சிற்பிகளுக்கு சமர்ப்பணம்!
பேச்சி ஆத்தாளையும் பாப்பாளையும் வாசித்து, நேசித்து, வாக்களித்து முதற்பரிசும் வாங்கித் தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.
முதல் நான்கு இடங்களுக்குள் வெறும் 6 வாக்குகளே வித்தியாசம் என்பதால் நீங்கள் எனக்காக நேரம் ஒதுக்கி இட்ட ஒவ்வொரு வாக்கும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. தனக்குக் கூட வாக்களிக்காமல் எனக்கு வாக்களித்த மதுமிதா, நான் வெற்றி பெற்றதற்குத் தானே வெற்றி பெற்றதாய் மகிழ்வுறும் ஜயராமன் போன்றோரின் அன்புதான் முதல் பரிசைவிட எனக்குப் பெரிதாய்த் தெரிகிறது.
அதிக வாக்குகளைப் பெற்றதால் மட்டும் 80 படைப்புகளில் என்னதுதான் சிறந்தது என்பதில்லை. வாக்காளர்கள் அனைவரும் அனைத்துப் படைப்புகளையும் படித்திருக்க வாய்ப்பில்லையே! எனவே, இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியை படைப்புக்கான உரைகல்லாக எடுத்துக் கொள்ளாமல் இதனை ஒரு பயிற்சிக்களமாகப் பாவித்து தொடர்ந்து பங்கு பெறுவீர்கள் என நம்புகிறேன் (நானும்தான்:-). பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!
ஆக்கபூர்வமான விமரிசனங்களாலும் கனிவான பாராட்டுக்களாலும் தொடர்ந்து என்னை செதுக்கி வரும் அன்பர்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். உண்மையில் இந்த வெற்றி இந்தச் சிற்பிகளையே சாரும்!
14 Comments:
//தனக்குக் கூட வாக்களிக்காமல் எனக்கு வாக்களித்த மதுமிதா,//
வாழ்த்துக்கள் மதுமிதா...
உண்மையாகவே இதுக்கெல்லாம் பெரிய மனசு தான் வேண்டும், அந்த நன்றியை மறக்காமல் நினைவு கூறுகின்றீர்கள் பாருங்கள் நிலா, இது இன்னும் சிறப்பு,
//வாக்காளர்கள் அனைவரும் அனைத்துப் படைப்புகளையும் படித்திருக்க வாய்ப்பில்லையே//
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை,
நிலா..தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள், வாழ்த்துக்கள்,
அன்புடன்...
சரவணன்.
நிலா வாழ்த்துக்கள்.
மதுமிதா ஓட்டளித்ததும் நீங்கள் அதை சொன்னதும் நாம் நல்ல நாட்டில் தான் இருக்கிறோம் என்ற பெருமை வருகிறது.
இந்த நாட்டுப்புற வண்ணங்களை நிறைய படைக்க வேண்டும்.நாங்கள் காத்து இருக்கிறோம்.அன்புடன்,
வாழ்த்துகள் நிலா. உங்கள் கதைக்கு முதல்பரிசு கிடைத்தது வியப்பளிக்கவில்லை. கருத்தை விட அதைச் சொல்லும் நடை என்று உண்டு. எளிய பட்டிக்காட்டு நடையே உங்கள் பலம். அதனால்தான் கதையைப் படித்தாலும் இயல்புத்தன்மை மாறாமல் இருக்கிறது. தொடரட்டும் இது. மீண்டும் எனது வாழ்த்துகள்.
நன்றி சரவணன்
இத்தகைய அங்கீகாரங்கள் பொறுப்பை அதிகரிக்கின்றன
தரமாக எழுத தொடர்ந்து முயல்கிறேன்
வாழ்த்துக்கள்!!!
//இந்த நாட்டுப்புற வண்ணங்களை நிறைய படைக்க வேண்டும்.//
மனு
நிறையப் பேருக்கு இந்த நடை பிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதிகம் எழுத முயற்சிக்கிறேன்
ஊக்கத்துக்கு நன்றி
நிலா!!!
