.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, July 04, 2006

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற ஒரு எளிய வழி

Your Ad Here

வெற்றியை விரும்பாத மனிதர்கள் எவரேனும் உண்டா? வெற்றியைத் தேடிப் போகாத மனிதர்கள் இருக்கலாம். ஆனால் வரும் வெற்றியை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்க வாய்ப்பில்லை. சுய முன்னேற்றக் கட்டுரைகளில் 'வெற்றி'க்குத் தரப்படும் முக்கியத்துவம் அதிகம். Affirmations கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ்மனம் அதனை நம்ப ஆரம்பித்து பின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்கிறது என்பது நிபுணர்களின் கருத்து.

வெற்றியைத் தேடித் தரும் வாக்கியங்கள் சிலவற்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அவற்றைக் கீழே தருகிறேன்: (தேவைப்பட்டவர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளவும்)


Nila is chosen for success.
Nila's personal power is enormous.
Nila, your life is a miracle in the making.
That's right, Nila, you are far more than enough.
Nila, you believe in yourself.
Nila, your higher self believes in you.
Nila, you are destined for happiness, achievement and complete fulfilment.


Nila என்பதற்கு பதில் உங்கள் பெயரைப் போட்டுக் கொண்டு மேற்கண்ட வாக்கியங்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்:

1) ஒரு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும்

அல்லது

2) ஒரு நாளில் மூன்று முறை வாசிக்க வேண்டும்

அல்லது

3) மும்மூன்று முறையாக ஒரு நாளில் 4 முறை வாசிக்க வேண்டும்.


எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் வாசிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் வெற்றியை அடைவீர்கள் என்கிறார் Wiseman Eromosele (அந்த வாக்கியங்களின் சொந்தக்காரர்)

அப்புறம் தேன்கூடு போட்டியென்ன, நோபல் பரிசே கூட வெல்லலாம்!

காசா பணமா? உற்சாகமூட்டும் வார்த்தைகள்தானே! முயன்று பாருங்கள்!

(வெற்றி பெற்றால் மறக்காமல் கமிஷனையும் வெட்டிவிடுங்கள் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

19 Comments:

At July 04, 2006 3:43 PM, Blogger கிவியன் said...

ரொம்ப நன்றி நிலா. ஆனா ஒரு சந்தேகம், இன்றிலிருந்து 20ம் தேதி வரை தினமும் மூன்று முறை சொல்லப் போகிறேன். ஆனா கதை எழுதப் போவதில்லை. எனக்கு பரிசு கிடைக்குமா?

அது என்னன்னாக்க, இந்த மாதிரி பத்து பேருக்கு லெட்டர் இல்லன்னா இமெயில் அனுப்பினா அப்புறம் பாரு நீ ராஜா ஆயிருவேன்னு பல திசைகளிலிருந்து வரும் 'திருப்பதி' மாதிரிதான் இருக்கிறது நீங்கள் சொல்லவதும். சொம்மா உக்காந்துக்கினு இத்த மாத்ரம் சொன்னா போதாது, கடுமையா உழைக்கனும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, அது கூட இதயும் சேத்துக்கலாம், அப்ப வேணா நீங்க சொல்லரது நடக்கும், அதாவது //அப்புறம் தேன்கூடு போட்டியென்ன, நோபல் பரிசே கூட வெல்லலாம்!//

 
At July 04, 2006 4:19 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

:)

 
At July 04, 2006 6:28 PM, Blogger Ram.K said...

வேறு வழி இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன்.
இது தானா ?

;-)


சிரித்தபடி
பச்சோந்தி.

 
At July 04, 2006 6:55 PM, Blogger manu said...

நன்றி, நிலா.ஆட்டோ சஜஷன் மிக முக்கியம் எல்லோருக்கும்.அப்போ
வெற்றி நிச்சயம் பாடலாமிலையா!

 
At July 04, 2006 11:05 PM, Blogger மணியன் said...

