.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, July 25, 2006

தமிழோவியத்தில் நிலாச்சோறு

Your Ad Here

(நான் தயாரித்த தமிழோவியம் சிறப்பிதழின் முன்னுரை)
நன்றி: தமிழோவியம்.காம்

'நான் யார்?' இந்தக் கேள்வியை எனக்குள் நான் கேட்காத நாளில்லை. விடை கிடைத்திருந்தால் ஞானம் பெற்றிருப்பேனே? என்னவென்று என்னை அறிமுகம் செய்து கொள்வது?

நிலா என்றா? நிர்மலா என்றா? நிர்மலா ராஜு என்றா? நிமி என்றா? நிம்மு என்றா...? தெரியவில்லை. இந்த ஒவ்வொரு பெயருக்கும் வெவ்வேறு அடையாளங்கள், பரிமாணங்கள்...

தவிர,

வேதிப் பொறியியலாளர்
மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர்
எழுத்தாளர்
பத்திரிகையாளர்
பத்திரிகையாசிரியர்
குறும்படத் தயாரிப்பாளர்
வானொலி/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
பேச்சாளர்
பாடகி
ஃபோட்டோகிராஃபர்
க்ரஃபாலஜிஸ்ட்
நாட்டியக்காரி
போன்ற ஏகப்பட்ட அரைகுறை முகங்கள் எனக்குண்டு. வேதிப்பொறியியல் தவிர வேறு எதையும் முறையாகப் பயின்றதில்லை. எந்த முகமும் இன்னும் முழுமை பெறவுமில்லை... இதற்கு மேல் என்னைப் பற்றிச் சொல்லத் தெரியாததால் என்னை அருகிருந்து பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் (கரகாட்டக்காரன் செந்தில் போல காசு கொடுத்தெல்லாம் சொல்லச் சொல்லலீங்க... நம்புங்க... :-))):


பெற்றோர்: பேச ஆரம்பித்ததிலிருந்தே உண்மையே பேசுவாள்; அளவுக்கு மீறிய பாசம், மன்னிக்கும் குணம், தகுதி பார்க்காமல் பாகுபாடின்றி பழகும் பண்பு - இவையெல்லாம் விசேஷ குணங்கள். பாலபருவத்திலேயே எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஓய்வில்லா ஆர்வம்தான் இன்று நிலாச்சாரலாய்ப் பொழிகிறது.


கணவர்: A person of commitment, hardwork, perseverance & vision. தப்புன்னா தப்பு... அது கடவுளே ஆனாலும் சரி... no exceptions even for herself. In our hypocritical society, it's difficult to survive this way. But hats off to her... she keeps at it and I am sure she will keep at it. She is very honest - What you see is what you get!

பூங்கொடி (நிலாக்குழு உறுப்பினர்) : என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த எனக்கு எதையும் செய்யலாம் என்ற ஊக்கம் கொடுத்தது நிலாச்சாரலின் நிலா தான். அவரின் வேலை வாங்கும் பாங்கு என்னை எப்பொழுதும் வியக்க வைக்கிறது. ஒவ்வொருவரிடம் மறைந்து இருக்கும் திறமையை அறிந்து அதை வெளிக்கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே தான். எனக்கு கிடைத்த நண்பர்களில் இவரை ஓர் உற்ற தோழியாக நான் கருதுகிறேன் என்று கூறினால் அது மிகையாகாது. எல்லாவற்றிலும் சிறப்பு நாங்கள் இது வரை நேரில் சந்தித்தது கூட இல்லை.

ராஜி (தோழி) : The Nirmala I knew years back was a confident person, who used to be admired but misinterpreted by many as aggressive and pushy. I used to wonder at her capabilities, admire her hardworking nature and also understand a person who wanted to prove to the world that she can. Some ways of God tested her and moulded her to a person of different nature. The Nirmala I came to know years after was a mature human being with a ear for all and an individual who had risen above the expectations of many (friends and foes alike!!).

சத்தி சக்திதாசன் (எழுத்தாளர்) : திருமதி நிர்மலா ராஜு ஒரு ஆற்றல் கடல். " நிலாச்சாரல் " எனும் அற்புதமான மின்னிதழின் ஆசிரியராக மட்டுமல்ல அனுபவமிக்க ஒரு எழுத்தாளராகவும் திகழ்கின்றார். முழுநேர மென்பொருள் வல்லுனராக பொறுப்புமிக்க பதவி வகித்துக் கொண்டு, நிலாச்சாரல் போன்றதொரு தரமான தமிழ் மின்னிதழின் முதுகெலும்பாக இருந்து அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது இலகுவான காரியமன்று. அதைத் திறம்படப் புரியும் நிலா என்னும் நிர்மலாவின் ஆற்றலின் ஆழத்திற்கு இதுவே எடுத்துக்காட்டாக அமைகின்றது. மிகவும் சிநேக மனப்பான்மை கொண்ட நிர்மலா இந்த நிலாச்சாரல் எனும் இதழை ஒரு குடும்பம் போல படைப்பாளிகளுடன் இணைந்து நடத்தி வருகின்றார்.

