ப.ம.க - வ.வா.ச அண்டர் கிரவுண்ட் டீலிங் அம்பலம்!
மக்களே, நலம்தானா?
ரொம்ப நாளாச்சு எழுதி. போன பதிவுக்கு வந்த 20 சொச்சம் பின்னூட்டத்துக்கே பதில் போட முடியலை. ஒரே வேலையப்பா...
அப்பப்ப தமிழ்மணத்தில என்ன நடக்குதுன்னு எட்டிப்பாக்கறதுதான். ப.ம.கவுக்கும் வ.வா.சவுக்கும் சரியான தேர்தல் ஃபைட் போலன்னு நெனச்சு ஏதோ தெரியாத்தனமா வெளாட்டா ஒரு பின்னூட்டம் போடப்போயி எலக்ஷன் கமிஷனரான நம்மையே பிலுபிலுன்னு பிடிச்சிக்கிட்டாங்க... கைப்பு ஸ்டைல்ல 'ஐ'ம் த எஸ்கேப்பு' ஆயிட்டோம்ல:-)
இந்த வாரம் டூ மச்சா வேலை செஞ்சதுல மண்டை காய்ஞ்சு கொத்ஸுக்கு ஒரு ஹலோ சொல்லலாம்னு வழக்கமான அரட்டைக் கச்சேரில நுழைஞ்சா ஒரே ஷாக்க்க்க்க்......
பச்சோந்தி மக்கள் கழகத்தோட பிரதிநிதிகளும் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தளபதிகளும் கொஞ்சி குலாவிக்கிட்டிருக்காங்க அங்கே.... டென்ஷனாப் போச்சி. கேட்டா நம்ம கவுண்டரு கணக்கா 'அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க'ங்கறாங்க. போதாக்குறைக்கு 'உங்களுக்கு ஐக்கிய ராச்சியத்தின் கொ.ப.செவா பதவி தர்றோம். ஜோதியில ஐக்கியமாகுங்க'ன்னு ப.ம.க நம்ம கிட்டேயே சைடு டீலிங் வேற - நம்ம கொள்கையில் குறியா இருக்கறவங்களாச்சே... இப்படியெல்லாம் விழுந்திர்ற ஆளுங்களா?
என்னமோ போங்க, வெளில இந்தக் கட்சிப் பேச்சாளர்கள் பேசறத வச்செல்லாம் நீங்க ஏமாந்து போயிறாதீங்கன்னு அக்கறையா சொல்லத்தானப்பா இந்தப் பதிவு:-)))
(கொஞ்சம் மெதுவா வையப்படாதா :-))))
சரி சரி, நிலவுச் சுடர் போட்டி விபரம் பாத்தீங்களா? இந்த லாங் வீக் எண்டை சோம்பேறித்தனமா கழிக்காம, சுறுசுறுப்பா போட்டிக்குத் தேவையான படைப்புகளை எழுதுங்க. விபரங்கள் இங்கே இருக்குங்கோவ்:
http://www.nilacharal.com/notice/nilacharal_contest.asp
வீட்டில குட்டிப் பிள்ளைகளுக்கேல்லாம் லீவுதானே? அவங்களுக்கும் போட்டி இருக்கு. இங்க பாருங்க:
http://www.nilacharal.com/notice/children_contest.asp
சரி... அப்பறம் பாப்பம்.
மறக்காம பதில் போட்டுப் போங்கப்போவ் :-))