போட்டி + பாடம் + பரிசு
நண்பர்களே தேன்கூடு - தமிழோவியம் போட்டியில் எனது மனமுதிர்காலம் சிறுகதைக்கு 3வது இடம் கிடைத்திருக்கிறது. வாக்களித்த/ஊக்குவித்த அனைவருக்கும் போட்டி நடத்திய அமைப்புகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சென்ற வாரம் நம்பிக்கை குழுமம் வெளியிட்ட போட்டி முடிவுகளில் எனது மஹாசக்தி சிறுகதை பொற்காசு பரிசு பெற்றதையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பரிசு பெற்ற மனமுதிர்காலம், மஹாசக்தி இரண்டுமே அதிக திட்டமிடுதலில்லாமல் குறுகிய காலத்தில் போட்டிக்கென்றே எழுதப்பட்ட கதைகள். மஹா சக்தியின் கதை அமைப்பில் மாற்றம் தேவை என்று நினைப்பதால் நம்பிக்கை குழுமத்தின் அனுமதியுடன் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் இங்கு பதிகிறேன்
உண்மையில் மனமுதிர்காலம் பரிசு பெறும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவசரமாக எழுதினாலும் படைப்பில் எனக்கு நிறைவிருந்தது. டுபுக்கு அவர்கள் போட்டிக்கு வந்த அனைத்துப் படைப்புகளிலும் (தன் கதை உட்பட) இந்தக் கதையே தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாலும் கூட 'சின்னத் தம்பித்தனமாக இருக்கிறது' '1960களில் எழுதியிருக்க வேண்டியது' என்றெல்லாம் வந்த விமரிசனங்களால் இந்தக் கருவைப் பல ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுணர்ந்தேன். தவிர பினாத்தலாரின் அறிமுகத்திலும் மூன்றாவது கண்ணின் விமரிசனத்திலும் பத்தோடு பதினொன்று என்பது போலவே குறிப்புகள் இருந்ததால் 'சரி அடுத்தமுறை பார்போம்' என்று முடிவு செய்துவிட்டேன். நேற்று நண்பர் ஒருவர் முடிவு தேதி பற்றிக் கேட்டபோது கூட '26' என்று சொன்னேனே தவிர அது இன்று என்றுகூட உறைக்கவில்லை.
காலையில் அஞ்சல்பெட்டியில் tamila tamila வின் பின்னூட்டம்தான் முதலில் கண்ணில் பட்டது: 'ஒரு நிம்மதி இப்போது இருக்குமே நிலா?? 3வது இடம் என்றால், கொஞ்சம் இடிக்கிறது!!(தமாசுங்கொ) 1தல் இடம் அல்லவா கிட்டியிருக்கனும்!!' இதைப் படித்ததும் 'அட!' என்று ஆச்சரியம்தான் எழுந்தது. இதில் இன்னொரு ஆச்சரியம் எனது மற்றொரு கதையான பிம்பம் ஆறாவது இடத்தைப் பெற்றது! இக்கதைக்க்கு வந்த பின்னூட்டங்களைப் படித்தால் உங்களுக்கே காரணம் விளங்கும்.
நான் எதிர்பார்த்தது போலவே இளவஞ்சிக்கு முதல் பரிசு. வாழ்த்துக்கள்! இரண்டாவது இடம் பெற்ற உஷாவுக்கும் பாராட்டுக்கள்!
ஆனால் சிறப்பான சில படைப்புகள் வரிசையில் பின்னாலிருந்தது வருத்தத்தை அளித்தது. நம்பிக்கை போட்டியில் படைப்பாளியின் பெயரை மறைத்தே நடுவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஒரு வேளை இங்கேயும் அப்படி நடந்தால் பாரபட்சமின்றி வாசகர்கள் வாக்களிப்பார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. போட்டி அமைப்பாளர்கள் இது குறித்து சிந்திக்கலாம்
இந்தப் போட்டி எனக்கு நல்ல பயிற்சிக்களமாக அமைந்தது. முழுநேரப்பணி தவிர்த்து நிலாச்சாரலின் ஆசிரியராகவுமிருப்பதால் என்னால் அதிகம் எழுத முடிவதில்லை. இப்படி போட்டி என்று வரும்போது தோன்றும் உற்சாகத்தில் எப்படியேனும் நேரத்தை ஒதுக்கி எழுதிவிடுவதில் சிறு திருப்தி.
