கலக்கல் காவ்யா
குழந்தைகளோடு வேலை செய்வது எனக்குப் பிடித்த விஷயம் - வேலை என்றால் கல்லுடைப்பது, செக்கிழுப்பது என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள் :-)
முன்னமே பலமுறை சொல்லியிருப்பது போல அவர்களைப் படம் பிடிப்பது, எழுத வைப்பது, வரைய வைப்பது போன்ற க்ரியேடிவான வேலைகள்.
முதல் முதல் குழந்தைகளுக்காக ஒரு படம் எடுக்கலாமென்று 15 நிமிடத்தில் எழுதிய கதை முகவரி முக்கியம். படமும் பிடித்தோம். நன்றாக நடித்திருந்தார்கள் குழந்தைகள். ஆனால் திருமண வீட்டில் படம்பிடிக்கும் கேமராமேனை குறும்படத்திற்கு உபயோகப் படுத்தினால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது.
அவர் மேல் மட்டும் தப்பு சொல்லி என்ன ப்ரயோஜனம்? இயக்குநரான நமக்கு அந்த டெக்னிகல் அறிவெல்லாம் கிடையாதே! ஹும்... அவ்வளவு வேலை செஞ்சு அதை வெளியிடவே முடியலை.அதனால குறும்படம் எடுக்கற வேலையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டேன். ஒழுங்கா முறையா டைரக்ஷன் படிச்சிட்டு நேரடியா ஏலியன் படம் எடுக்கறதா திட்டம். அட, எவ்வளவு நாளுக்குத்தான் ஹாலிவுட்தான் நம்ம குறிக்கோள்னு சொல்றது. வித்தியாசமா வேற்றுகிரகவாசிகளோட சேர்ந்து படம் எடுக்கறதுதான் நம்ம லெவலுக்கு சரியா இருக்கும் :-)))
அதனால் அவ்வப்போது குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதுவதோடு நிறுத்திக் கொள்வது வழக்கம். கலக்கல் காவ்யா என்ற ஒரு சிறுமியின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சில கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் ஒன்றினை இங்கே காணலாம்:
http://www.nilacharal.com/poonchittu/children_stories/children_story_241.asp
இந்த வரிசையில் பிரசுரமாகாத கதைகள் இன்னும் சில உள்ளன. நிலாச்சாரலில் வெளியிடுவதா அச்சு இதழ்களுக்கு அனுப்புவதா என்று புரியாத குழப்பம் இன்னும். அச்சு இதழ்களுக்கு பரிசீலனைக்கு அனுப்பினால் கிணற்றில் போட்ட கல் போலத்தானே இருக்கிறது! வெறுத்துப் போய்விடுகிறது. அதனால் அநேகமாக நிலாச்சாரலில்தான் வரும்.
கதையைப் படிச்சிட்டுச் சொல்லுங்க... உங்க வீட்டு வாண்டுகளோட கருத்தை சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்
0 Comments:
Post a Comment
<< Home