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை யெல்லாம் உன்னைச் சேரும் !
வெற்றி மந்திரங்களை தனக்கு மட்டுமே பயன்படுத்தாது எல்லோருக்கும் பகிர்ந்தளித்த பெருமையும் தான். இதை போன முறை பயன்படுத்தி proven மந்திரங்கள் தானே :)

 
At July 05, 2006 12:23 AM, Blogger நிலா said...

//சொம்மா உக்காந்துக்கினு இத்த மாத்ரம் சொன்னா போதாது, கடுமையா உழைக்கனும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம,//

கிவியன்

எதுக்காக எந்த எதிர்பார்ப்புமில்லாம உழைக்கணும்? எனக்குப் புரியலை... விளக்குவீர்களா? நோக்கம் இல்லாமல் 'உழைக்கணும்கறதுக்காக' உழைக்கிறது வீணல்லவா?

சோம்பி இருந்து வெற்றியை ஈர்ப்பதற்கு அல்ல இந்த மந்திர வார்த்தைகள். நான் சொல்லியபடி

//பின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்கிறது என்பது நிபுணர்களின் கருத்து.//

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி வெற்றிக்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு முறை.

//ஒரு சந்தேகம், இன்றிலிருந்து 20ம் தேதி வரை தினமும் மூன்று முறை சொல்லப் போகிறேன். ஆனா கதை எழுதப் போவதில்லை. எனக்கு பரிசு கிடைக்குமா?//

நல்ல கேள்வி...
திரும்பத் திரும்பச் சொன்னால் உங்களை கதை எழுத வைக்கும் உத்வேகத்தை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தரும் என்பதுதான் அடிப்படையே...

 
At July 05, 2006 1:44 AM, Blogger நிலா said...

பொன்ஸ்,
இதெல்லாம் இல்லாமலே வெல்லலாம்னு நினைக்கிறீங்க போலிருக்கு :-)

 
At July 05, 2006 3:22 AM, Blogger நிலா said...

//வேறு வழி இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன். //
பச்சோந்தி,

நம்ம ஊரு தேர்தல் மாதிரி ஏதாவது குறுக்கு வழி எதிர்பார்த்தீங்களா? :-)))

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல... ஒரு மில்லியன் கொடுத்தீங்கன்னா ஒரு ஆயிரம் வோட்டு செட் அப் பண்ணிறலாம் :-)))

 
At July 05, 2006 4:32 AM, Blogger நிலா said...

//வெற்றி நிச்சயம் பாடலாமிலையா!//

மனு

போட்டியில் பங்கு பெறுகிறீர்கள் போலிருக்கிறது!
வெற்றி நிச்சயமாகட்டும் :-)

 
At July 05, 2006 7:26 AM, Blogger நிலா said...

//வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்!//

சேரட்டும் சேரட்டும்...

மணியன் அவர்களே,

இந்த மாதப் போட்டியில் நீங்களுண்டா?

 
At July 10, 2006 3:57 AM, Blogger புதுமை விரும்பி said...

நிலா, இங்கு ஒன்றை நினைவு கூற விரும்புகின்றேன். நான் படித்த ஏதோ ஒரு பதிப்பகத்தின் பகவத் கீதையின் கடைசி பின்சேர்க்கையில், இந்த ஸ்லோகத்தைப் பத்து லட்சம் முறை சொன்னால் இது நடக்கும். இன்னொரு ஸ்லோகத்தை கோடி முறை சொன்னால், இன்னொன்று நடக்கும் என்று எழுதியிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்த மனது சம்பந்தமான உண்மைகள் மேற்கு உலகத்தால் திருப்பிசொல்லப் படுகின்றன. நாமும் கேட்போம்! நமது சித்த மூலிகைகள் மாத்திரையாக மாற்றப்பட்டு நமது சந்தைக்கே விற்பனைக்கு வருவது போலத்தான், நமது மனது, உள்ளுணர்வு சம்பந்தமான உண்மைககள் நமக்கே திரும்பி வர ஆரம்பித்திருக்கின்றன. "Wiseman Eromosele" என்பவரின் கருத்து நம்மிடையே இரண்டாயிரும் வருடங்களாக புலக்கத்தில் இருக்கிற ஒன்று தான். ஒரே வித்தியாசம் இவரின் கருத்தில் மனதின் focus point நம்மைச் சார்ந்ததாயிருக்கிறது. ஆனால், முன்பு அந்த focus point நமக்கு வெளியேயிருந்தது (ஒரு கடவுளைச் சார்ந்த நம்பிக்கையின் மேல்). இரண்டிலும் நடக்கும் விசயம் ஒன்றே - concentration of mind.