போட்டிக்கு வந்த படைப்புகள் அதிகம்னாலும் பெரும்பாலான படைப்புகளை படிச்சேன். அதில எனக்கு பிடிச்ச நான்கு படைப்புகளை வரிசைப்படுத்தி அப்படியே ஓட்டும் போட்டேன். வரிசை மாறாமல் பரிசும் வந்திருக்கு என்ன ஆச்சரியம் பாருங்க !
வலைத்தளங்களை மேய ஆரம்பிச்சதில் என்னோட வாசித்தல் கொஞ்சம் மேம்பட்டிருப்பதைதானே இந்த முடிவுகள் காட்டுகிறது?.
எனது வாழ்த்துக்கள்.
நல்ல படைப்புக்குக் கிடைத்த நல்ல பரிசுக்கு நெஞ்சாற வாழ்த்துகிறேன்!
வாழ்த்துகள் நிலா
///
வாக்காளர்கள் அனைவரும் அனைத்துப் படைப்புகளையும் படித்திருக்க வாய்ப்பில்லையே///
இது என் விஷயத்தில் உண்மை நிலா
இளவஞ்சியைப்போல் அனைத்து படைப்புகளையும் நான் வாசிக்கவில்லை.
இதை சொல்வதற்கு கூச்சமாக இருந்தாலும், இதுவே உண்மை.
ஓட்டெடுப்பு முடிந்ததும் அனைத்து படைப்புகளையும் வாசிக்கவேண்டும் என்றிருந்தேன். இன்னும் இயலவில்லை.
உங்கள் ஆத்தா, பாப்பா மறக்க இயலா பாத்திரங்கள்.
தொடரட்டும் உங்கள் பணிம்மா.
///
தனக்குக் கூட வாக்களிக்காமல் எனக்கு வாக்களித்த மதுமிதா///
இது உண்மை. முதலில் இதுதான் நடந்தது. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நிலா. உங்கள் பெருந்தன்மைம்மா இது.
அதற்குப்பிறகு நடந்ததை நானே மறக்க விரும்புகிறேன் நிலா.
ஓட்டெடுப்பில் விதி மீறல் இருக்கக்க்கூடாது. என்னை அறியாது நிகழ்ந்த தவறுகள் நானே பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் பொன்ஸ் சின் சந்திரா அத்தையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் கடைசி வரி சாரின் இறப்பை சந்திராஅத்தையின் இறப்பாக காட்டியிருந்த விதம்.
இது போன்ற படைப்புகளை வாசிக்க தவறிவிட்டேனோ என்றிருக்கிறது.
என்றாலும் பரிசு வாங்கிய நான்கு படைப்புகளையும் வாசித்திருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் இருக்கிறது நிலா.
நீங்கள் இந்த லிங்க் அளிக்கவில்லையென்றால் நான் இந்த போட்டியில் பங்கெடுத்திருக்கவே இயலாது.
நல்ல ஒரு பயிற்சிக்களமாகவே கருதுகிறேன் இப்போட்டியினை.
எந்த முன்னேற்பாடும் இல்லாமல்
எந்த எடிட்டும் செய்யாமல் அப்படியே எழுதி அப்படியே இடப்பட்ட படைப்புகள் என்னுடையவை.
இதற்கு தேன்கூடு, தமிழோவியம், இளவஞ்சிக்கு நன்றியினைத் தெரிவிக்கிறேன்
நிலா தொடருங்கள் உங்கள் பணியினை
//கருத்தை விட அதைச் சொல்லும் நடை என்று உண்டு. எளிய பட்டிக்காட்டு நடையே உங்கள் பலம்//
நன்றி ராகவன்... தொடர்ந்து எழுத முயல்கிறேன்
வாழ்த்துக்கள் நிலா..
//நல்ல படைப்புக்குக் கிடைத்த நல்ல பரிசுக்கு நெஞ்சாற வாழ்த்துகிறேன்!//
வசிஷ்டரின் வாயால் வாங்கிய பாராட்டு போல இனிக்கிறது. நன்றி :-)
பாலா, மது
நன்றி
Post a Comment
<< Home