பல சிறுகதைப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசுகள் பெற்றிருக்கும் இவரது கதைகள் ஆனந்த விகடன், திசைகள், பாக்யா, கல்கி ஆகிய முன்னணி இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.

மணியன் (வாசகர்): நிலாவின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மனிதர்களின் உணர்ச்சிகளை படம் பிடிப்பதில் அவரின் எழுத்துக்கள் சிறப்பானவை. வட்டார மொழியில் நல்ல ஆளுமை உள்ளது. அவரின் கட்டுரைகள் நேர்மறையான, தன்னம்பிக்கையைப் பலப்படுத்தும், புதிய கோணங்களை ஆராயும் விதயங்களைக் கொண்டுள்ளன. 'சுகம் செயல்முறை' ,'கையெழுத்தும் தலையெழுத்தும்' 'வெற்றி பெறுவது எப்படி' போன்ற ஆக்கங்கள் வாழ்க்கையில் தளர்ந்தவர்களுக்கு ஒரு கொழுகொம்பு. நிலாச்சாரல் இதழ் பொருளடக்கமும் கட்டமைப்பும் அவரின் மேலாண்மை திறத்தை வெளிப்படுத்துகின்றன.



இவர்களெல்லாம் என் மேல் மலர் சொரிவதால், என்னை வெறுக்கவும் என் மேல் புழுதிவாரித் தூற்றவும் யாருமில்லை என எண்ணிவிடாதீர்கள். எனக்குத் தெரிந்து சிலர் இருக்கிறார்கள்; தெரியாமல் உலகில் அநேகம் பேர் இருப்பார்கள். அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் நல்லவராக இருக்க இயலாதே! மனித மனங்கள் சிக்கல் நிறைந்தவை - இந்தச் சிக்கல்களில்லாவிட்டால் கதைகளுக்குக் கரு ஏது?


எதையும் வித்தியாசமாய்ச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழோவியத்தின் 'சிறப்பு எழுத்தாளராக' அல்லாமல் 'சிறப்பு ஆசிரியராக'ப் பணியாற்ற வேண்டுமென விரும்பினேன். அதனால் எனக்குப் பிடித்த சில எழுத்தாளர்களுக்குத் தலைப்புக் கொடுத்து சிறப்புக் கட்டுரைகள் எழுதச் செய்து இந்த இதழைத் தொகுத்திருக்கிறேன். ஆக்கம் மற்றும் எழுத்தாளர் பற்றிய எனது சிறுகுறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. நான் ஆக்கிய இந்த நிலாச்சோறு உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தக் கூட்டஞ்சோற்றில் இடம் பெற்றிருக்கும் பதார்த்தங்கள்:

செய்யின் ரீயாக்ஷன் - பயங்கரவாதத்தின் ஒரு முகம் : முகமூடி
வைரமுத்து ஏற்றிய மெழுகுவத்தி - கவி ஆய்வு: புகாரி
ரஜினி Vs ரசிகர்கள்: நிலா
ஜபரவின் அலசல்
கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்
காலம் கடந்தும் வாழும் வரலாற்று நாயகனின் வாழ்க்கைப் பதிவு நூல் - நூல் அறிமுகம் : மதுமிதா
வி.ஐ.பிக்களுடன் இ-காணல்: நிலா
வித்தியாசமான வடைகள் - சமையல் குறிப்பு: பிரேமா
ஒளிபடைத்த கண்ணினாய் : நிலா
ஓ போடறேன் : நிலா

அன்புடன்

நிலா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

16 Comments:

At July 26, 2006 12:26 AM, Blogger மணியன் said...

நீங்கள் சிறப்பு ஆசிரியராக வடிவமைத்த தமிழோவியம் கண்டேன். தமிழ்மணத்தின் சாரத்தை அங்கு மணம் வீச வைத்திருக்கிறீர்கள்.
மற்றவர்களை வேலை வாங்குவதில் உங்களுக்குள்ள திறமை தெரிகிறது :))

 
At July 26, 2006 2:24 AM, Blogger ILA (a) இளா said...

//வேதிப் பொறியியலாளர்
மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர்
எழுத்தாளர்
பத்திரிகையாளர்
பத்திரிகையாசிரியர்
குறும்படத் தயாரிப்பாளர்
வானொலி/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
பேச்சாளர்
பாடகி
ஃபோட்டோகிராஃபர்
க்ரஃபாலஜிஸ்ட்
நாட்டியக்காரி//
என்னங்க இவ்வளவு போதுமா? அட்டேங்கப்பா. தலை சுத்துது.