 
At July 10, 2006 5:59 AM, Blogger நிலா said...

புதுமை விரும்பி,

// நம்முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்த மனது சம்பந்தமான உண்மைகள் மேற்கு உலகத்தால் திருப்பிசொல்லப் படுகின்றன.//

நானும் இப்படி சில சமயம் நினைத்ததுண்டு

//ஒரே வித்தியாசம் இவரின் கருத்தில் மனதின் focus point நம்மைச் சார்ந்ததாயிருக்கிறது. ஆனால், முன்பு அந்த focus point நமக்கு வெளியேயிருந்தது (ஒரு கடவுளைச் சார்ந்த நம்பிக்கையின் மேல்).//


நாமே கடவுளின் ஒரு பகுதி என்பதுதானே ஆன்மீகத்தின் அடிப்படை.

// இரண்டிலும் நடக்கும் விசயம் ஒன்றே - concentration of mind.//

ரொம்ப சரி

 
At July 10, 2006 7:08 AM, Blogger புதுமை விரும்பி said...

நிலா,

//நாமே கடவுளின் ஒரு பகுதி என்பதுதானே ஆன்மீகத்தின் அடிப்படை//

நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் ஒரு உண்மையை, கேட்பவரைப் பொறுத்து எந்த இடத்திலிருந்து துவங்குவது என்று இருக்கிறது. உதாரணமாக, வெற்றிடம் என்று நேரிடையாக யாரிடமும் விளக்கிவிட முடியாது. மாறாக, பொருட்கள் பற்றிய அறிவைக்கொடுத்துவிட்டு (as we can percieve things through sensory organs), இந்த பொருட்கள் எதுவும் இல்லாத நிலை தான் வெற்றிடம் என்று சொல்வது எளியது. அது மாதிரி தான் ஆன்மீகக் கல்வியிலும், நிறைய நிலைகள் இருக்கின்றன. கடவுள் சிற்பங்களுக்குள் இருப்பது, முதல் நிலைகளில் வருகிறது. மெதுமெதுவாக, கடவுளை மனிதனுக்குள் கொண்டுவருவது பின்னிலைகளில் நடக்கிறது.

 
At July 10, 2006 8:01 AM, Blogger நாமக்கல் சிபி said...

//எதுக்காக எந்த எதிர்பார்ப்புமில்லாம உழைக்கணும்? எனக்குப் புரியலை... விளக்குவீர்களா? நோக்கம் இல்லாமல் 'உழைக்கணும்கறதுக்காக' உழைக்கிறது வீணல்லவா?
//

உழைக்கும் நேரத்தில் வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்திக்க கூடாது. அதை தான் கிதையும் சொல்கிறது. ஏனென்றால் வெற்றி,தோல்வியைப் பற்றி சிந்தித்திக் கொண்டு இருந்தால் மணம் சிதறும்.
பரிட்சைக்கு படிக்கும் போது, பாஸாகிட்ட என்னவெல்லாம் பண்ணலாம், பாஸாகலனா என்னவெல்லாம் நடக்கும்னு யோசிச்சிட்டு இருந்தால் படிக்கமாட்டோம். நல்லா dream அடிச்சிட்டு இருப்போம்...
இது சுய அனுபவத்துல உணர்ந்தது.
நான் பரிட்சைக்கு படிக்கும் போதே அடுத்த 2 மாச லீவுக்கு என்ன பண்ணலாம், எத்தனை படம் பாக்கலாம்னு யோசிச்சிட்டு இருப்பன்.

