ஜெயாவில் நிலா
சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது ஜெயா டிவி காலை மலருக்காக என்னை நேர்முகம் செய்தார்கள் - எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற வகையில். திங்களன்று வரும்
என்றிருக்கிறார்கள். காலை 7.30 மணிக்கு யோகாவுக்குப் பின் வருமாம். முடிந்தால் பாருங்கள். வேலையை ஒத்திப்போட்டு காத்திருந்து வராவிட்டால் என்னைத் திட்டாதீர்கள்.
வேறொரு நேர்முகத்தில், எனக்கு சிறுகதைகளை விட சுயமுன்னேற்றக் கட்டுரைகள் இலகுவாக வருவதாக ஒரு மூத்த பத்திரிகையாளர் குறிப்பிட்டார். ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி! முதன் முதலாக எழுதும் 'மனசே சுகமா?' தொடர் இப்படி ஒரு பெயரை வாங்கித்தருமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதனை இங்கே காணலாம்:
http://www.nilacharal.com/tamil/success/index.html
எனது சிறுகதைத் தொகுப்பான கருவறைக்கடனுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் பாராட்டு வந்தது. சந்தியா பிரசுரத்தார் பல இடங்களுக்கும் நூலை அனுப்பி இருந்ததை உணர முடிந்தது. நன்றி சொன்னேன்.
இந்தியாவில் பல வலைப் பதிவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறாமல் போனது - குடும்பத்தில் இரு முக்கிய மரணங்கள், எதிர்பாராத சில வாய்ப்புகள், முன்பே ஒப்புக் கொண்டிருந்த சில கடமைகள் என உறங்க, உண்ண நேரமில்லாமல் ஓடிப்போயின 3 வாரங்கள்.
சந்திக்கிறேன் என்று சிறில் அலெக்ஸ், அருள், மணியன் போன்ற சிலருக்கு வாக்குத் தந்திருந்தேன். வாக்குத் தவறியமைக்கு மன்னிக்கவும்.
இந்தியப் பயணத்தில் சேவாலயா மாணவர்களுடன் செலவிட்ட இரு மணி நேரங்கள் மறக்க முடியாதவை. ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பை உணர்ந்தேன். விரிவாக எழுத நேரம் அமையுமென்று நம்புகிறேன்