my trobules on
http://svijayalakshmi.blogspot.com
//நானும் 5 வருடங்கள் சென்னையில் இருந்திருக்கிறேன், பாஸ்போட் அலுவலகங்களில் அலைந்திருக்கிறேன்.//
பிருந்தன்
பலருக்கும் இந்த அனுபவம் இருக்கிறது போலும். என்று மாறுமோ நம் நாடு. அரசு அலுவலர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் இருக்கலாம்!
//நிலா, நீங்கள் ஏன் தட்கால்முறையில் பாஸ்பொர்ட் பெற முயன்றிருக்கக் கூடாது//
ஜெயகுமார்,
தட்கல் முறைக்கு ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.
பயணத்துக்கு 6 மாதங்கள் இருந்ததால் அது தேவையாகப்படவில்லை
//தட்கல் முறைக்கு ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.
//
Are you sure?
//And also send an email to pptgrievance@tn.nic.in with the details like ur application no, important DD no and place and name of the bank.//
Vijayan, I have sent numerous emails to this id.
//Hope the passport officer will reply back to you, from the above said email, bcz I faced the same instance and got reply from him.//
I am so surprised. I have not got any reply
யோகன்
இது கையூட்டு சமாச்சாரம் போலத் தெரியவில்லை. பொறுப்பின்மை போலத்தான் தெரிகிறது.
மேலும் சில நண்பர்கள் உதவ முன்வந்திருக்கிறார்கள். பார்ப்போம்
நிலா, நல்ல ஏஜண்டாய் பிடிங்க, அவங்க செஞ்சிக்கொடுத்துடுவாங்க. அவங்க செய்கிற வேலைக்கு கூலி கொடுப்பதும், ஏஜண்டு மூலமாய் போவதும் தவறு இல்லை உங்க நிலைமையில் தவ்று இல்லை என்று எனக்கு படுகிறது.
Nila,
Just get an agent , or apply fresh through an agent things will be okay.
You want to go through proper way , but things will remain this bad for many years in india.
We need atleast 1000 real range de basanti to change.
Srivats
("அன்புடன்" குழுமத்தில் நான் இட்ட மறுமொழியின் பகுதி)
இதில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை நிலா!
சென்ற வருடம் என் அண்ணன் குடும்பத்தார் அமெரிக்கா வருவதாக இருந்தார்கள். பள்ளிக்குட விடுமுறைக்கு சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன் மகன்களுடைய பாஸ்போர்ட்டுகளைப் புதுப்பிப்பதற்காக அனுப்பியிருக்கிறார்கள். விடுமுறையும் வந்துபோய்விட்டது, ஒருவனுடைய பாஸ்போர்ட் தான் கிடைத்தது, இன்னொருவனுடைய பாஸ்போர்ட் சுமார் ஓராண்டு காலம் வரவேயில்லை.
vanakkam nila...ithukkunu privatla silar office vaichu nadethuranka avnka moolama mattume seekiram passport vaanka mudiym...alaichal illama...konjam selavu athikamaakum...enna pannarathu...inraiya india nilamai ithu than...anbu thozhi geetha.
நண்பர்களே
சில நாட்களுக்கு முன் அம்மாவின் பாஸ்போர்ட் குறித்து எழுதியிருந்தேனல்லவா? அதை அன்புடன் குழுமத்துக்கும் அனுப்பி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு 'அன்புடன்' அன்பர் ஒருவர் உதவி செய்ய முன்வந்தார். பலமுறை அயல்நாட்டிலிருந்து திருச்சியிலிருக்கும் தன் நண்பருக்கு தொலைபேசி சொன்னபடி ஒரு வாரத்தில் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொடுத்துவிட்டார்.
சொந்தங்களே உதவிக்கு வராத இந்தக் காலத்தில் எந்த பிரதிபலனும் பாராது சக மனிதரின் துன்பத்தை நீக்கவேண்டும் என்கிற உணர்வுடன் செயல்பட்ட இந்த மனிதருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். விளம்பரத்தை சற்றும் விரும்பாத இவரின் பெயரை இங்கே தெரிவிக்க இயலாத நிலை.