இந்த முறைதான் என் படைப்புகள் பற்றிய விரிவான கண்ணோட்டம் கிடைத்திருக்கிறது. பல கோணங்களிலிருந்தும் கருத்துக்கள் வந்ததால் குறை நிறைகளை உணரமுடிந்தது. முக்கியமாக, கருவைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். கார்ப்பரேட் உலகில் Presentation Skills பற்றிய பயிற்சியில் முக்கியமாக ஆடியன்ஸை உணர்ந்து அவர்களுக்கு ஏற்புடைய கருத்தை முன்வைக்க வேண்டும் என்று சொல்லித் தருவார்கள். அதனை நான் கோட்டை விட்டுவிட்டேன்
சந்தைப்படுத்துதலில் credibility முக்கியம் என்றும் சொல்வார்கள். யார் எதைச் சொன்னால் எடுபடும் என்று தெரிந்திருக்க வேண்டும். எனது பிம்பம் கதையின் கருவை ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்லியிருந்தால் ஏற்புடையாதாகி இருந்திருக்கும். ஆனால் ஒரு சாதாரண வலைபதிவர் சொல்லும்போது அது எடுபடாமல் போகும் என்பதனையும் நான் அறிந்து கொண்டேன்
அதோடு, மக்கள் பின்னூட்டமிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. எப்படியோ, உங்கள் ஆதரவைத் தந்து என்னை ஊக்குவித்ததுடன் எனக்கு தமிழோவியத்தின் சிறப்பாசிரியர் பதவியையும் பெற்றுத் தந்திருக்கிறீர்கள்! நன்றி.
இந்தப் போட்டி பல படைப்பாளிகளை ஊக்குவிக்கிறது என்பதால் அடுத்த மாதத்திலிருந்து முதல் மூன்று இடங்களுக்கு நிலாஷாப் மூலம் டிவிடி மற்றும் மின்நூல்கள் பரிசு தர விருப்பமென்று தேன்கூடு நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் கலந்தாலோசித்துச் சொல்வதாக பதில் தந்திருக்கிறார்கள்.
போட்டிக்கு நிலாஷாப்பிலிருந்து பரிசுகள் வந்தாலும் கூட நான் தொடர்ந்து பங்கு பெறுவேன் - உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ளவாகினும்முடிவாக, இன்னொருமுறை தட்டிய குட்டிய அனைவருக்கும் தலைதாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
34 Comments:
/*நம்பிக்கை போட்டியில் படைப்பாளியின் பெயரை மறைத்தே நடுவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.*/
இது நல்ல செயல்.
வாழ்த்துக்கள் நிலா!! வோட்டுப் போட்டதுக்கு எதாவது டி.வி.டி குடுப்பீங்களா? :))) (சும்மா டமாசு மேடம்)
உங்கள் இரண்டு படைப்புக்களுமே பின்னூட்டமிட்டவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவற்றில் ஒன்று மூன்றாம் பரிசு பெற்றதும் மற்றது முதல் ஆறில் நின்றதும் அவற்றின் வாசகர் வட்டத்தைக் காட்டுகிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மிஸ்!
ப்ரியன்
நம்பிக்கை குழுமத்தின் செயல் பாராட்டுக்குரியது. இனி எப்போது போட்டி நடத்தினாலும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று நான் முடிவு செய்திருக்கிறேன்
மனமார்ந்த வாழ்த்துகள்!
நிலா, இந்தப் போட்டிக்குத் தான் ஏற்கனவே பரிசுகள் இருக்கே, நீங்க ஏன் நிலாச்சாரல் சார்பா இதே மாதிரி போட்டிகள் நடத்திப் பரிசை நேரடியா கொடுக்கக் கூடாது?
இந்தப் போட்டியில் எனக்குத் தோன்றிய தேவையான மாற்றங்கள்:
1. நீங்க சொன்னபடி, படைப்பாளியின் பெயரை வெளியிடாமல் இருக்கலாம். ஆனால், இது மாதிரி அதிக எண்ணிக்கையிலான ஆக்கங்கள் வரும் போது, படைப்பாளியின் பெயரும் படைப்பைப் படிக்க ஒரு தூண்டுதல் ஆகாதா? குறைந்த பட்சம், அந்தப் படைப்பின் மிகச் சிறந்த இரண்டு வரி, அது மாதிரி எடுத்துப் போட்டாத்தான் மக்கள் படிக்கவே வருவாங்க..