தமிழோவியம்- படித்துவிட்டு பிறகு வந்து பின்னூட்டமிடுகிறேன்

 
At July 26, 2006 2:28 AM, Blogger ILA (a) இளா said...

உங்கள் தொகுப்பும், அறிமுகமும் அருமை. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

 
At July 26, 2006 2:31 AM, Blogger ILA (a) இளா said...

//பலரும் மெழுகுவத்தி எரிவதைப் பார்த்தவர்கள்தாம். அதைக் காண்பது ஒரு வித்தியாசமான அனுபவம். //

இன்னும் இந்த மெழுகுவர்த்தியை என் மனதில் ஏற்றவில்லை. கூடிய விரைவில் படித்துவிடுவேன்.

 
At July 26, 2006 3:04 AM, Blogger நிலா said...

//மற்றவர்களை வேலை வாங்குவதில் உங்களுக்குள்ள திறமை தெரிகிறது :))//

மணியன்

நமக்கு ரிங் மாஸ்டர்னு ஒரு பேர் உண்டுங்க :-)

 
At July 26, 2006 4:05 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள். தமிழோவியம் இன்னும் படிக்கவில்லை. வாரயிறுதியில் படிக்கிறேன்.

 
At July 26, 2006 4:06 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

//வேதிப்பொறியியல் தவிர வேறு எதையும் முறையாகப் பயின்றதில்லை.//

பார்த்து. மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர் வேலயில் இனி சம்பளம் கிடையாதுன்னு சொல்லப் போறாங்க! :)

 
At July 26, 2006 5:27 AM, Blogger நிலா said...

//என்னங்க இவ்வளவு போதுமா? அட்டேங்கப்பா. தலை சுத்துது.
//

இளா

எல்லாமே அரைகுறைன்னு சொல்லிருந்தேனே, பார்த்தீங்கதானே ;-)

 
At July 26, 2006 8:04 AM, Blogger நிலா said...

//உங்கள் தொகுப்பும், அறிமுகமும் அருமை. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்//

நன்றி, இளா

 
At July 26, 2006 11:02 AM, Blogger நிலா said...

//பார்த்து. மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர் வேலயில் இனி சம்பளம் கிடையாதுன்னு சொல்லப் போறாங்க! :)

//

அவங்களுக்கு நம்ம சரித்திரம் தெரியுமில்ல :-)


வாழ்த்துக்கு நன்றி

 
At July 26, 2006 11:45 AM, Blogger மா சிவகுமார் said...

நிலா அக்கா,

உங்கள் முதல் கேள்விக்கு - நான் யார்?

அன்புடன்,

மா சிவகுமார்

 
At July 26, 2006 10:40 PM, Blogger நிலா said...

சிவகுமார்

சுட்டி பார்த்தேன்

நன்றி

அதுசரி, நீங்களும் என்னை அக்கா போட ஆரம்பிச்சாச்சா? :-)

 
At July 27, 2006 8:11 PM, Blogger மா சிவகுமார் said...

காலேஜில நம்ம சீனியர் அக்காதானே :-)

அன்புடன்,

மா சிவகுமார்

 
At July 28, 2006 7:25 AM, Blogger நிலா said...

சிவகுமார்

நான் முதல்ல காலேஜ்ல நுழைஞ்சப்போ சீனியர்ஸை எல்லாம் அக்கான்னுதான் கூப்பிடுவேன் - எங்க ஊர்ல அப்படிதான் பழக்கம். ஆனா ஹாஸ்டல்ல சில சீனியர்ஸ் திட்டி உட்டுட்டாங்க. ஒரே வருத்தமா இருந்தது - அக்கான்னு மரியாதையாதானே கூப்பிடறோம் - அதுக்குப் போய் திட்டறாங்களேன்னு. அப்புறம் மாறியாச்சு...

அதுசரி, என்னை உங்க காலேஜ் சீனியர்னு வேற போட்டு உடைச்சிடீங்க... உங்க வயசை எங்கேயாவது சொல்லி கில்லி வைக்கப்போறீங்க :-)))))

 
At July 28, 2006 1:36 PM, Blogger Udhayakumar said...

//வேதிப் பொறியியலாளர்
மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர்
எழுத்தாளர்
பத்திரிகையாளர்
பத்திரிகையாசிரியர்
குறும்படத் தயாரிப்பாளர்
வானொலி/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
பேச்சாளர்
பாடகி
ஃபோட்டோகிராஃபர்
க்ரஃபாலஜிஸ்ட்
நாட்டியக்காரி
//

அம்மோவ்... பேச்சு வரலை...

 
At July 29, 2006 2:38 PM, Blogger நிலா said...

உதயகுமார்

யாருமே நான் இதிலெல்லாம் 'அரைகுறை' ன்னு எழுதினதைப் படிக்கலையா? :-)

 

Post a Comment

<< Home