.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, July 03, 2006

'மரணம்'...ம்ம்ம்ம்.....

Your Ad Here

இளவஞ்சி தந்த போட்டிக் கருவான 'மரணம்' எனது பல கதைகளில் வந்துவிட்டது. திரும்பவும் இதே கருவில் சிறுகதை எழுத வேண்டுமா என யோசனையாக இருக்கிறது. கட்டுரை எழுதலாமாவென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

போட்டிக் கருவில் அமைந்த வெள்ளை மனிதர்கள் இங்கே:

அப்பா என்னை இப்படி அனாதரவாய் விட்டு விட்டுப் போயிருக்கக் கூடாது. என்னைப் பிள்ளை மாதிரியா வளர்த்தார்? விபரம் தெரிந்ததலிருந்தே ஒரு தோழன் போலத்தானே நடத்தினார்? அம்மா இல்லாத குறை தெரியக் கூடாது என்று தானே எல்லாமாய் இருந்து வளர்த்து விட்டார். அதற்குரிய பலனை அனுபவிக்கிற காலத்தில் சட்டென்று போய் விட்டார். இருபத்தேழு வயதில் யாருமில்லாமல் ஒற்றையாய் நிற்கிறேன் நான்.

அடுத்த வாரம் அப்பா வரப் போகின்றாரென்ற மகிழ்ச்சியில் சிகாகோ வீட்டைப் பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொண்டிருந்தவன் இப்படிச் சத்திரப்பட்டியில் அவருக்குக் காரியம் செய்து விட்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

காரியம் முடிந்து ஒரு வாரமாயிற்று, வீடு வெறிச்சென்றிருக்கிறது. உள் முற்றத்தில் குருட்டு யோசனையில் இருந்தவனைப் பிஞ்சுக் குரல் கலைக்கிறது,

"சித்தப்பா, அம்மா சாப்பிட வரசொன்னாக." காலில் செருப்பில்லாத ஐந்து வயது அஞ்சலி சொல்லி விட்டு ஓடிப் போனது. கல்லூரியில் படிக்கும் போது கூட ஊட்டி விட்ட அப்பா! நான் திரும்பவும் சூன்யத்தில் அமிழ்கிறேன். மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

At July 04, 2006 1:27 AM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At July 04, 2006 1:28 AM, Anonymous Anonymous said...

இது கதையாகத் தோன்றவில்லை. நிஜம்தான்.எல்லோருக்கும்வாழ்வதில் உள்ள சுகம், மடிவதையோ,மரணம் விட்டுப்போனவர்களையொ சந்திப்பதில் இல்லை.எல்லாமெ சடங்கு. சத்திரப்பட்டியிலேயெ அவர் அழுது இருக்கலாம்.

ரேவதி நரசிம்மன்

 
At July 04, 2006 2:17 AM, Blogger ரவி said...

சிறப்பாக உள்ளது - வாழ்த்துக்கள்..

 
At July 04, 2006 3:28 AM, Blogger நிலா said...

நன்றி, ரேவதி, செந்தழல் ரவி

 
At July 04, 2006 3:45 AM, Blogger manasu said...

இல்லாத போதுதான் இருந்ததை தேடும் மனசு...இயல்பானது.

 
At July 04, 2006 7:46 AM, Blogger நிலா said...

மனசு

வருகைக்கு நன்றி

 
At July 04, 2006 6:09 PM, Blogger Deiva said...

Nila,
Well written story. As told by Revathi, this is not a story but like a real life incident

Deiva.

 
At July 04, 2006 11:15 PM, Blogger நிலா said...

தெய்வா,

வாங்க... வாங்க... என்ன ரொம்ப நாளா காணுமேன்னு பார்த்தேன். கதை பிடிச்சிருந்ததில சந்தோஷம்

போன மாதம் தேன் கூடு போட்டிக்கு எழுதின மனமுதிர்காலம், பிம்பம் சிறுகதைகள் படிச்சீங்களோ?

 

Post a Comment

<< Home