2. இந்த முறை மல்டிபிள் ஆப்ஷன் இருந்தது.. அந்த வகையில், ஒன்று இரண்டு என்று ஓட்டு பதிபவரே வரிசைப் படுத்த முடிந்தால் அதுவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்த்துக்கள் நிலா
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா! நீங்க மூன்றாவது இடம் வாங்கினதுல எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். முதல் இரெண்டிற்குள் எதிபார்த்தேன்.
வாழ்த்துகள் நிலா! இன்னும் பல வெற்றிகள் அடைவீர்கள். உங்களுக்கு பரிசு கிடைத்ததால் ஆண்வர்க்கம் தப்பித்தது , இல்லையெனில் ஆண்களின் சதினு எங்கே சாபம் விட்ருவிங்களொனு பயந்தேன் நல்லவேலை தேன்கூடு ஆண்களை காப்பாற்றிவிட்டது:-))
வாழ்த்துக்கள் நிலா!
நானும் உங்க கதாநாயகி மாதிரி கிராமத்து பேக்காயிருந்து Engineering கல்லூரி விடுதிக்கு வந்து ஞானோதயம் பெற்றவன்.
-ரவிச்ந்திரன்
//வாழ்த்துக்கள் நிலா!! வோட்டுப் போட்டதுக்கு எதாவது டி.வி.டி குடுப்பீங்களா? :))) (சும்மா டமாசு மேடம்)//
dubukku
கொள்கை சிங்கங்களே இப்படி கேட்டா எப்படிங்க :-))) (சும்மா பதில் தமாசு)
உங்கள் டைரி கூட நல்ல இடம் வந்திருக்கே. வாழ்த்துக்கள்
அடுத்த போட்டில பின்னி எடுத்திருங்க, சரியா?
//உங்கள் இரண்டு படைப்புக்களுமே பின்னூட்டமிட்டவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவற்றில் ஒன்று மூன்றாம் பரிசு பெற்றதும் மற்றது முதல் ஆறில் நின்றதும் அவற்றின் வாசகர் வட்டத்தைக் காட்டுகிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//
நன்றி மணியன் அவர்களே!
உங்கள் ஊக்கம் என்னை முன் செலுத்தும்
அன்பு நிலா நீங்கள் சொல்வது மிகவும் சரி. படைப்பாளிகளின் பெயர்களை மறைத்து படைப்பை மட்டும் பார்த்து மதிப்பெண்கள் அளிப்பது மிகவும் நல்ல தேர்வு முறை. பாரபட்சமற்ற செயலாகும்.
நம்பிக்கை குழுமத்தில் நானும் ஒரு நடுவராக இருந்தேன். தேர்வுக்கு வந்த அனைத்து படைப்புகளிலும் படைப்பாளியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. சிலர் நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் இந்த முறையில் படைப்புகளை தேர்ந்தெடுத்தால் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நேர்மையாக இருக்கும். எல்லோருக்கும் திருப்தியாகவும் இருக்கும்.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால் சில வலைப்பதிவாளர்கள் மிக சாதாரணமான ஒரு விசயத்தை எழுதியிருப்பார்கள் அவர்களுக்கு ஏகப்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்கும். சிலர் மிகவும் ஆழமாக எழுதியிருப்பார்கள் அவர்களுக்கு சில சமயங்களில் ஒரு பின்னூட்டமும் இருக்காது. வந்து படித்துவிட்டும் பின்னூட்டம் எழுதாமல் பலர் போய்விடுகிறார்கள். இதுபோன்ற நிலைமை கதை தேர்வில் ஏற்பட்டுவிட்டால் ஒரு நல்ல சிறந்த கதைக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்காமல் போய்விடும்.
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz
கொத்ஸ்
நீரும் தேவும் பாசக்கார முனுசங்கய்யா... மொத ஆளா வாழ்த்து சொல்ல வந்திர்றீக ஒவ்வொருக்காவும்...
எப்பிடி நன்றி சொல்லன்னு தெரியாம முழிக்க வேண்டிக் கெடக்கு:-)
சிபி, எஸ்.கே
வாழ்த்துக்கு மிக்க நன்றி
//நீங்க சொன்னபடி, படைப்பாளியின் பெயரை வெளியிடாமல் இருக்கலாம். ஆனால், இது மாதிரி அதிக எண்ணிக்கையிலான ஆக்கங்கள் வரும் போது, படைப்பாளியின் பெயரும் படைப்பைப் படிக்க ஒரு தூண்டுதல் ஆகாதா? //
பொன்ஸ்,
அப்படிப்பார்த்தா படைப்பைவிட படைப்பாளியோட பாப்புலாரிட்டிதான் இதில் முக்கியத்துவம் பெறுகிறது, இல்லையா?