இவர்தான் இப்படியென்றால் இவரின் திருச்சி நண்பர் இவரைபோலவே பண்பானவர். பெரிய பதவியிலிருக்கும் மனிதர் எவரும் இவரைபோல பண்புடன் பேசி நான் பார்த்ததில்லை. பாஸ்போர்ட் அனுப்பப்பட்டபின்னும் என் பெற்றோரிடம் தொலைபேசி எல்லா விபரங்களையும் சரிபார்க்கச் சொன்ன பொறுப்பான மனிதர். செய்யவேண்டிய கடமைக்கே காசு கேட்கும் மனிதர்கள் மத்தியில் முகம் தெரியாத எனக்காக இவ்வளவு சிரத்தை எடுத்த இந்த மனிதருக்கு எப்படி கைமாறு செய்வேன்!
இந்த பாஸ்போர்ட் விஷயத்தில் மிகவும் கசப்பான அனுபவங்களே கிடைத்திருந்த நிலையில் இனிமையான இரு மனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அன்புடன் குழுமம் மூலமாகக் கிட்டியது ஆச்சரியத்துக்குரியது.
நடக்கும் எல்லாவற்றுக்கும் ஒரு பொருள் உண்டு என்பதைத்தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
இந்த விஷயத்தில் சிரத்தை எடுத்த அத்தனை நண்பர்களுக்கும் இங்கே நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து விசா வாங்கும்படலம் ஆரம்பம் :-)
Use RTI, Don't pay bribe
*You need not pay bribes any more in this country. Now you have an effective alternative - Right to Information. Use the RTI Act. Often, it works faster than bribes, says the right to know crusader group, Parivartan. * * * http://members.tripod.com/parivartan/
Wherever you have a legitimate work pending, you have filed all the documents, you have completed all formalities, you have a genuine case, which the official ought to do in his normal course of duty but is not doing either for expectation of bribe or merely laziness. We call it extortionist bribery.
For instance,
- You made a complaint to the police but they are not registering FIR;
- You want to know balance in your provident fund account. You have retired and want to claim your PF but the authorities are not responding to your letters;
- You are a government servant and have been transferred out against the transfer policy. The Government is not responding to your requests to transfer you back;
- You are a government servant. Your requests for claim of medical reimbursements are not being heeded to;
- You have a faulty electricity meter in your house. But the authorities are not replacing it despite repeated requests;
- The sewer is choked in your locality for some time but the authorities have not responded to repeated requests;
- You have applied for
* passport
* any type of license
* Various certificates i.e. marriage, death, birth, caste and so on; but things do not move;
- You sought correction in your water, electricity, telephone bills but the authorities do not oblige;
If your work is unnecessarily held up in a government department, use the Right to Information (RTI) Act. Do not pay bribe.
File a requisition under the RTI Act demanding to know:
1. Daily progress made on your application so far. i.e. when did the application reach which officer, for how long did it stay with that officer and what did he/she do during that period?
2. Names and designations of the officials who were supposed to take action on the application and who have not done so?
3. What action would be taken against these officials for not doing their work and for causing harassment to the public? By when would that action be taken?
4. By when would the work be done now?
In normal circumstances, such communication would be thrown in a dustbin. But if a formal requisition is made under the RTI Act, the public information officer (PIO) representing the government or semi-government establishment (called the public authority in the Act) is obliged to give the desired information within 30 calendar days (or refuse it by citing specific exemptions from disclosure listed in the Act).
If the PIO does not answer within 30 days, he can be fined and his salary can be deducted. Now, it is not easy to dodge these questions.
You ask what is the progress made on your application. The government officials cannot write back and confess that they have not acted on your application for many months. That would be admission of guilt on paper.
You ask for names and designations of the officers who by their brief in their establishment were supposed to take action on your application but had not done so.
If the government provides names and designations of the officials, their responsibility gets fixed. Any officer is most scared of fixing of responsibility against him in this manner.
The experience so far is that, as soon as such requisition is received from a citizen under the Right to Information Act, files move at an amazing speed and usually the pending work is done even before the
30-day deadline for giving information on the status of the application under the RTI Act.
**'அன்புடன்' அன்பர் ஒருவர் உதவி செய்ய முன்வந்தார். பலமுறை அயல்நாட்டிலிருந்து திருச்சியிலிருக்கும் தன் நண்பருக்கு தொலைபேசி சொன்னபடி ஒரு வாரத்தில் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொடுத்துவிட்டார்.**
இதைக் கேட்க மிக்க மகிழ்ச்சி நிலா. அந்த இனிய அன்புடன் அன்பர் உரிய நேரத்தில் உற்ற உதவியாக அமைந்ததற்கு அவருக்கு வாழ்த்துக்கள். நல்ல நெஞ்சங்கள் இன்னும் உலகில் உண்டு.
Post a Comment
<< Home