(பி.கு: எப்படியோ அரியர்ஸ் வைக்காம பாசாகிட்டேன். பாரதியார் யுனிவர்சிட்டி வாழ்க!!!)

 
At July 10, 2006 10:34 AM, Blogger நிலா said...

புதுமைவிரும்பி

நல்ல விளக்கம். நன்றி

 
At July 10, 2006 3:17 PM, Blogger கிவியன் said...

நிலா ரொம்ப சீரியஸா எடுத்துட்டீங்க போலருக்கு? இங்கே காணாமல் போனது நகைச்சுவை. எனினும் உங்கள் கேள்விக்கு வெட்டிப்பயல் பதில் சொல்லீட்டார். நன்றி வெட்டி.

//எதுக்காக எந்த எதிர்பார்ப்புமில்லாம உழைக்கணும்? எனக்குப் புரியலை... விளக்குவீர்களா? நோக்கம் இல்லாமல் 'உழைக்கணும்கறதுக்காக' உழைக்கிறது வீணல்லவா?//

என்ன சொல்ல வரீங்க நிலா, இந்த உலகத்துல நடந்த பல விஷயங்கள் எந்த விதமான சுயஎதிர்பார்பு, அதாவது இதனால எனக்கு என்ன கிடைக்கும் என்று, இல்லாமல் உழைத்தனால் மட்டுமே நிகழ்ந்தவை. யோசிச்சு பாருங்க.
//திரும்பத் திரும்பச் சொன்னால் உங்களை கதை எழுத வைக்கும் உத்வேகத்தை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தரும் என்பதுதான் அடிப்படையே.//

என்கென்னவோ இந்த மேற்கத்திய சிந்தனையில் எதோ மிஸ்ஸிங்குனே படுது. இந்தவாரம் மார்கெட்டுல நல்லா பேசர கிளி ஒண்ண பாத்தேன். அத வாங்கீட்டு வந்து "என்னால நல்லா கதை எழுத முடியும் ...அப்டீன்னு சொல்லிக்க்டுத்தா அது பாட்டுக்கு சொல்லீட்டே இருக்கும். ஒரு வாரம் கழிச்சு ஒரு குயர் பேப்பரும் பேனாவும் கிளிக்கு குத்தா அது கதை எழுதுமா?

மறுபடியும் சொல்றேன், உங்கள் ஹாஸ்ய உணர்வை கைவிட்டு விடாதீர்கள்.

பிகு:கிளி ஒரு படிமமே. பேசர கழுதை கிடைத்தால அதனையும் ட்ரை பண்ணலாம்.

 
At July 10, 2006 10:34 PM, Blogger நிலா said...

//உழைக்கும் நேரத்தில் வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்திக்க கூடாது//

வெட்டிப் பயல்,

ஒரு வேலை செய்யும்போது ஒரு மனப்பட்டுச் செய்யணும்கறதுல இரு வேறு கருத்து கிடையாதுங்க. ஆனா எதுக்கு வேலை செய்யறோம்னே தெரியாம செய்யக் கூடாதில்லையா?

கீதை கூட 'பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்'னுதான் சொல்லுது. கடமைக்கும் உழைப்புக்கும் வித்தியாசமிருக்கு.

ஒருத்தன் வேலை இல்லைன்னு எந்த எதிர்பார்ப்புமில்லாம ஒரு வீட்டை இடிக்கறது கூட உழைப்புதான் இல்லியா? ஆனா அது அவனோட கடமை இல்லை.

உழைப்புக்கு நோக்கம் இருக்கணும்; உழைப்பினால என்ன சாதிக்கப் போறோம்னு தெளிவா இருக்கணும்; சும்மா நானும் உழைக்கிறேங்கறதுக்காக உழைக்கக் கூடாது அப்படின்னுதான் சொல்ல விரும்பினேன்.