//குறைந்த பட்சம், அந்தப் படைப்பின் மிகச் சிறந்த இரண்டு வரி, அது மாதிரி எடுத்துப் போட்டாத்தான் மக்கள் படிக்கவே வருவாங்க.. //
இதுல இன்னொரு பிரச்சனை - இதை யார் செய்யறது? ஒருத்தருக்கு சிறந்த வரிகளாகப் படறது அடுத்தவங்களுக்கு இல்லாமப் போகலாம்.
அதனால போட்டி ஐடியல் என்று சொல்ல முடியாவிட்டாலும் அமைதியாக நடப்பதால் அப்படியே விட்டுவிடுதல் நல்லதென்பது எனது எண்ணம்.
//இதுல இன்னொரு பிரச்சனை - இதை யார் செய்யறது? ஒருத்தருக்கு சிறந்த வரிகளாகப் படறது அடுத்தவங்களுக்கு இல்லாமப் போகலாம்.//
படைப்பாளியே செய்யணும்னு தாங்க சொல்றேன். நம்ம படைப்பின் சிறந்த வரிகள், நமக்குத் தானே தெரியும்?
// இனி எப்போது போட்டி நடத்தினாலும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று நான் முடிவு செய்திருக்கிறேன் //
இந்த மாதிரியை தமிழ் வலையுலகத்திற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யாருன்னு தெரிஞ்சிக்கணுமின்னா இங்க பாருங்க :))
நன்றி சேது
Boo
//நீங்க மூன்றாவது இடம் வாங்கினதுல எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். முதல் இரெண்டிற்குள் எதிபார்த்தேன்.//
பரிசு கிடக்குது விடுங்க. உங்களைப் போல அன்பான வாசகர்கள் கிடைச்சதே ரொம்ப நிறைவா இருக்கு. நன்றி :-)
//இந்த மாதிரியை தமிழ் வலையுலகத்திற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யாருன்னு தெரிஞ்சிக்கணுமின்னா இங்க பாருங்க :))//
அப்படிப் போடுங்க! வாழ்த்துக்கள் முகமூடி.
(போன வருசம் திசைகளில் வந்த உங்களுடைய சிறுகதை ஒண்ணு எனக்கு ரொம்பப் பிடிச்சுது... உங்க வலைப்பூவிலேயே மீண்டும் பார்த்துட்டு அங்கேயே எழுதறேன். முகமூடின்னாலே அந்த சிறுகதை தான் எனக்கு ஞாபகம் வரும்)
//போட்டி ஐடியல் என்று சொல்ல முடியாவிட்டாலும் அமைதியாக நடப்பதால் அப்படியே விட்டுவிடுதல் நல்லதென்பது எனது எண்ணம்//
நிலா, இன்றைக்கு தமிழ் இணையம் இருக்கிற அழகிற்கு இது சரியான வார்த்தைகள்.
பி.கு வர வர பின்னுட்டங்களில் சுயவிளம்பரம் போட்டுக் கொள்வது அதிகமாகிவருகிறது. இதை
நான் வன்மையாய் கண்டிக்கிறேன் :-)))
நிலா,
"தேன்கூடு போட்டி - சில யோசனைகள்" - இந்த பதிவிற்கு உங்கள் ஆலொசனைகளை எதிர்பார்க்கிறேன். நேரன் கிடைத்தால் வருகை தரவும். நன்றி.
URL : http://manathinoosai.blogspot.com/2006/06/blog-post_28.html
//உங்களுக்கு பரிசு கிடைத்ததால் ஆண்வர்க்கம் தப்பித்தது , இல்லையெனில் ஆண்களின் சதினு எங்கே சாபம் விட்ருவிங்களொனு பயந்தேன் நல்லவேலை தேன்கூடு ஆண்களை காப்பாற்றிவிட்டது:-))//
வவ்வால்
இது சின்னப்புள்ளத்தனமாவில்ல இருக்கு :-))))
வெற்றி தோவிக்கெல்லாம் அடுத்தவரைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் உருப்பட்ட மாதிரிதான்... :-)
//நானும் உங்க கதாநாயகி மாதிரி கிராமத்து பேக்காயிருந்து Engineering கல்லூரி விடுதிக்கு வந்து ஞானோதயம் பெற்றவன்.//
ரவிச்சந்திரன்
இந்தக்கதை 'உலக ஞானம்' பற்றிய விவாதத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது! ஒவ்வொருவரும் தத்தம் அனுபவத்தைக் கொண்டே வாழ்க்கையைப் பார்க்கிறோம் என்பதற்கு இது உதாரணம். 'அறிவாளிகளுக்கு' இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. 'அப்பாவிகளுக்கு' கண்டிப்பாய் வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. நடப்பு ஒன்றுதான் எத்தனை வித்தியாசமாய்ப் பார்க்கப்படுகிறது பாருங்கள்!
