.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, February 23, 2007

மனவெளி

Your Ad Here

"இது நம்ம சுவாதி இல்லைங்க... நம்ம புள்ளையத் தொலைச்சிட்டோம்." அழுகையூடே பேசினாள் காந்திமதி.

"என்னவானாலும் சாப்பிட்டுப் பேசிக்கலாம், காந்தி. எழுந்து சாப்பிடு. பட்டினி கிடந்தா உன் உடம்புக்கு ஒத்துக்காது" சிவராமன் ஆதரவாய்ச் சொன்னார்.

"மனசே ஆறமாட்டேங்குதுங்க... எல்லாத்துக்கும் எதுத்து எதுத்துப் பேசறா. போனா போகுதுன்னு விட்டா இப்படி சாமி காரியத்திலயும் சொன்ன பேச்சு கேக்க மாட்டேன்னா என்ன பண்ண முடியும் சொல்லுங்க... அவளுக்கு ஏதாவது ஆகிறக்கூடாதுன்னுதானே சொல்றேன்" .... மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 22, 2007

மனசே சுகமா?

Your Ad Here

நாம் மகிழ்ச்சியாக இல்லாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

"போதுமான பணம் இல்லை"
"மாமியார் கொடுமை"
"கல்யாணம் ஆகவில்லை"
"வேலை பிடிக்கவில்லை"
"என்னை யாருக்கும் பிடிக்கவில்லை"

பொதுவாக, இப்படி நமக்கு அப்பாற்பட்ட ஏதாவதொரு காரணம்தானிருக்கும். அதாவது நமக்கு வெளியிலுள்ள ஏதேனும் ஒன்றில்தான் நமது மகிழ்ச்சி இருப்பதாக நினைப்போம். 'மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது' என்று எத்தனையோ மகான்கள் எவ்வளவோ விதங்களில் சொன்னாலும் அவையெல்லாம் வெறும் தத்துவக் குப்பைகளாகவே நமக்குப் படுகின்றன.
இந்த சிறிய பயிற்சியை செய்து பாருங்கள்: மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.