 
At July 10, 2006 10:49 PM, Blogger நிலா said...

//நிலா ரொம்ப சீரியஸா எடுத்துட்டீங்க போலருக்கு? இங்கே காணாமல் போனது நகைச்சுவை.//

கிவியன்

சும்மாவே எல்லாத்துக்கும் வெளையாட்டா பதில் சொல்ற ஆளுநான்... உங்க தொனி சீரியஸா இருக்கவும் நானும் சீரியஸா எழுதினேன்.
சொல்லீட்டிங்கல்ல... :-)


//என்ன சொல்ல வரீங்க நிலா, இந்த உலகத்துல நடந்த பல விஷயங்கள் எந்த விதமான சுயஎதிர்பார்பு, அதாவது இதனால எனக்கு என்ன கிடைக்கும் என்று, இல்லாமல் உழைத்தனால் மட்டுமே நிகழ்ந்தவை.//

இதை என்னால ஒத்துக்க முடியாதுங்க. நானும் ஒரு காலத்தில இந்த கருத்தை ஆதரிச்சு பாலகுமாரன்கிட்டேல்லாம் வாதம் பண்ணிருக்கேன். ஆனா கருத்து விரியவிரிய இதையெல்லாம் ஏத்துக்க முடியலை.

சுயநலமில்லாத சேவைன்னு வெளிலருந்து பாக்கற நமக்குப் படலாம். ஆனா அதில திருப்தி இல்லைன்னா அதை அவங்க செய்ய மாட்டாங்க. அப்படியே செஞ்சாலும் ரொம்ப நாளைக்குத் தாங்காது. அப்படிப்பாத்தா தன்னோட திருப்தியை எதிர்பார்த்துத்தானே எல்லாரும் உழைக்கிறோம்! ஃபிஸிகல் சென்ஸ்ல வேணா பலன் எதிர்பாராமல் இருக்கலாம். ஸ்பிரிச்சுவல் சென்ஸ்ல தனது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுகிற எதிர்பார்ப்பு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இருக்குது அப்படிங்கறது என் கருத்து. ஆனா உங்க கருத்து உங்களுக்கு சரியா பட்டா அதை வச்சிக்கலாம், தப்பில்லை.

//இந்த மேற்கத்திய சிந்தனையில் எதோ மிஸ்ஸிங்குனே படுது. //
கிவியன், இதெல்லாம் மேற்கத்திய சிந்தனையாங்கறதே பெரிய கேள்விக்குறி. நம்ம மக்கள் திரும்பத் திரும்ப சொல்ற சுலோகமெல்லாம் இந்த அஃபர்மேஷன் வகையைச் சேர்ந்ததுன்னுதான் எனக்குத் தோணுது. புதுமை விரும்பிகூட அப்படித்தான் சொல்லிருக்காரு பாருங்க... ஏற்கெனவே பாஸ்மதி, மஞ்சள்னு பேடண்ட் ரைட்ஸ் பிரச்சனை. நீங்களே இதையும் எழுதிக் கொடுத்திருவீங்க போலிருக்கு :-)


//இந்தவாரம் மார்கெட்டுல நல்லா பேசர கிளி ஒண்ண பாத்தேன். அத வாங்கீட்டு வந்து "என்னால நல்லா கதை எழுத முடியும் ...அப்டீன்னு சொல்லிக்க்டுத்தா அது பாட்டுக்கு சொல்லீட்டே இருக்கும். ஒரு வாரம் கழிச்சு ஒரு குயர் பேப்பரும் பேனாவும் கிளிக்கு குத்தா அது கதை எழுதுமா? //

செஞ்சு பாத்து ஒரு ஆய்வறிக்கை கொடுங்க, கிவியன்... அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் :-)

 
At July 12, 2006 10:44 PM, Blogger தமிழ் பூக்கள் said...

hi dear friend thanks but i have not saw that

 

Post a Comment

<< Home