வருகைக்கு நன்றி
வாழ்த்துகள் சகோதரி.
//படைப்பாளியே செய்யணும்னு தாங்க சொல்றேன். நம்ம படைப்பின் சிறந்த வரிகள், நமக்குத் தானே தெரியும்?//
கதையைப் பற்றிய ஒரு இருவரி அறிமுகம் எழுத இடம் ஒதுக்கலாம். படைப்பாளி வரிகளை எடுத்துப் போட்டாலும் சரி, ப்ரோமோவாக அறிமுகம் எழுதினாலும் சரி.
சில படைப்பாளிகள் நல்ல எழுத்தாளர்களாக இருக்கலாம். ஆனால் நல்ல விளம்பரம் செய்யத் தெரியாமல் போகலாம்... அது அவரவர் சமர்த்து என்று விட்டுவிட வேண்டியதுதான்
//எதற்காக இதை சொல்கிறேன் என்றால் சில வலைப்பதிவாளர்கள் மிக சாதாரணமான ஒரு விசயத்தை எழுதியிருப்பார்கள் அவர்களுக்கு ஏகப்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்கும். சிலர் மிகவும் ஆழமாக எழுதியிருப்பார்கள் அவர்களுக்கு சில சமயங்களில் ஒரு பின்னூட்டமும் இருக்காது. வந்து படித்துவிட்டும் பின்னூட்டம் எழுதாமல் பலர் போய்விடுகிறார்கள். இதுபோன்ற நிலைமை கதை தேர்வில் ஏற்பட்டுவிட்டால் ஒரு நல்ல சிறந்த கதைக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்காமல் போய்விடும்.
//
மஞ்சூர் ராசா
நீங்கள் சொல்வது மிகச் சரியே.
இந்தப் போட்டி முறையில் எழுத்தாளரின் பாப்புலாரிடி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது எனது எண்ணம்.
//இந்த மாதிரியை தமிழ் வலையுலகத்திற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யாருன்னு தெரிஞ்சிக்கணுமின்னா இங்க பாருங்க :))//
முகமூடி
நல்ல ட்ரெண்ட்...
நன்றி
//நிலா, இன்றைக்கு தமிழ் இணையம் இருக்கிற அழகிற்கு இது சரியான வார்த்தைகள்.//
உஷா
ஆமா... ஒரே அடிதடிதான்... விவாதம் பண்ணுவது தவறே இல்லை. அது நாகரீகமா இருக்கணும்ங்கறதுதான் என் விருப்பம். அன்புடம் குழுமத்தில இந்த நாகரீகத்தைப் பார்க்க முடியுது. பெரிய ஆச்சரியம் எனக்கு
//பி.கு வர வர பின்னுட்டங்களில் சுயவிளம்பரம் போட்டுக் கொள்வது அதிகமாகிவருகிறது. இதை
நான் வன்மையாய் கண்டிக்கிறேன் :-)))//
ஏன் கண்டிக்கணும்?
பில் அனுப்பிச்சிட்டா போச்சி:-))
மனதின் ஓசை
உங்கள் பதிவைப் பார்த்தேன்
போட்டி பற்றி எழுத நிறையவே இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்
பரஞ்சோதி
வாழ்த்துக்கு நன்றி
போட்டி, பரிசு மாதிரி விஷயங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் சங்கதி என்பதால் கருத்து எதுவும் சொல்ல முயலவில்லை.
//இந்தக் கருவைப் பல ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுணர்ந்தேன்// சோ வாட்?
போட்டி, பரிசு மாதிரி விஷயங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் சங்கதி என்பதால் கருத்து எதுவும் சொல்ல முயலவில்லை.
//இந்தக் கருவைப் பல ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுணர்ந்தேன்// சோ வாட்?
விளம்பரமும், விற்பனையும் படைப்பாளி எல்லாக் காலத்திலும் செய்ய வேண்டியே இருந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயை விட அழகி இல்லையா இந்தியாவில்? அவரது மார்க்கெட்டிங் செயல்பாடுகள் தான் அவரைப் பிற நடிகைகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
Post a Comment
<< Home