pdf security
நண்பர்களே, பி.டி.எஃப் கோப்புகளை ஒரு கணினியில் மட்டும் பயன்படுமாறு வடிவமைப்பது எப்படி என்று யாரேனும் சொல்ல முடியுமா? அதாவது பதிவிறக்கம் செய்யும் பயனாளர் வாசிக்கலாமே ஒழிய விநியோகம் செய்யும் வசதி மறுக்கப்படவேண்டும். தமிழ் வலைபதிவாளர்களில் நிறைய தொழில்நுட்ப வல்லுனர்கள் இருப்பதால் உதவி கிடைக்கும் என நம்புகிறேன்
நன்றி
9 Comments:
இந்த மென்பொருளை முயற்சி செய்து பாருங்கள்.
http://valai.blogspirit.com/archive/2006/12/04/மின்னூல்களை-உருவாக்குவது-எப்படி.html
---------
http://valai.blogspirit.com
தேவையான மென்பொருள் கிடைத்து விட்டதா?
சிந்தாநதி
மன்னிக்கவும்... நீங்கள் தந்த விபரங்களைப் பார்க்க இன்னும் நேரம் அமையவில்லை.
கண்டிப்பாகப் பார்த்துவிட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்
உதவிக்கு மிக்க நன்றி
VOW,
உங்களுக்கும் நன்றி... நீங்கள் குறிப்பிட்டுள்ள மென்பொருளின் விலை அதிகமாக இருக்கிறது. அவர்கள் இலவசமாகத் தருவது நம் தேவையைப் பூர்த்தி செய்யுமா எனத் தெரியவில்லை
கொஞ்சம் ஆராய வேண்டும்
நிலா,
நீங்கள் அடோப் ஸ்டெண்டர்ட் எடிட்டர் விலைக்கு வாங்கினால் அதில் மேலும் நீங்களே எம்.எஸ் வேர்ட் போல பைல்களை உருவாக்கலாம்.
நீங்கள் பாஸ்வேட் கொடுத்து மற்றவர்கள் படிப்பதைத் தடுக்கலாம். அல்லது பிரிண்ட் செய்வதைத் தடுக்கலாம்.ஆனால் இந்த செக்கியூரிட்டிகள் அனைத்தையும் உடைப்பதற்கும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
நிலா கீழ்கண்ட தளத்தில் இருந்து மென்பொருளை தரவிரக்கம் செய்து முயற்சி செய்து பாருங்கள். இதில் பிடிஎப் பைல்களை நேரடியாக பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்க முடியும்.
http://www.verypdf.com/encryptpdf/
நான் குறிப்பிட்டுள்ள இலவச மென்பொருட்களில் பாஸ்வேர்ட் தரும் வசதியுள்ளவை, காகித்த்தில் பிரிண்ட் செய்யாமல் தடுக்கக்கூடியவை உள்ளன.
மகேஸ்
யோசனைகளுக்கு நன்றி. பார்க்கிறேன்
சிந்தாநதி
உங்கள் பதிவு பார்த்தேன். மிகவும் பயனாக இருந்தது.
முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்
நன்றி
Post a Comment
<< Home