.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, January 22, 2007

நீங்கள் மகானாக முடியுமா?

Your Ad Here

ஒரு கட்டுரைக்காக உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன, நண்பர்களே! கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தால் மகிழ்வேன் - இதில் சரி தவறு என்றுமில்லை என்பதை அறிவீர்கள்தானே! ஒவ்வொரு தனிமனிதரின் அனுமானத்தையும் அறிவதுதான் நோக்கம். பொதுவில் பதிலெழுத விருப்பமில்லை என்றால் எனக்கு nila at nilacharal dot com -க்கு எழுதுங்கள்

மகான் என்பவர் யார்?

ஒருவரை மகான் அல்லது ஆன்மிக குரு என எப்போது ஏற்றுக் கொள்கிறோம்?

மகானுக்கும் குருவுக்கும் வேறுபாடுகளுண்டா?மகான்/ குருவின் குணநலன்கள் என்ன?

மகான்/ குருவிடம் உங்களின் எதிர்பார்ப்பென்ன?மகான்/குரு மதசார்பானவரா?

மகான்/குரு மூலம் அற்புதம் ஏதேனும் கண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அற்புதம் செய்பவரெல்லாம் மகான்/குரு என நினைக்கிறீர்களா?

மகான்/குரு ஆக ஒருவர் முயற்சி செய்தால் அது சாத்தியப்படுமா அல்லது அதனை வரம் என எண்ணுகிறீர்களா?

உங்களுக்கு மகானாக/குருவாக விருப்பமுண்டா?

மகான்/ குரு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் எப்படி?

தலைவிதியை நம்புகிறீர்களா?

உதவிக்கு நன்றி நண்பர்களே!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, January 19, 2007

கலக்கல் காவ்யா

Your Ad Here

குழந்தைகளோடு வேலை செய்வது எனக்குப் பிடித்த விஷயம் - வேலை என்றால் கல்லுடைப்பது, செக்கிழுப்பது என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள் :-)

முன்னமே பலமுறை சொல்லியிருப்பது போல அவர்களைப் படம் பிடிப்பது, எழுத வைப்பது, வரைய வைப்பது போன்ற க்ரியேடிவான வேலைகள்.
முதல் முதல் குழந்தைகளுக்காக ஒரு படம் எடுக்கலாமென்று 15 நிமிடத்தில் எழுதிய கதை முகவரி முக்கியம். படமும் பிடித்தோம். நன்றாக நடித்திருந்தார்கள் குழந்தைகள். ஆனால் திருமண வீட்டில் படம்பிடிக்கும் கேமராமேனை குறும்படத்திற்கு உபயோகப் படுத்தினால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது.

அவர் மேல் மட்டும் தப்பு சொல்லி என்ன ப்ரயோஜனம்? இயக்குநரான நமக்கு அந்த டெக்னிகல் அறிவெல்லாம் கிடையாதே! ஹும்... அவ்வளவு வேலை செஞ்சு அதை வெளியிடவே முடியலை.அதனால குறும்படம் எடுக்கற வேலையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டேன். ஒழுங்கா முறையா டைரக்ஷன் படிச்சிட்டு நேரடியா ஏலியன் படம் எடுக்கறதா திட்டம். அட, எவ்வளவு நாளுக்குத்தான் ஹாலிவுட்தான் நம்ம குறிக்கோள்னு சொல்றது. வித்தியாசமா வேற்றுகிரகவாசிகளோட சேர்ந்து படம் எடுக்கறதுதான் நம்ம லெவலுக்கு சரியா இருக்கும் :-)))

அதனால் அவ்வப்போது குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதுவதோடு நிறுத்திக் கொள்வது வழக்கம். கலக்கல் காவ்யா என்ற ஒரு சிறுமியின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சில கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் ஒன்றினை இங்கே காணலாம்:

http://www.nilacharal.com/poonchittu/children_stories/children_story_241.asp

இந்த வரிசையில் பிரசுரமாகாத கதைகள் இன்னும் சில உள்ளன. நிலாச்சாரலில் வெளியிடுவதா அச்சு இதழ்களுக்கு அனுப்புவதா என்று புரியாத குழப்பம் இன்னும். அச்சு இதழ்களுக்கு பரிசீலனைக்கு அனுப்பினால் கிணற்றில் போட்ட கல் போலத்தானே இருக்கிறது! வெறுத்துப் போய்விடுகிறது. அதனால் அநேகமாக நிலாச்சாரலில்தான் வரும்.
கதையைப் படிச்சிட்டுச் சொல்லுங்க... உங்க வீட்டு வாண்டுகளோட கருத்தை சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, January 10, 2007

உலகப் போரை நிறுத்தியிருக்கலாமோ?

Your Ad Here

1914ம் ஆண்டு பெல்ஜியத்தின் மேற்கு முனையில் போரிட்டு வந்த ப்ரிட்டிஷ் - ஜெர்மன் படைகள் கிறிஸ்துமஸ் அன்று போரை நிறுத்திவிட்டு, ஒன்றாகக் கொண்டாடினார்களாம். இந்த நிகழ்வு குறித்து பல வீரர்கள் தங்கள் குடும்பங்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கூப்பர் என்ற பிரிட்டிஷ் வீரர் டிச.27 ,1914 அன்று எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

நான் சொல்வதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை.... மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 08, 2007

எனது முதல் நூல் (கருவறைக் கடன்) வெளியீடு

Your Ad Here

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான கருவறைக்கடன் சமீபத்தில் சந்தியா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் மதுமிதாவின் முழுமுயற்சியே இந்தப் புத்தகம் வெளிவரக் காரணம். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாலனின் முகவுரையிலிருந்து சில வரிகள்:

அந்தக் கதைகள் பெரும்பாலும் தமிழ்மண்ணின் மாந்தர்களைப் பற்றிய கதைகள்.அந்தக் கதைகள் விவாதிக்கிற விஷயங்களும் தமிழ்ச் சமூகத்திற்குரியவைதான்.....

....

நிலாவின் கதைகளில் பேசப்படுகிற அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதைப் போலவே அவரது கதைகளும் விவாதிக்கப்பட வேண்டும்.அது எதிர்வரும் காலத்தில் சாத்தியமாக வாழ்த்துகிறேன்.

வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிற கதைகள் இவை. என்னை பொறுத்தவரை சக மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்கிற கதைகள் எல்லாமே நல்ல கதைகள்தான். இதுதான் இலக்கியத்தின், நல்ல எழுத்தின் அடிப்படை. மற்ற எதுவும் முக்கியமல்ல.


வாஸந்தி அவர்களின் முன்னுரையிலிருந்து:

தென் தமிழகத்தில் பிறந்த நிர்மலாவுக்கு அதன் காற்றும் மணமும் மொழியின் காந்தமும் கிறக்கத்தை உண்டுபண்ணுவதாகத் தோன்றுகிறது. வட்டார வழக்கு மொழி சில கதைகளில் உபயோகிக்கையில் மிக லாகவமாக வெளிப்படுகிறது. குலதெய்வம்,நிலச்சுமையென, மெய்ப்பொருள் ஆகிய கதைகள் நல்ல உதாரணங்கள். ஒரு கவிதை நடையோடு அந்த மண்ணிற்கு விசேஷமான நயமும் பெருந்தன்மையும் பாத்திரங்களில் வெளிப்படுகிறது. அந்த மொழிக்கு எந்தப் பத உரையும் தேவை இல்லை. நிலாவுக்குக் கூர்மையான பார்வையும் மனித நேய கனிவும் இருக்கின்றன. அதோடு மொழி வன்மையும் சொற்களைக் கையாளும் ற்றலும் இருக்கின்றன. ஒரு நல்ல கதை சொல்லிக்கு இவையே உபகரணங்கள்.


நூலின் முகப்பை இங்கே காணலாம்:

http://www.nilacharal.com/tamil/images/wrapper.jpg

இணையம் மூலம் வாங்க விரும்பினால் இங்கே செல்லுங்கள் (தமிழ்நாட்டில் இலவசமாக டெலிவரி செய்கிறார்கள்):

http://www.anyindian.com/product_info.php?cPath=1_49&products_id=13396

சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றால் சந்தியா பதிப்பகத்தாரின் ஸ்டாலில் நூலைப் பெறலாம்

தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.